Saturday, October 30, 2021

பூமி சுழல..தயங்கும்போது..?



அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரோஜர் பில்ஹாம், மோன்டனா பல்கலைக் கழக ஆராச்சியாளர் பெபேக்கா பெண்டிக், ஆகியோர் நிலநடுக்கம் (earth quake) தொடர்பாக ஓர் ஆய்வினை மேற்கொண்டனர். அதில் கடந்த கால நிலநடுக்கங்களையும் அவை ஏற்பட்ட சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்தனர். இதில் பூமி சுற்றி வரும் வேகத்திற்கும், தினசரி நாள் அளவிற்கும், தொடர்பு இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். 

பூமியின் சுழற்சிவேகம் எப்பொழுதெல்லாம் குறைகிறதோ அப்போதெல்லாம் நிலஅதிர்வுகள், நிலநடுக்கங்கள் அதிகரிகின்றன. பூமியின் சுழற்சிவேகம் வழக்கத்தைவிட மைக்ரோ(micro)மில்லி செகண்டுகளே குறைகின்றன. இருப்பினும் அதன் தாக்கத்தால் சக்தி வாய்த்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பூமத்திய ரேகைப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் இதுபோன்ற நில நடுக்கங்கள் அதிகம் உண்டாகின்றன. 

நில அதிர்வு 
பூமியின் சுழற்சி வேகத்திற்கும், நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கும் உள்ள தொடர்பை ஆணித்தரமாகத தீர்மானிக்க முடியாவிட்டாலும், அது ஓரளவு உண்மை. அதேபோல, குளிர்காலங்களில் பகல் பொழுதுகள் குறையும்போதும் இதுபோன்ற நில நடுக்கங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன. இனிவரும் காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்.

 கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட எல்லா நிலநடுக்கங்களை ஆய்வு செய்ததில் 2018 - மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் ஐந்தாறு ஆண்டுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக ஆராய்சியாளர்கள் தெரி விக்கின்றனர். இந்த ஆய்வு முடிவு புவியியல் (geology) ஆராய்சியாளர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 
                              
   தமிழ் உத்தம்சிங்    

Colorado University researcher Roger Billham and Montana University Professor Bebecca Bentick have conducted a study on the earthquake that examined past tornadoes and possibilities. They found that the earth was in contact with the speed and the daily dose. Earth's cycling speed occasionally occurs when the earth vibrations and the tidal tics increase. The rotation speed of the planet decreases the micro milliseconds more than usual. Nevertheless, its impact is caused by tidal tics. Such terrestrial tics are becoming more common in countries on the equator. Although it is not possible to determine the connection between the rotational speed of the Earth and the tidal tics, it is somewhat true. Likewise, during the winter months, such landslides have occurred. Such incidents will happen in the future.Investigators see the possibility of potential earthquakes in 2018 and fifty years following the study of the tornadoes of the mixed 6 years . The results of this study are being discussed among geologist researchers.    

No comments:

Post a Comment