Thursday, August 12, 2021

ஏன் பார்ப்பனர்கள் பூண்டு, வெங்காயம் சாப்பிடுவதில்லை .?


''நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை; அதனால் விலை உயர்வு ஒரு பொருட்டே இல்லை. நான் பூண்டு, வெங்காயம் சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள்“ என்றார் நிர்மலா சீதாராமன்.

உடல் ஏற்றுக் கொள்கிறதா, ருசி பிடிக்கிறதா என்பதைப் பொருத்து ஒரு பொருளை ஒருவர் விரும்பி உண்பதும், வெறுத்து ஒதுக்குவதும் அவரவரவர் தனிப்பட்ட உரிமை. அதில் தலையிட வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. இதைத்தான் சாப்பிட வேண்டும்; இதைச் சாப்பிடக் கூடாது என யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

ஆனால், “நானோ எனது குடும்பமோ வெங்காயம் சாப்பிடுவதில்லை” என்று நிர்மலா சீதாராமன்  சொல்வதன் பொருள் என்ன? வெங்காயம் சாப்பிடுபவன் இழிவானவன். சாப்பிடாத நாங்கள் உயர்வானவர்கள். அதனால்தான் அவரது பேச்சில் ஆணவம் தொனிக்கிறது. தான் விரும்பாத ஒரு பொருளை மற்றொருவர் சாப்பிடும் போது அவரை ஏளமாகப் பார்க்கும் பார்ப்பனியப் பார்வையின் வெளிப்பாடு இது.

தனிப்பட்ட முறையில் அவருக்கு வெங்காயத்தின் ருசி பிடிக்கவில்லை, உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அவரது கூற்றை ஏற்கலாம். ஏன் அவரது குடும்பமே பூண்டு, வெங்காயத்தை சாப்பிடுவதில்லை? அந்தக் குடும்பத்தில் ஒருவருக்குக்கூடவா பூண்டு, வெங்காய ருசி பிடிக்கவில்லை அல்லது உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை?

“இதுவரை வெங்காயத்தின் ருசியையே பார்த்ததில்லை, வெங்காயம் பயன்படுத்தாத எனக்கு அதன் விலையைப் பற்றி எப்படித் தெரியும்?” என நிர்மலாவுக்கு ஆதரவாக ஜால்ரா அடித்தார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்வினி சௌபே. 

நிர்மலா சீதாராமன் ஒரு பார்ப்பனர் என்பது ஊரறிந்த ஒன்று. கன்யாகுப்ஜ என்ற வகை, பார்ப்பனர்களில் பத்து பிரிவுகள் உண்டு. அதில் ஒரு பிரிவுதான் சௌபே பார்ப்பனர்கள். இந்த இருவரின் கூற்றிலிருந்து தெரிவது என்ன? பார்ப்பனர்கள் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை என்பதுதான்.

நிர்மலாவின் ஆணவப் பேச்சுக்கு நெட்டிசன்கள் அவரைத் திட்டித் தீர்க்கின்றனர். ஆனால் இது பற்றி நிர்மலா கவலைப்படப் போவதில்லை. காரணம் அவர் ஒரு சனாதனி. சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்கள் வெங்காயம் பூண்டு சாப்பிடக் கூடாது என்கிறது பார்ப்பன இந்து மத சாஸ்திரங்கள்.

வெங்காயம், பூண்டு தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் என சிவ புராணம் (7.10.12) கூறுகிறது. தர்ம நெறிகளைக் கடைபிடிப்பவர்கள் வெங்காயம், பூண்டைத் தவிர்க்க வேண்டும் என பத்ம புராணம் (4.56), ஹரி பக்தி விலாஸம் (8.158) ஆகிய வேத சாஸ்திரங்கள் தெளிவாக உரைக்கின்றன. வெங்காயம், பூண்டு உண்பவர்கள் பரிகாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கருட புராணம் (1.96.72) கூறுகிறது.

மீறி சாப்பிட்டால் என்னவாகும்? வேதம் ஓதாத பார்ப்பானும், ஆசாரத்தை கைவிடும் பார்ப்பானும், பூஜை காரியங்களை கைவிடும் பார்ப்பானும், சாப்பிடத்தகாததை சாப்பிடும் பார்ப்பானும் செத்துத் தொலைவார்கள் என்கிறது பார்ப்பன இந்து மதத்தின் சட்ட நூலான மனு தரும சாஸ்திரம். (மனு:5-4)

வெங்காயம், பூண்டு இவைகளைப் பார்ப்பனர்கள் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால், சாப்பிட்ட உடனே கெட்ட சாதி ஆகிவிடுகிறார்கள். (out caste). (மனு: 5-5, 6). அதாவது வெங்காயம், பூண்டு சாப்பிடும் பார்ப்பனர்கள், பார்ப்பனத் தன்மையை இழந்து விடுகிறார்கள். பார்ப்பனத் தன்மையை இழப்பதும் செத்துப் போவதும் ஒன்றுதானே! இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் தங்களது தருமத்தை அதாவது பார்ப்பனியத்தைக் காப்பதில் தெளிவாகத்தான் இருக்கின்றனர். அதனால்தான் வெங்காய விலை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

Why don't people eat garlic and onions?

I don’t eat onions; So inflation is not an end in itself. I come from a family that does not eat garlic and onions, ”said Nirmala Sitharaman.

It is the individual's prerogative to choose what he likes and dislikes, depending on whether the body accepts or tastes it. No one else has the authority to interfere. This is what should be eaten; No one can force anyone not to eat this.

But what does Nirmala Sitharaman mean when she says, "Nano and my family do not eat onions"? The onion eater is despicable. We who do not eat are superior. That is why his speech sounds arrogant. It is the expression of a paranoid view that makes another person look down on him when he eats something he does not like.

Personally he can accept his claim if he does not like the taste of onion and does not agree with the body. Why doesn't his family eat garlic and onions? Does anyone in that family not like the taste of garlic or onion or dislike it physically?

"I have never seen the taste of onion before. How do I know the price of onion when I do not use it?" BJP MP from Uttar Pradesh Ashwini Chaubey hit Jhalra in support of Nirmala. Nirmala Sitharaman is a barber. There are ten divisions of the Barbhans, the type of Kanyakupja. One of them is the Soubey Barbarians. What is clear from the statement of these two? The fact is that the barbarians do not eat onions and garlic.

Netizens plot Nirmala's arrogant speech. But Nirmala is not going to worry about this. Because he is a Sanathani. According to the Hindu scriptures, those who follow the Sanatana Dharma should not eat onions and garlic.

Shiva Purana (7.10.12) says that onion and garlic are foods to be avoided. The scriptures of Padma Purana (4.56) and Hari Bhakti Vilasam (8.158) clearly state that those who follow the Dharma norms should avoid onions and garlic. Garuda Purana (1.96.72) says that those who eat onions and garlic should make amends.

What happens if you overeat? According to the legal scriptures of Barbana Hinduism, the one who does not read the scriptures, the one who abandons rituals, the one who abandons worship and the one who eats what is not edible will die. (Petition: 5-4)

Onions and garlic should not be eaten by onlookers. If eaten in excess, they become a bad caste immediately after eating. (out caste). (Petition: 5-5, 6). That is, people who eat onions and garlic lose their vision. Loss of vision and dying are one and the same! For two thousand years they have been clear in preserving their charisma. That is why the price of onions is not an issue for them. 


No comments:

Post a Comment