Monday, August 16, 2021

நாய்கறி உண்ண ஒரு திருவிழா எங்கே..?

நாய்கறி உண்ண
ஒரு திருவிழா எங்கே..? 
GK.ARIVU - Aug 16, 2021


Where is a dog curry festival?

சீனாவில் நாய்கறி திருவிழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலின் நகரில் ஆண்டுதோறும் நாய்கறி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் இந்த திருவிழாவில் பலியிடப்படும் விலங்குகள். 

இந்த ஆண்டு யூலின் நாய்கறி திருவிழா வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. சுமார் ஒரு வாரம் இந்த நாய்கறி திருவிழா படு பயங்கரமாக நடைபெறும். இந்த திருவிழாவில் நாய்கள் உயிருடன் விற்பனை செய்யப்படும். விற்பனை செய்யப்படும் நாய்கள் அங்கேயே வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 

கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. சீனாவில் கோடைகாலங்களில் நாய் கறிகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது சீனர்கள் நம்புகின்றனர். 

ஏன் இந்த திருவிழா?

சீனாவின் குஹாங்சி என்ற மாகாணத்தில் வாழும் யூலின் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், ஆவிகள் மற்றும் கொடிய நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, 2010 ஆம் ஆண்டிலிருந்து நாய் கறித் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். உலகிலேயே மிகவும் முட்டாள்தனமான ஓர் திருவிழா என்றால், அது இந்த திருவிழாவாகத் தான் இருக்க முடியும்.

சீனாவில் நாய் திருவிழா ஒரு சட்டவிரோதமான செயல் இல்லை. மேலும்

சீனாவில் எந்த ஒரு விலங்குகள் நலத்துறையும் இல்லாததால், அங்குள்ள மக்கள் எந்த ஒரு விலங்குகளையும் உட்கொள்கின்றனர். மேலும் லாரிகளில் ஆயிரக்கணக்கான நாய்களை யூலின் சமுதாயத்தினர் திருடும் போதும் சீன அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது தான் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

அதேபோல் தங்களது பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தும் நாய்களை, பூனைகளை பலியிடுதலும் அரங்கேறி வருகின்றன.
ஆனால் இத்திருவிழாவில் விற்பனை செய்வதற்காகவே நாய்கள் திருடப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அத்துடன் மிக கொடூரமான முறையில் கூண்டுகளில் அடைத்து யூலினுக்கு நாய்கள் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, நாய்கள் மட்டுமில்லாமல் பூனைக்கறியும் இந்த திருவிழாவில் கிடைக்கும். இத்திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விலங்குகள் நல ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் எதைபற்றியும் கவலைப்படாமல் நாய்கறி திருவிழாவுக்கு சீனர்கள் தயாராகி வருகின்றனர். 

எனவே இந்த மாமிச  விழாவில் பலியிட 10 ஆயிரம் நாய்கள் தயாராக உள்ளதாம். இதற்காக நாய்கள் பெருமளவில் திருடப்பட்டு யூலின் நகருக்கு கூண்டுகளில் அடைத்து கொண்டு வரப்பட்டுள்ளன.


Where is a dog curry festival?

More than 10,000 dogs are planned to be slaughtered for meat at a dog festival in China.

The annual dog festival is held in Yulin, Guangxi Province, China.  The festival has been strongly opposed by animal welfare activists around the world.  This is because of the animals sacrificed at this festival.

This year’s Yule Dogfight Festival kicks off on the 21st.  For about a week this doggy festival will take place in a terrifying way.  Dogs will be sold alive at the festival.  Dogs for sale can be slaughtered there or roasted alive and given to customers for free as meat.

The festival has been going on for the last 10 years.  The Chinese believe that eating dog curries in the summer in China is good for the body.

Why this festival?

People from the Yulin community living in China's Guangxi province have been enthusiastically celebrating the Dog Curry Festival since 2010 to protect themselves from spirits and deadly diseases.  If there is one festival in the world that is the most stupid, it could be this festival.

The dog festival in China is not an illegal act.  Further

Since there is no animal welfare in China, the people there consume no animals.  And the Chinese government is having fun watching the Yule community steal thousands of dogs in trucks.As well as sacrificing dogs and cats depending on their traditional beliefs are also taking the stage.

But animal welfare activists accuse the dogs of being stolen for sale at the festival.

It is also alleged that the dogs were brutally locked up in cages and brought to Yulin.  Likewise, not only dogs but also cat food will be available at this festival.  Animal welfare activists have been campaigning on social media to demand a ban on the festival.  But the Chinese are getting ready for the doggie festival without worrying about anything.

So 10 thousand dogs are ready to be sacrificed in this meat festival.  For this purpose the dogs were largely stolen and brought in cages to the city of Yulin.

No comments:

Post a Comment