கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018 ஆம் ஆண்டு இதே நாளில்தான் காஜா புயல் கரையைக் கடந்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 81,000 பேர் 471 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
- புயல் வீசிய மாவட்டங்களில் மின்சார வினியோகமும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.
- திருச்சிக்கு வரவேண்டிய வானூர்திகள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய வானூர்திகள் இரத்து செய்யப்பட்டன, அல்லது கால தாமதமாக புறப்பட்டன. தொடர்வண்டிகள் இரத்து செய்யப்பட்டன அல்லது ஒரு குறிப்பிட்ட தடத்தில் இயக்கப்படவில்லை.
- புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த 16 நவம்பர் அன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெருங்காற்றும், கனமழையும் ஏற்பட்டன. இதன் காரணமாக அரியலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், நாகை, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர்ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment