அமேசான் பிரைமில் தீபாவளிக்கு முன்பாக நவம்பர் 2ந் தேதி வெளியானத் திரைப்படம் ஜெய்பீம்
காவல்துறை அராஜகத்தின் கோரப் பக்கங்கள் இதற்குமுன்னும் பல திரையில் வந்திருக்கின்றன. ஆனால் கல்வியோ பிற வசதிகளோ இன்னமும் பெரிதாய்ப் போய் சேர்ந்திடாத ஒரு சமூகத்தை காக்கிகள் தனது காலால் நசுக்கியதை திரையில் சொல்லியிருப்பது இதுவே முதல்முறை. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தை அனைத்து தரப்பு மக்களின் பாராட்டை பெற்றது.
இப்படத்திற்கு ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், வன்னியர் சமூகத்தை தவறாக சித்தரித்து காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்
சூர்யாவுக்கு ஆதரவு
இந்த விவகாரத்தில் சூர்யாவிற்கு ஆதரவாக பா.ரஞ்சித், பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், கருணாஸ் என ஒட்டுமொத்த திரைத்துறையும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதேசமயம் சூர்யாவுக்கு எதிராகவும், சமூக வலைதளங்களில் பதிவாகி கருத்துக்கள் பரவி வருகிறது இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதனால், நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு 5 ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், நடிகர் சூர்யாவிற்கென்று தனியாக 2 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சூர்யா செல்லும் இடங்களுக்கெல்லாம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உடன் சென்று பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மனமார்ந்த நன்றி
இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், அன்பர்களே, ஜெய்பீம் மீதான இந்த அன்பு அலாதியானது. இவ்வளவு அன்பை நான் இதுவரை பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி. என பதிவிட்டுள்ளார்.
இடைவிடாமல் நன்றி
சூர்யா அனைத்து ட்வீட்டுகளுக்கும் பல மணிநேரமாக இடைவிடாமல் நன்றி சொல்லி வருகிறார். சூரி இந்த படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து இருந்தார். அவருக்கு நன்றி கூறியுள்ள சூரியா, இன்னொரு ஹீரோ கிட்டேந்து வாழ்த்து வாங்குவது சந்தோஷமா இருக்கு என்று கூறியுள்ளார். அதேபோல பல ட்விட்டகளுக்கும் சூர்யா நன்றி கூறியுள்ளார்.
Very good mannerisms
ReplyDeleteThanks sir
Delete