இந்நிலையில் பிசிசிஐ சார்பில் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப்பட்டியல் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. அதில், வழக்கமான உணவுகளைத் தவிர்த்து சில முக்கியமான கட்டுப்பாடுகளை பிசிசிஐ வீரர்களுக்கு விதித்துள்ளது. இதன்படி, வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி எந்த வடிவத்திலும் சாப்பிடக்கூடாது, அவர்கள் உணவுப்பட்டியலில் வரக்கூடாது எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.
அதேநேரம், வீரர்களுக்கு வழங்கப்படும் இறைச்சி உணவுகள் அனைத்தும் ஹலால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக தனியார் ஆங்கில சேனல்ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வீரர்களுக்கு உடற்தகுதி மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதால், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. யோ-யோ பரிசோதனைக்குச் செல்லும் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடும்போது தேவையற்ற சதைப்பிடிப்புகளால் பயிற்சியில் தோல்வி அடையலா் என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
அதேசமயம், பிசிசிஐ சார்பில் வீரர்களுக்கான உணவுப்பட்டியல் குறித்த கட்டுப்பாடுகள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. வீரர்களின் உணவு உரிமை தனிப்பட்ட உரிமை இதில் பிசிசிஐ தலையிடுவது எவ்வாறு சரியாகும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
No comments:
Post a Comment