பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..
கடலோரங்களில் மக்கள் பார்க்கும் சில அரிய காட்சிகள்
நல்லது மற்றும் கெட்டது போன்ற ஆச்சரியங்களை நம் பூமி சமமாய் கொண்டுள்ளது என்பதை இது போன்ற சம்பவங்கள் நிரூபிக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும், கடற்கரைகளில் பல விசித்திரமான விஷயங்களை மனிதர்கள் இப்போது காண்கின்றனர். சில கடற்கரைகள் இப்போது குப்பைமேடாக மாறிவருவதும் வேதனை அளிக்கிறது. இருப்பினும் சில நேரங்களில், கடலோரங்களில் மக்கள் பார்க்கும் சில அரிய காட்சிகள் அவர்களின் மனதை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. ஆழ்கடலில் பலவிதமான அரிய வகை உயிரினங்கள் உள்ளது என்பது நமக்குத் தெரியும்.
ஆழ்கடலில் கும் இருட்டில் வாழும் சில பயங்கரமான ஆழ்கடல் உயிரினங்கள்
இன்னும் பல ஆழ்கடல் உயிரினங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை மனிதன் முழுமையாகக் கண்டறியவில்லை என்பதே நித்தசனமான உண்மை. சில ஆழ்கடல் உயிரினங்கள் உங்கள் மனதைக் கவரும் வகையில் காட்சியளிக்கிறது என்றாலும் கூட, ஆழ்கடலில் கும் இருட்டில் வாழும் சில ஆழ்கடல் உயிரினங்கள் உங்கள் மனதை உறைய வைக்கும் வகையில் காட்சியளிக்கிறது. அப்படியான ஒரு உயிரினம் தான் இந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'. ஆழக்கடல் மான்ஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த உயிரினம், இப்பதில் சான் டியாகோ பகுதியில் உள்ள டோரே பைன்ஸில் உள்ள பிளாக்ஸ் கடற்கரையில் காணப்பட்டுள்ளது.
தூரத்தில் பார்த்தால் ஜெல்லி மீன்.. அருகில் பார்த்தல் ஆழக்கடல் மான்ஸ்டர்
வெளியான அறிக்கைகளின்படி, ஜெய் பெய்லர் என்பவர் கடந்த நவம்பர் 13 ஆம் தேதி அன்று மாலை கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது, பயமுறுத்தும் மீன் ஒன்றைக் கண்டதாகக் கூறியுள்ளார். அந்த மர்ம உயிரினம் ஒரு ஜெல்லிமீன் என்று பெய்லர் தூரத்தில் இருந்து பார்த்தபோது நினைத்திருக்கிறார். ஆனால், அவர் அந்த இடத்தை நெருங்க நெருங்க, அது முற்றிலும் வேறு ஏதோ ஒன்று என்பதை அறிந்திருக்கிறார். அருகில் சென்று பார்த்தபோது அது இதுவரை யாராலும் பார்த்திராத பயமுறுத்தும் மீன் என்பதை உணர்ந்தார்.
இணையத்தில் வைரல் ஆனா மீனின் புகைப்படம்
வீட்டிற்குச் செல்வதற்கு முன், அவர் அந்த ஆழக்கடல் மான்ஸ்டர் உயிரினத்தின் உடலை மூன்று படங்கள் எடுத்துள்ளார். இதை கிளிக் செய்த சில மணிநேரத்தில் அவர் அந்த புகைப்படத்தை அவரின் நண்பர்கள் மற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் புகைப்படங்களை அனுப்பிய பிறகு, அந்த உயிரினம் பசிபிக் கடலின் ஆழ்கடலில் காணப்படும் அரிய வகை மான்ஸ்டரான புட்பால் மீன் என்பதை அவர் கண்டுபிடித்திருக்கிறார். இந்த ஆழ்கடல் ராட்சசன் கடற்கரைக்கு எப்படி வந்தது என்ற காரணம் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.
அறிவியல் ரீதியாக ஹிமாண்டோலோபிடே என்று அழைக்கப்படும் இந்த புட்பால் மீன்கள், கடலின் 3,000 அடி முதல் 4,000 அடி ஆழமுள்ள நீரில் வாழ்வதாக அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்களின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நீரில் இந்த புட்பால் மீன்கள் காணப்படுகின்றது. இந்த மீன் முதன்முதலில் 1837 ஆம் ஆண்டில் விலங்கியல் பேராசிரியரான ஜோஹன் ரெய்ன்ஹார்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி போன்ற கூர்மையான பற்கள்
பெய்லர் கிளிக் செய்த புகைப்படங்கள் ஆழ்கடல் மான்ஸ்டர் உயிரினம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கத்தி போன்ற கூர்மையான பற்கள், அதன் பக்கங்களில் கூர்முனை மற்றும் அதன் நெற்றியில் இருந்து ஒரு நீண்ட உறுப்பு நீண்டுள்ளதைப் புகைப்படம் தெளிவாகக் காண்பிக்கிறது. 'இதுபோன்ற எதையும் நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. முதலில், இது ஒரு ஜெல்லிமீன் அல்லது ஏதோ ஒன்று என்று நான் நினைத்தேன், பின்னர் நான் சென்று அதை இன்னும் கொஞ்சம் கவனமாகப் பார்த்தேன், இது மிகவும் அசாதாரணமான மீன் என்பதை நான் பார்த்தேன்' என்று பெய்லர் கூறியுள்ளார்.
இரத்தக்களரியாகத் தோன்றிய மீனின் வாய்
இந்த மீனின் வாய் கிட்டத்தட்ட இரத்தக்களரியாகத் தோன்றியுள்ளது, உள்ளூர் சேனல் இந்த உயிரினத்தின் படங்களை ஸ்கிரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓசியானோகிராஃபி விஞ்ஞானிகளுக்கு அனுப்பியது. 'இது ஆழ்கடலில் உயிர் வாழும் பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும், மேலும் இது கலிபோர்னியாவில் சில முறை மட்டுமே இதுவரை காணப்பட்டுள்ளது. ஆனால், இது பசிபிக் பெருங்கடல் முழுவதும் காணப்படுகிறது' என்று ஸ்கிரிப்ஸில் உள்ள கடல்வள ஆராய்ச்சி மற்றும் சேகரிப்பு மேலாளர் பென் ஃப்ரேபிள் கூறியுள்ளார்.
இதற்கு முன் இந்த புட்பால் மீன் எப்போது கரையில் பார்க்கப்பட்டது
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கலிபோர்னியா கடற்கரையில் இதேபோன்ற மற்றொரு புட்பால் மீன் கரை ஒதுங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. குட்டையான பற்கள் மற்றும் கால்பந்து போன்ற உடலுடன் முற்றிலும் கருப்பு நிறத்தில் அந்த மீன் காட்சி அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது காணப்பட்ட மீனின் நீரும் சற்று வெளிறி இருந்தது என்று கூறப்படுகிறது. முந்தைய புட்பால் மீன் லகுனா கடற்கரையில் உள்ள கிரிஸ்டல் கோவ் ஸ்டேட் பூங்காவின் கடல் பாதுகாக்கப்பட்ட பகுதியின் கரையில் கண்டுபிடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment