வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.. மாவட்ட ரீதியாக பார்க்கும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் வறுமை அதிகரித்துள்ளதாக புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.
2015-ல் மத்திய திட்டக்குழுவை கலைத்துவிட்டு, நிதி ஆயோக் அமைப்பை ஏற்படுத்தியது மத்திய பாஜக அரசு.. வறுமைக்கோடு என்பதை வெறும் உணவு என்ற விஷயத்தை கொண்டே இத்தனை காலமும் பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக பாஜக அரசு இதற்கான கண்ணோட்டத்தை மாற்றியது..
இந்த அறிக்கையை வெளியிடுவதன்மூலம் அதிகமான ஏழைகள் கொண்ட மாநிலங்கள் எது? வறுமை ஒழிப்பில் முதன்மை பெறும் அல்லது பின்தங்கிய மாநிலங்கள் எவை என்பதையும் எளிதாக மக்களால் தெரிந்து கொள்ள முடிகிறது.. இது வறுமையை ஒழிக்கும் முயற்சிக்கும் அந்தந்த மாநில அரசுகளுக்கு அடித்தளமாகி வருகின்றன.. அப்படித்தான், கடந்த மாதம் கூட ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
அதில், இந்தியாவில் அதிக ஏழைகள் மிகுந்த மாநிலங்களில் பீகார் முதலிடத்தை பிடித்திருந்தது.. ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் இடம்பெற்றிருந்தன... வறுமை குறைந்த மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது... கேரளாவின் மக்கள் தொகையில் 0.71 சதவீதம் பேர் மட்டுமே வறுமையில் உள்ளனர் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது முக்கிய கவனத்தை அப்போது ஈர்த்தது.
இதற்கான காரணங்களும் சோஷியல் மீடியாவில் அப்போது விவாதிக்கப்பட்டன.. இம்மாநிலத்தின் வறுமை ஒழிப்புக்கு பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.. அதுமட்டுமல்ல, கேரளாவில் அன்று முதல் இன்று வரை ஆட்சி செய்து வரும் எல்லா அரசுகளுமே வறுமையை போக்குவதற்குதான் முன்னுரிமை தந்து வருவதும் மிக முக்கியமான காரணமாக ஈர்க்கப்பட்டது. இப்போதும் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.. அந்த லிஸ்ட்டில் வழக்கம்போல் கேரளா முன்னிலை வகித்தாலும், தமிழ்நாடு வறுமை ஒழிப்பில் அசத்தி உள்ளது.
அதிகமான ஏழைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் 4 இடங்களை பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.. அதேபோல குறைவான ஏழைகளை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் 3 இடங்களில் கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகியவை இடம்பெற்றுள்ளன... இதில், வறுமை குறைவாக இருக்கும் மிகப்பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது..
மாநில வாரியாக தரப்பட்டுள்ள வறுமை குறீயீட்டில், மிக குறைந்த அளவு கேரளா 0.71 சதவீதமும், தமிழ்நாடு 4.89 சதவீதமும், இடம்பித்துள்ளன.. அடுத்து உபி 37.79, பீகார் 51.91, உபி 37.79 சதவீதமாக உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் மாவட்ட வாரியாகவும் தரப்பட்டுள்ளன.. அதில், தமிழ்நாட்டிலேயே வறுமை குறைந்த மாவட்டங்களின் லிஸ்ட்டில் நீலகிரி முதலிடத்தை பெற்றுள்ளது.. அடுத்து கோயம்புத்தூர், திருப்பூர், கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல, வறுமை அதிகமான மாவட்டங்களின் லிஸ்ட்டில் நாகப்பட்டினம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர் போன்றவை இடம்பெற்றுள்ளன... இதில் அதிக கவனத்தை ஈர்த்து வருவது புதுக்கோட்டைதான்.. 11.71 சதவிகிதத்துடன் அதிக வறுமையான மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது.. எனினும் இந்த சதவீத அளவை வாரணாசி முந்தி கொண்டுவிட்டது.. 26.03 சதவிகிதத்துடன் அதிக வறுமையான மாவட்டமாக வாரணாசி உள்ளதாம். இதில், ஏழைகளே இல்லாத மாவட்டத்தில் கேரளாவின் கோட்டயம் இடம்பெற்றுள்ளது.. பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் 18 சதவிகித மக்கள் ஏழைகளாக உள்ளனராம்.
இந்த தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், தென் மாநிலங்களில் வறுமை குறைந்து காணப்படுகிறது.. வடமாநிலங்களோ, வறுமை வாட்டி கொண்டிருப்பதும், மக்கள் ஏழ்மையில் உழன்று வருவதும் புலனாகிறது... விரைவில் எம்பி தேர்தலுக்கு தேசிய மற்றும் மாநில கட்சிகள் தற்போது மும்முரமாகி வரும் நிலையில், இந்த வறுமை கணக்கு மீண்டும் ஒரு விவாதத்தை களத்தில் கிளப்பி விட்டுள்ளது.
The biggest tragedy is that even after all these years of India's independence, poverty still persists
ReplyDeleteCertainly
Deleteதமிழ் நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் தான் வறுமையில் முதலிடம்
ReplyDeleteThanks தம்பி
DeleteBhagat's opinion is true
ReplyDeleteThanks for your opinion
DeleteOk comrade
ReplyDelete