சலூன் கடைகளில் கால் பதிக்க வருகிறார்கள் கார்ப்பரேட்டுகள் ஆம்..!
காய்கறி தொடங்கி , ஜவுளி , எலக்ட்ரானிக்ஸ் , மளிகைப்பொருட்கள் என எதையும் விட்டு வைக்காத கார்ப்பரேட் நிறுவனங்கள் , தற்போது முடிதிருத்தத் துக்கு குறைந்த சலுகைக் கட்டணம் எனக் கூறிக்கொண்டு சலூன் கடைகளைத் திறக்கவுள்ளனர் .
இது , காலங்காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் எளிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே இதற்கெதிராக , தமிழ்நாடு மருத்துவர் சமூக சங்கம் , முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் , கடந்த7 - ம் தேதி , கார்பரேட் நிறுவனங்களைக் கண்டித்து சலூன் கடைகளை அடைத்து தமிழகம் முழுக்க போராட்டம் நடைபெற்றது . ஈரோடு மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன . கோரிக்கைகளை வலியுறுத்தி காளைமாடு அருகே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் .
அந்தச் சங்கத்தின் செயலாளர் வெங்கடேசன் கூறும்போது , " பாரம்பரியமாக இந்த முடிதிருத்தும் தொழிலில் தமிழகம் முழுக்க 30 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள் . சில கார்ப்பரேட் நிறுவனங்கள் , முடி திருத்த குறைந்த விலை, சலுகைக் கட்டணம் என்பன போன்ற புதிய யுத்திகளைக் கையாண்டு , இத்தொழிலில் இறங்கி எங்கள் தொழிலை முடக்க நினைக் கின்றனர் .
எங்களுக்கு இந்தத் தொழில்தான் வாழ்வாதாரமாக உள்ளது . ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு தொழில்கள் உள்ளன அவர்கள் அதைச் செய்யட்டும் . முடி திருத்தும் தொழிலில் அவர்கள் இறங்குவதையும் , பல ஊர்களில் அவர்கள் கடைகள் தொடங்கு வதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உடனே கைவிட வேண்டும் ” என்றார்
""கோடிக்கால் பூதம்"" என்று பாரதி சொன்னது கார்பரேட் கம்பெனிகளை தான் போலும்.
No comments:
Post a Comment