Tuesday, October 26, 2021

1 கிலோ 1 கோடி ரூபாய்..!ஆம்பர்கிரீஸுக்காக அடித்துக்கொள்ளும் உலகம்..?

திமிங்கிலத்தால் வாந்தியெடுக்கப்பட்ட ஒரு கழிவு பொருளுக்காகவா இப்படி அடித்துக்கொள்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும், ஆனால் திமிங்கிலம் எடுக்கும் வாந்தி ஆண்மை விருத்தி மருந்து மற்றும் வாசனைத்திரவியம் தயாரிக்க பயன்படுவதும், சர்வதேச சந்தையில் ஒருகிலோ ஆம்பர்கிரீஸ் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவதாலும் அதற்கு இவ்வளவு மவுஸ் உள்ளது. ஆம்பர் கிரீஸ் குறித்த விரிவான தகவலை பார்ப்போம்.

ஆம்பர் கிரீஸ் என்றால் என்ன?

அம்பர்கிரிஸ் (Ambergris) எண்ணெய்த் திமிங்கிலம் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். திமிங்கில வாந்தி எனலாம், சில நேரம் மலவாய் வழியாகவும் வரும் கழிவு.

கருப்பு மற்றும் பிசுபிசுப்பானது, ஆனால் காலப்போக்கில் கடலில் அது கடினமாகி, பழுப்பு, சாம்பல் அல்லது வெள்ளை நிறத்துடன் காணப்படும். சிறிய கூழாங்கல் அளவிலிருந்து பெரும் பாறை அளவிற்கு இது இருக்கும். மீனவர்கள் வலையில் சிக்கும். சில நேரம் கரையில் ஒதுங்கும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும்.

எந்த வகை திமிங்கிலத்திலிருந்து இது எடுக்கப்படுகிறது? எப்படி எடுக்கப்படுகிறது?

ஸ்பெர்ம் திமிங்கலங்கள் அல்லது எண்ணெய்த் திமிங்கிலம் எனும் ஒருவகை திமிங்கிலம் எடுக்கும் வாந்தியில் இது கிடைக்கிறது. அனைத்து திமிங்கிலங்களும் ஆம்பர்கிரீஸை வாந்தியெடுப்பதில்லை. சில குறிப்பிட்ட திமிங்கிலங்கள் குறிப்பிட்ட கடல்பரப்பில் காணப்படும் திமிங்களிடையே இது கிடைக்கிறது.

ஒரு கிலோ ஒரு கோடி ரூபாய் இருக்க அதில் அப்படி என்ன இருக்கிறது?

ஆம்பர்கிரிஸ், அதன் தனித்துவமான இயற்கை வாசனை காரணமாக வாசனை திரவியம் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. பல நாட்கள் இருக்கும் வாசனை காரணமாக மதிப்பு பன்மடங்கு கூடுகிறது. இது தவிர மருந்துப்பொருளாகவும், திமிங்கில விந்தும் கலந்துள்ளதால் ஆண்மை விருத்தி மருந்து மற்றும் பாலியல் மருந்துக்கும் பயன்படுகிறது. அதில் சைனா முன்னணி நாடாக உள்ளது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக அம்பெர்கிரிஸ் ஒரு வாசனை திரவியமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இது உயர் தரமான வாசனை திரவியங்களை தயாரிக்க பயன்படுகிறது. ஆயுர்வேதத்தைத் தவிர, யுனானி மருத்துவத்திலும் அது பயன்படுத்தப்படுகிறது. இது மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்சனைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது.

இதன் அரியத்தன்மை, பல நாடுகள் இதை எடுப்பதற்கு தடை விதித்துள்ளதால் இதன் அரியத்தன்மை காரணமாக தங்கத்தைவிட கூடுதலாக விலை விற்கப்படுகிறது. அம்பர்கிரிஸ் எத்தனை பழையதோ, எத்தனை பெரியதோ அதற்கு அதிக விலை வழங்கப்படும்.

கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கும்போது வலையில் சிக்கும் ஆம்பர்கிரீசால் ஒரே நாளில் மிகப்பெரிய மில்லியனான மீனவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர், சமீபத்தில் வெளிநாட்டில் ஒரு பெண்ணுக்கு 16 கிலோ அம்பர் கிரீஸ் வலையில் சிக்கியதில் கோடீஸ்வரர் ஆனார்.

இந்தியாவில் ஆம்பர் கிரிஸ் எடுக்க தடை ஏன்?

அம்பர்கிரீசுக்காக திமிங்கலங்கள் வேட்டையாடப்படுவதாலும் இதற்கு தடை உள்ளது. இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்ப கடலிலும், ஒடிசா கடலிலும் திமிங்கில வாந்தி எனும் அம்பரிஸ் சேரிக்கப்படுகிறது. இதற்காக பிரத்யோக பயிற்சிப்பெற்ற மாலுமிகள், மோப்ப நாய்களை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் திமிங்கல வாந்தி வெளியிடும் எண்ணெய்த் திமிங்கலங்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் தகுதியைப் பெற்றுள்ளன. 1986-ஆம் ஆண்டு முதல் வன பாதுகாப்புச் சட்டத்தின் 2 வது அட்டவணையின் கீழ் இந்தியாவில் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் அல்லது அவற்றின் உறுப்புகளை வர்த்தகம் செய்வது சட்டவிரோதமானது. எனவே திமிங்கல வாந்தி வணிகத்திற்கு உரிமம் பெறுவது கட்டாயம்.

ஆம்பர் கிரிஸ் எடுக்க தடை செய்யாத நாடுகள் எவை? அது ஏன்?

இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பெரும்பாலான நாடுகளில், கடற்பரப்பில் உள்ள ஆம்பர்கிரிஸை மீட்டு ஏலத்தில் அல்லது ஈபே போன்ற தளங்களில் விற்பனை செய்ய சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து திமிங்கலங்கள் மற்றும் டால்பின் இனங்களும் ஐரோப்பிய யூனியன் சட்டத்தின் கீழ் கண்டிப்பாக பாதுகாக்கப்படுகின்றன. திமிங்கல பொருட்கள் விற்பனை செய்ய சர்வதேச வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இங்கு ஆம்ப்ரீஸ்கிரிஸ் வித்தியாசமாக நடத்தப்படுகிறது, ஏனெனில் CITES (அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய மாநாடு) இந்த பொருளை கழிவாக கருதுகிறது.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆம்பர்கிரிஸை வைத்திருப்பது அல்லது வர்த்தகம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில், விந்தணு திமிங்கலங்கள் ஆபத்தான உயிரினங்கள் சட்டத்தின் கீழ் 1973 -ன் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இது ஒரு ஆபத்தான உயிரினத்திலிருந்து எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதை தடை செய்கிறது.

இருப்பினும், ஆம்பர்க்ரிஸ் ஒரு 'சாம்பல் பகுதி' என்று கருதப்படுகிறது, இது ஒரு கழிவுப் பொருளாக இருப்பதால், திமிங்கலங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் 'காப்பு' செய்யும் திறன் கொண்டது.

ஆஸ்திரேலியாவில், ஆம்பர்க்ரிஸ் ஒரு திமிங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது, எனவே, அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம், 1999 ன் பகுதி 13A இன் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், நிச்சயமாக ஒரு பெரிய பிரச்சினை உள்ளது: திமிங்கல பொருட்கள் அல்லது எந்த வகையான துணை தயாரிப்புகளின் வர்த்தகம் திமிங்கலங்களை ஒரு பண்டமாக கருதுகிறது, அவற்றின் பாகங்கள் மனிதர்களால் நுகரப்படும் அல்லது பயன்படுத்தப்படுகின்றன. உலகின் உன்னதமான வாசனை திரவியங்கள் திமிங்கில வாந்தியிலும், புனுகு பூனையின் மலத்திலும் கிடைக்கிறது என்றால் நம்ப முடியுமா? நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை.

என்னென்ன தேவைக்காக இது கடத்தப்படுகிறது?

மருந்து, பாலியல் ஊக்க மருந்து, வாசனை திரவியம் தயாரிக்கவே இது கடத்தப்படுகிறது. வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் ஆம்பர்க்ரீஸ் வாசனை திரவியம் மிகப்பிரபலம். விலை, மூச் சாதாரண மனிதர்கள் நினைத்துப்பார்க்க முடியாதது.

இதில் ஈடுபடும் network எப்படி செயல்படுகிறது?

இந்தியாவில் குஜராத் போன்ற மாநிலங்களில் பெரிய குழுக்களாகவே ஆம்பர்க்ரீஸை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்காக பெரிய அளவில் குழுக்கள் அமைத்து படகுகளுடன் இந்த வேலையில் ஈடுபடுகின்றனர், இந்தியா முழுவதும் ஆம்பர்க்ரீஸ் கடத்தல் முக்கியமானது. இதற்காக ஒரு தனி நெட்வர்க் இயங்குகிறது. இவர்கள் அவ்வப்போது கடத்தலில் ஈடுபடும்போது சிக்கிக் கொள்வதும் நடக்கிறது.

தமிழகத்தில் இதற்கு முன் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?

தமிழகத்தில் ஆம்பர்க்ரீஸ் கடத்தி சிக்கிக்கொள்பவர்கள் பட்டியலை கணக்கெடுத்தால் இங்கு பதிவிட முடியாத அளவுக்கு நீளும், ஆனால் சமீபத்தில் இந்த ஆண்டு மட்டும் பதிவான வழக்குகள் சில.

*கடந்த மே மாதம் அஹமதா பாத்தில் 7 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரீஸ் சிக்கியது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

*கடந்த ஆகஸ்டு மாதம் பெங்களூருவில் மிகப்பெரிய அளவில் 80 கோடி ரூபாய் மதிப்பிலான 80 கிலோ ஆம்பர்கிரிஸ் சிக்கியது. 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

*ஆகஸ்டு 20 அன்று திருப்போரூரில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆம்பர்கிரீஸ் சிக்கியது. 9 பேர் கைதாகினர்.

*அதற்கு முந்தைய நாள் ஆக.19 அன்று தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ஆம்பர்கிரீஸை கடத்த முயன்ற 3 பேர் டிஆர் ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 23 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ ஆம்பர்கிரீஸ் சிக்கியது. வாகி ரூ.8 கோடி மதிப்புள்ள ஆம்பர் க்ரீஸுடன் சிக்கியுள்ளார்.

பலனடைந்தவர்கள்

கடத்தலில் ஈடுபடாமல் நியாயமான வழியில் ஆம்பர்க்ரீஸால் பலனடைந்தவர்களும் உண்டு. ஆம்பர்க்ரீஸ் தடை செய்யப்படாத நாடுகளில் மீனவர் வலையில் சிக்கும் ஆம்பர்க்ரீஸால் ஒரே நாளில்

தற்போது நாம் தமிழர் கட்சி நிர்கோடீஸ்வரர்களான பல மீனவர்கள் உள்ளனர். சமீபத்தில் ஒரு பெண் மீனவர் வலையில் சிக்கிய 16 கிலோ ஆம்பர்கிரீஸால் அவர் 16 கோடிக்கு அதிபதியானார். ஒரு மீனவர் வலையில் சிக்கிய ஆம்பர்கிரீஸால் மீனவர் 9 கோடிக்கு அதிபதியானார். இதேப்போன்று தங்க மீன்களாலும் மீனவர்கள் பணக்காரர்களாகும் நிகழ்வும் உண்டு.

No comments:

Post a Comment