Thursday, October 28, 2021

உணவுக்காக இளம் பெண்களை விற்கும் நிலைமை..! ஆப்கன் கொடூரம்..?

வறுமை காரணமாக, தங்களது இளம் மகள்களை திருமணத்துக்காக விற்பனை செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆப்கன் மக்கள் ஆளாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மோசமான நிலையில் Afghanistan இருக்கு.. எச்சரிக்கும் ஐநா

20 வருஷங்கள் கழித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளனர் தாலிபான்கள்.. இப்போதைக்கு தலிபான் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில், தற்காலிக அரசு அமைப்பட்டிருந்தாலும், ஏகப்பட்ட குழப்பங்களும் சர்ச்சைகளும் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன..

இதுவரை அந்த அரசு பதவி ஏற்காவிட்டாலும், தாலிபான்களின் அட்சி எந்த மாதிரியாக இருக்க போகிறது என்ற பீதியும் கலக்கமும் அந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது..

வாக்குறுதிகள்

பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று தாலிபான்கள் முதல் வாக்குறுதியாகவே தந்திருந்தனர். ஆனால், அதற்கான அறிகுறிகள் இதுவரை காணப்படவில்லை.. அமைச்சரவை பதவிகளிலும் பெண்கள் இல்லை.. பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பில், உரிமைகள் எதுவும் வழங்கப்படவில்லை.. ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை.. குழந்தைகளுக்கான பள்ளிக்கூடமும் திறக்கப்படவில்லை..

விதிகள்

மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில் பெண் நீதிபதிகளே கலங்கி போய், உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பித்து செல்லும் நிலைமையும் அங்கு ஏற்பட்டுள்ளது.. இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகளில் அந்த மக்கள் தவித்து வருகின்றனர்... தவறு செய்பவர்களுக்கு கண்மூடித்தனமாக தண்டனைகள் தரப்பட்டு வருகின்றன. அந்த தண்டனைகளை பார்த்து மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.

வறுமை

மற்றொரு பக்கம் அந்த நாடே வறுமையிலும் பட்டினியிலும் சிக்கி கொண்டுள்ளது.. "ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மை மற்றும் பட்டினியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.. பொருளாதாரம் அதை விட வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.. குழந்தைகள் உயிரிழக்க போகிறார்கள்... மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்... நிலைமை ரொம்ப மோசமாக போகிறது.. மனிதாபிமான செயல்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று ஐநா நேற்றைய தினம் எச்சரித்திருந்தது.

சம்பளம்

ஆப்கன் மக்கள் வேலையில்லாமலும், உணவு இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் தரவில்லையாம்.. கடுமையான நிதி நெருக்கடிக்கு அந்த நாடு ஆளாகி உள்ளது.. மேற்கத்திய நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்திவிட்டது.. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் பணம் செலுத்துவதை நிறுத்தி விட்டன.. இதனால், நிதி நிலைமை மோசமாகிவிட்டது.. வீட்டில் உள்ள பொருட்களை தெருவில் கொட்டி விற்று சாப்பிடும் நிலைமைக்கு மக்கள் ஆளாகி உள்ளனர்..

இளம்பெண்கள்

இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. அங்குள்ள இளம்பெண்களை குடும்பத்தினர் விற்று வருகிறார்களாம்.. ஹெராட், பட்கிஸ் போன்ற பகுதிகளில் உணவுக்கு வழியில்லாமல் பெற்றோர் தங்களது இளம் மகள்களை திருமணத்துக்காக விற்பனை செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி உள்ளனர்.. இதுகுறித்து தாலிபான் செய்தித்தொடர்பாளர் சபிகுல்லா முஜாஹித் சொன்னதாவது:

விநியோகம்

"இங்கு நிலைமை சரியில்லாமல் இருந்தது உண்மைதான்.. ஆனால், அந்த பிரச்சனைகளில் இருந்து மக்களை வெளியே கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.. சர்வதேச உதவியும் இப்போது வந்துள்ளது. உணவு, ஆடை போன்றவற்றை விநியோகிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். எல்லா பிரச்சினைகளும் விரைவில் சரியாகிவிடும்" என்றார். ஏற்கெனவே மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏராளமானோர், தங்களது கால்நடைகள், உடைமைகளை விற்று உதவி கேட்டு பெருநகரங்களுக்கு அருகே முகாமிட்டு வருகின்றனர்.. இப்போது, வறுமை காரணமாக இளம்பெண்களை விற்பனை செய்வது உலக நாடுகளுக்கு மேலும் அதிர்ச்சியை கூட்டி வருகிறது.

No comments:

Post a Comment