Friday, October 22, 2021

பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு காரணம் ஒரு பெண்ணா..?

20 வருடங்களாக பெண் ஒருவருடன் உறவு... பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு இந்த பெண் தான் காரணமா?

பெண் ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக அப்போதைய மைக்ரோசாஃப் தலைவர் பில் கேட்ஸை, அந்நிறுவனம் எச்சரித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களுள் ஒருவராக இருப்பவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களுள் ஒருவருமான பில் கேட்ஸ். இவர், உலகளவில் மிகவும் மதிப்புவாய்ந்த மனிதராக திகழ்கிறார்.

மெலிண்டாவுடனான அவருடைய 27 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் 3-ம் தேதி அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, 25 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களை குறைந்த வரியில் பிரித்துக் கொள்வதற்காக வெல்த் டாக்ஸை குறைப்பதற்காக பில் கேட்ஸ் விவாகரத்து செய்து கொள்கிறார் என செய்திகளும் வெளியாகின.

பின்னர், பில் கேட்ஸ் 2008-ம் ஆண்டு தலைவர் பதவியில் இருந்து விலகினார். மேலும் 2020ம் ஆண்டு மார்ச்சில் இயக்குனர் பதவியில் இருந்தும் விலகினார்.

இந்த நிலையில், பெண் ஊழியர் ஒருவருக்கு தகாத வகையில் இ-மெயில் அனுப்பியதற்காக, 2008ம் பில் கேட்ஸை, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கண்டித்ததாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்ரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த பெண்ணுடன் ஏற்கனவே 20 வருடங்களாக பில் கேட்ஸ் உறவு வைத்துக்கொண்டதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியுள்ளது. இ-மெயில் விவகாரம் தெரியவந்ததை அடுத்து மைக்ரோசாஃப்ட் இயக்குனர்கள் குழுவினர் பில் கேட்ஸ் இதனை கைவிடுமாறு எச்சரித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பில் கேட்ஸ் இதனை ஒப்புக்கொண்டு, இனி இப்படி நடக்காது என மன்னிப்பு கோரியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து, ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்துக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த செய்தி உண்மை தான், மேற்கொண்டு தெரிவிக்க வேறு எதுவும் கிடையாது என தெரிவித்திருக்கிறார்.

பல நல்ல விஷயங்களை கையாண்டு வரும் பில்கேட்ஸுன் இமேஜ் சரிவுக்கு இந்த பெண் காரணமாக இருக்கிறது என கூறிவருகிறார்கள்.  

No comments:

Post a Comment