Friday, November 26, 2021

ஒரு குறளுக்கு 1 டாலர் பரிசு..!

ஒரு குறளுக்கு 1 டாலர் பரிசு! :அமெரிக்காவில் அசத்தும் புதுகை இன்ஜினியர்

பெற்றார்.

அங்கீகாரம்

சிறப்பான பங்களிப்புக்காக, கவுரவ டாக்டர்பட்டமும் பெற்றுஉள்ளார்.மனைவி விசாலாட்சியுடன், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம், டல்லாஸ் நகரில் தங்கி,சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, பிளோனோ தமிழ் பள்ளி ஆகியவற்றை ராமன்வேலு நடத்தி வருகிறார்.

இவர்கள் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுக்கஅங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.தமிழ் மீது கொண்ட பற்று காரணமாகவும், திருக்குறள் மீதுள்ள ஈர்ப்பு காரணமாகவும் ஒரு திருக்குறள்கூறினால் 1 டாலர் பரிசு என அறிவித்து,ஆண்டுதோறும் போட்டி நடத்தி வருகிறார்.இவர் நடத்தும்பள்ளியில் 400 மாணவர்கள் திருக்குறள் கற்றுவருகின்றனர்.

எதிர்பார்ப்பு

நமது நிருபரிடம், ராமன்வேலு கூறியதாவது:என் மனைவியின் சகோதரி மூலமாக அமெரிக்காவுக்கு 2013ம் ஆண்டு வந்து, ஐ.பி.எம்., நிறுவனத்தில் 'சீனியர் கன்சல்டன்ட்' மற்றும் பல்வேறு நிறுவனங்களில் மனிதவள அதிகாரியாக பணியாற்றினேன்.நாங்கள் நடத்திவரும் பள்ளியில் 1,330 திருக்குறள்களில்
ஒன்றையாவது, பொருளுரையுடன் கூறினால் 1 டாலர் பரிசு என அறிவித்து செயல்படுத்தி வருகிறேன்.

இது நல்ல வரவேற்பை பெற்றது. இப்போதுஅமெரிக்கா மட்டுமின்றி, உலக அளவில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்களிடையே உருவாகிஉள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.ராமன்வேலு,'மனநிறைவுடன்வாழ ஏழு வழிகள்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.இவரது மகன், மகள் ஆகியோரும், தந்தை வழியில் தன்னார்வ பணிகள், தமிழ் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.


No comments:

Post a Comment