Friday, November 19, 2021

வருகிறது மேதகு பிரபாகரன் - 2

வருகிறார் மேதகு ! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட ' மேதகு ' திரைப்படம் , கடந்த ஜூன் மாதம் பி.எஸ் . வேல்யூ ஓ.டி.டி. தளத்தில் வெளியானது . 

பிரபாகரனின் இளமைப் பருவத்தில் தொடங்கி , யாழ்ப்பாண மேயர் ஆல்பர்ட் துரையப்பாவை சுட்டுக் கொல்வதோடு நிறைவடையும் இப்படத்தில் , ' பிரபாகரன் எப்படி போராளியாக உருவெடுத்தார் ' என்பதை காட்சிப்படுத்தியிருப்பார்கள் . 
கிரௌட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டி தயாரிக்கப்பட்ட இப்படத்தை , கிட்டு இயக்கியிருந்தார் . தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் ... ' மேதகு ' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது .

 ' மேதகு 2 ' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் மற்றும் நடிகர் சசிகுமார் படக்குழுவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர் . ' மேதகு 2 ' படத்தின் முன்னோட்டம் , பிரபாகரனின் பிறந்ததினமான நவம்பர் 26 - ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக் குழு அறிவித்துள்ளது .

No comments:

Post a Comment