Saturday, November 27, 2021

கொரோனா இல்லாத ஒரே நாடு..?

கடந்த வருடம் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோராத்தாண்டவம் ஆடி வருகின்றது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் சிலர் வேலைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இருப்பினும் உலகில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத ஒரு தீவு உள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

மக்கள் இப்போது இந்த தீவை பூஜ்ஜிய கொரோனா தொற்று கொண்ட தீவாக அங்கீகரிக்கின்றனர். இந்த தீவின் பெயர் Saint Helena Island என்பதாகும்.

2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உலகில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீவில் ஒரு கொரோனா தொற்று பாதிப்பு கூட பதிவாகவில்லை.

இந்த தீவு 121.7 கிமீ பரப்பளவில் பரவியுள்ளது. இந்த தீவில் சுமார் 5000 மக்களுக்கு பேர் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. செயின்ட் ஹெலினாவைப் பற்றிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இங்கு கோவிட் விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.


ஏனென்றால் கொரோனா இங்கு ஏற்படவில்லை. இங்கு மக்கள் எப்போதும் போல் இயல்பு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மாஸ்க் அணியவில்லை சமூக இடைவெளி தேவையில்லை.

இருப்பினும் மற்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment