Saturday, November 13, 2021

வரலாற்றில் இன்று..?



கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018 ஆம் ஆண்டு இதே நாளில்தான் காஜா புயல் கரையைக் கடந்தது.

கஜா புயல் (Severe cyclonic storm GAJA) என்பது வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2018 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலாகும். தமிழகக் கடற்கரையை கடக்கும்போது கடும் புயலாக இருந்ததால் அதிக வேகத்துடன் காற்று வீசியதோடு, கன மழையும் பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர். இயற்கை வளங்கள், தோப்பு மரங்கள், விவசாயப் பயிர்கள், மக்களின் உடைமைகள் ஆகியனவற்றிற்கு பெருத்த சேதம் ஏற்பட்டது.

  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 81,000 பேர் 471 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
  • புயல் வீசிய மாவட்டங்களில் மின்சார வினியோகமும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.
  • திருச்சிக்கு வரவேண்டிய வானூர்திகள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல வேண்டிய வானூர்திகள் இரத்து செய்யப்பட்டன, அல்லது கால தாமதமாக புறப்பட்டன. தொடர்வண்டிகள் இரத்து செய்யப்பட்டன அல்லது ஒரு குறிப்பிட்ட தடத்தில் இயக்கப்படவில்லை.

No comments:

Post a Comment