Wednesday, November 3, 2021

தீபாவளி தமிழர் பண்டிகையா..?

விஜயநகர பேரரசுக் காலத்தில் தமிழ்நாட்டில் நுழைந்த தீபாவளி 
1.தீபாவளி தமிழ் நாட்டின் மரபு வழிப் பருவநிலை பொருளாதாரத்தோடும் களோடும் தொடர்பில்லாத ஒரு திரு விழாவாகும் . 2. தீபாவளியைக் குறிக்கும் வெடி அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15 ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் . 3. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ் ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதப்லல. 

மாறாக இன்று பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும் . 4. இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரி யான சமண மதத்தின் 24 ஆம் தீர்த்தகாரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த ( இறந்த ) நாளாகும்.

தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார் . ஆகவே பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர் . எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும் 5. விஜய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15 ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது . முனைவர் தொ.பரமசிவன் அறியப்படாத தமிழகம் ' நூலில் ...

No comments:

Post a Comment