Saturday, November 13, 2021

அன்புமணிக்கு திருமா போட்ட ட்விட்..?


திருமாவளவன் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. விசிக தலைவரின் இந்த ட்வீட்தான் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.. என்ன ட்வீட் அது?

சில தினங்களுக்கு முன்பு திரௌபதி என்ற ஒரு படம் வெளியானது.. தமிழகமெங்கும் பரபரப்பாக இந்த படம் பேசப்பட்டது.

காரணம், ஒரு சாதியினர், உயர்தர சாதி பெண்களை எப்படியெல்லாம் திட்டமிட்டு நாடக காதல் செய்து மிரட்டி அனுபவிக்கிறார்கள் என்பதை தோலுரித்து இந்த படம் காட்டுகிறது என்றும், குறிப்பாக, சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கெளசல்யா, திருமாவளவனின் கொள்கைகள் அனைத்தையும் இந்த படம் புட்டு புட்டு விவரிக்கிறது என்றும் கூறப்பட்டது.

 திரௌபதி  

அதாவது, பெரும்பான்மை சமூக மக்களுடைய நீண்ட கால ஆதங்க தீயை இந்த படம் பற்ற வைத்துவிட்டதாகவே கருதப்பட்டது... எல்லாவற்றிற்கும் மேலாக, திருமாவளவன் போலவே ஒரு கேரக்டரை இதில் சித்தரித்து இருப்பதாகவும் பேசப்பட்டது.. இதையடுத்து, இந்த படம் குறித்து அப்போது திருமாவளவனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு திருமாவளவன், அந்த படத்தை நான் பார்க்கவில்லை.. படம் பார்க்க நேரமும் கிடைக்கவில்லை.. அதை பற்றி சொல்ல ஒன்றுமில்லை" என்று தெரிவித்திருந்தார்.

ஜெய்பீம்

இந்நிலையில், ஜெய்பீம் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.. ஆனால், படம் வெளிவந்ததில் இருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகளை சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர்.. சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக சொல்லி, பாமக தரப்பு கண்டனம் தெரிவிக்கவும், சம்பந்தப்பட்ட காட்சியும் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது.. 

வேண்டுமென்றே சர்ச்சை காட்சிகள் புகுத்தப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், இது தொடர்பாக நடிகர் சூர்யாவும், நேற்று முன்தினம், பாமகவின் அன்புமணி ராமதாசுக்கு அறிக்கை மூலம் விளக்கம் சொல்லி தெளிவுபடுத்தி இருந்தார்.

விளக்கம்

இப்படிப்பட்ட சூழலில் தான் திருமாவளவன் பரபரப்பு ட்வீட் கருத்துக்களையும் விவாதங்களையும் எழுப்பி வருகிறது. திரௌபதி  குறித்து திருமா அளித்த பதிலையும், ஜெய்பீம் படம் குறித்து அன்புமணி எழுப்பிய கேள்வியையும் ஒப்பிட்டு, விஜய் என்ற நபர் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

அந்த ட்வீட்டில், "திரௌபதி படத்துல ஒரு கேரக்டர் அச்சு அசலா திருமாவளவன் மாதிரிதான் காட்டி எடுத்து வெச்சிருப்பான்.. @mohandreamer அது பத்தி கேட்டப்போ, "அந்த படத்தை நான் பார்க்கல.. பார்க்க எனக்கு நேரமும் இல்ல. அது பத்தி கருத்து சொல்ல ஒன்னும் இல்ல"னு சொல்லி முடிச்சிட்டார். 

அதை விசிககாரங்க பெருசு பண்ணியிருந்தாங்கன்னா பெரிய சட்டம் ஒழுங்கு, சாதிக்கலவரம் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். திருமா தன் கட்சியினரை அதை எளிதாக கடந்து போக சொல்லிட்டார். அதுதான் தலைமை பண்பு. அன்புமணி அப்பாவி வன்னியர் இளைஞர்களை அரசியல் சுயலாபத்துக்காக தூண்டி விடுகிறார். பாவம் அவர்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

விவாதம்

இந்த ட்வீட்டை எடுத்து திருமா தன்னுடைய பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.. அத்துடன், "கீழேயுள்ள ட்வீட்டை செய்துள்ள தம்பி @vijay_writes யாரென்று தெரியவில்லை. எனினும் இவருடைய நேர்மைத் திறத்துக்கு எனது மனமார்ந்த நன்றி. இவரைப் போன்ற சனநாயக சக்திகள் உண்மைகளைச் சொல்ல வேண்டிய நேரத்தில் உரத்துச் சொல்லுவதுதான் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது." என்று கூறியுள்ளார். 

விஜய் ட்வீட்டையும், திருமாவின் ட்வீட்டையும் சேர்த்து விசிகவினர் வைரலாக்கி வருகின்றனர்.. இந்த ட்வீட்கள் பேசும்பொருளாகவும் அரசியல் களத்தில் உருவெடுத்து வருகிறது.

No comments:

Post a Comment