Eating Well Thinking Well

அன்புள்ள நண்பர்களே.. ஒரு மனிதனின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள், ஆனால் ஒரு இளைஞன் 30 வயதிலேயே இறந்து போகிறான். காரணம், நாம் உண்ணும் உணவு. இந்த வலைப்பதிவின் முக்கிய நோக்கம் சரியான உணவுகளைப் புரிந்துகொண்டு சாப்பிட உதவுவதாகும், இதனால் நாம் நோயற்றவர்களாகவும், மோசமான உணவுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். மேலும், சமகாலத்தில் நிகழும் உள்ளூர் முதல் உலகளாவிய செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த வலைப்பூ..

Thursday, November 18, 2021

வரலாற்றில் இன்று..?


இதே நாளில்தான் சின்ன கலைவாணர் என்ற அழைக்கப்பட்ட விவேக் அவர்கள் பிறந்த தினம் இன்று

விவேக் (Vivek, 19 நவம்பர் 1961 - 17 ஏப்ரல் 2021) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.
விவேக்
Vivek at the Ezhumin Press Meet.jpg

பிறப்புவிவேகானந்தன்
நவம்பர் 19, 1961 
கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு17 ஏப்ரல் 2021 (அகவை 59)[4]
சென்னை,தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர், சமூக செயற்பாட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
1987–2021
பெற்றோர்அங்கையா, மணியம்மாள்
வாழ்க்கைத்
துணை
அருள்செல்வி
பிள்ளைகள்அமிர்தா நந்தினி
தேஜசுவினி
பிரசன்னா குமார் (இ. 2015)
விருதுகள்பத்மசிறீ (2009)
மதிப்புறு முனைவர் பட்டம் (2015)

பிறப்பு

இவர் 1961 நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது கடைசிப் பிள்ளையாகத் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்தார். விஜயலட்சுமி, சாந்தி ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள். வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர் ராஜு. இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். ஊட்டி கான்வென்ட்டில், பள்ளிப் படிப்பையும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் பட்டமும் பெற்றார். சிறு வயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். தமக்கையுடன் சேர்ந்து பல மேடைகளில் நாட்டியம் ஆடியுள்ளார். ஆர்மோனியம், வயலின், தபேலா போன்ற இசைக்கருவிகளையும் இசைக்க வல்லவர். மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய போது, மதுரையில் நடைபெற்ற பரத நாட்டியப் போட்டி ஒன்றில் பங்காற்றினார். சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது. இவரது நடனத்தையும், மிமிக்ரியையும் பார்த்த பாலச்சந்தர் தனது மனதில் உறுதி வேண்டும் (1987) படத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கொடுத்தார். அதன் பின்னர், சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணி கிடைக்க, கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் குடியேறினார். அருட்செல்வி என்பவரைத் திருமணம் முடித்து அமிர்தா நந்தினி, தேஜசுவினி, பிரசன்னா குமார் (இறப்பு: 2015 அக்டோபர் 29) என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

திரைப்பட வாழ்க்கை

1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலப்படுத்தியது.

இந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.

மறைவு

இவர் 16 ஏப்ரல் 2021 அன்று மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி 17 ஏப்ரல் 2021 அதிகாலை 4.30 மணிக்கு காலமானார்.[21][22][23] பிறகு இவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


Posted by GK.ARIVU at 7:35 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: நடிகர் விவேக்

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Followers

Search This Blog

Translate

Popular Posts

  • சாப்பிடக் கூடாத மீன்கள் எவை..?
      உணவில் சேர்க்க கூடாத மீன் வகைகள் ! மீன்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்குமே தெரியும். வாரம் ஒரு முறை...
  • உணவு விரயம் ஒரு சமூகக் குற்றமா..?
       உணவை விரயமாக்குவது இந்தியாவில் மட்டும் நடக்கும் நிகழ்வல்ல; உலகம் முழுவதிலும் நடக்கும் சமூக அநீதி ! எத்தனையோ சிரமங்களுக்கு இட...

Wikipedia

Search results

Simple theme. Powered by Blogger.