Tuesday, November 16, 2021

QR கோடு மூலம் நவீன மோசடி..!


இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் ஆன்லைன் தகவல் திருட்டு, பண திருட்டு, பண மோசடிகள் அதிகமாகி வரும் வேளையில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் QR கோடு பேமெண்ட் தளத்தில் அதிகம் கேள்விப்படாத வகையில் ஒரு புதிய மோசடி நடந்துள்ளது.

இதன் மூலம் இனி QR கோடு பயன்படுத்தி பணத்தை அனுப்பினாலோ அல்லது பெற்றாலோ ஒரு முறைக்கு இரு முறை மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு மோசடியில் ஒரு பெண் சுமார் 50,000 ரூபாய் தொகையை இழந்துள்ளார்.

                   டிஜிட்டல் சேவை

இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து சேவைகளுக்கும் டிஜிட்டல் சேவை வந்துள்ளது மூலம் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிதான ஒன்றாக மாறியுள்ளது. இதேவேளையில் டிஜிட்டல் பேமெண்ட் சேவையும் டிஜிட்டல் சேவைகளில் முக்கிய அங்கவும் மாறிவிட்டது.

                       OLX தளம்

இந்த நிலையில் ஒரு பெண் OLX தளத்தில் தனது பழைய பர்னீச்சர் பொருட்களை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து ஒருவர் பர்னீச்சரை வாங்குவதாக கூறிவிட்டு வாட்ஸ்அப் தளத்தில் பேமெண்ட் மற்றும் இதர விஷயத்திற்காக பேசியுள்ளைார்.


                   மோசடி QR கோடு

இந்நிலையில் பொருளை வாங்குவதற்காக அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும் அதற்காக QR கோடு கொண்ட புகைப்படத்தை Receive Money Check என்ற சொற்கள் உடன் வாட்ஸ்அப்-ல் அனுப்பியுள்ளான். இதை அந்த பெண் கிளிக் செய்த உடன் UPI பின் கேட்டு உள்ளது.


                50,000 ரூபாய்

உடனே அந்த பெண் பேலென்ஸ் காட்டவே யூபிஐ பின் கேட்கப்படுகிறது என்று நினைத்துக்கொண்டு தனது பின்-ஐ டைப் செய்துள்ளார். ஆனால் நடந்தது வேறு அந்த மோசடி நபர் அனுப்பியது பேமெண்ட் ரெக்வஸ்ட். யூபிஐ பின் அடித்த உடன் இந்த பெண்ணின் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் Deduct ஆகியுள்ளது. அந்த பெண் இதன் மூலம் 50000 ரூபாய் தொகையை இழந்துள்ளார்.

             யூபிஐ தளம்

அக்டோபர் மாதம் மட்டும் யூபிஐ மூலம் சுமார் 7.7 லட்சம் கோடி முறை யூபிஐ தளத்தை பயன்படுத்தி மக்கள் பேமெண்ட் செய்துள்ளனர். இப்படி இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வரும் ஒரு யூபிஐ தளத்தில் இப்படியொரு மோசடி நடந்துள்ளது.

              உஷார் மக்களே

இதேபோல் பல மோசடிகள் OLX தளத்தின் மூலம் வரும் பையர்கள் செய்வதாக பல புகார் மற்றும் ஏமார்ந்தவர்கள் கோரா, பேஸ்புக் போன்ற தளத்தில் பாதவிட்டு உள்ளனர். எனவே யூபிஐ செயலியை பயன்படுத்தும் முன் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுங்கள்.


No comments:

Post a Comment