Friday, December 10, 2021

அசத்தும் ஆண்டி இன்டியன்..!

ரிலீசாகி சர்ச்சைக்குள்ளாகும் படங்கள் உண்டு ரிலீஸ் ஆகும் முன்பே சர்ச்சையையும் எதிர்ப்பையும் கண்ட ஆன்டி இண்டியன் படம் , சென்சார் போர்டையும் ரிவைசிங் கமிட்டியையும் எதிர்கொண்டு , நீதிமன்றத்தை நாடி ஒரு கட் கூட இல்லாமல் முழுமையாக சான்றிதழ் பெற்று ரிலீஸாகிறது ஆதம்பாவா தயாரிப்பில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ப்ளூ சட்டை இளமாறன்.

 ஐ டியூப் சானல் நடத்தி தமிழ்ச் சினிமாக்களை உண்டு இல்லை என பிய்த்து மேய்ந்தவர் மாறன், இதனாலேயே அவரை ஆன்டி இண்டியன் என கோலிவுட்டும் , சோசியல் மீடியாக்களும் வர்ணித்தன “ எல்லா சினிமாக்களையும் விமர்சனம் செய்கிற நீ ஒரு சினிமா எடுத்துக் காட்டு " என சவால் விட்டனர் சவாலை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் , ஆன்டி இண்டியன் ' பெயரிலேயே ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் செய்திருக்கிறார் மாறன் . 

அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரம் எழுதும் ஓவியர் பாஷா கொல்லப்படுகிறார். அவரது தந்தை இஸ்லாமியர், தாய் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவர். இந்த கொலைக்கு யார் காரணம் என போலீஸ் ஒரு பக்கம் புலனாய்வு செய்து வருகிறது மற்றொரு பக்கம் பாஷாவின் உடலை அடக்கம் செய்வதில் முஸ் லிம் , இந்து , கிருஸ் தவம் ஆகிய 3 மதங்களும் உள்ளே நுழைய, அதனால் உருவாகும் அரசியல் மூன்று மதங்களையும் தனக்கேயுரிய வசனங்களால் கடுமையாகத் தாக்குதிறார் இயக்குனர் மாறன் அதில் எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளவில்லை.

சென்னை கடலோர குப்பங்களின் எளிமையான உருவாக்கப்பட்டிருக்கும் திரைக்கதை , படத்திற்கு பலம் சென்னை பாவையின் அடிநாதமாக புழங்கும் அந்த வார்த்தை, படம் நெடுக அனாயசமாக உச்சரிக்கப்படுவது எதார்த்தம். வாழும்போது எந்த சூழலிலும் மனிதர்களுக்கு உதவாத மதங்களையும் , இறந்த பிறகு அந்த உடல்மீது உருவாகும் மத உரிமைகளையும் அதனூடாக மெல்ல மெல்ல விரிவடையும் அரசியலையும் அம்பலப்படுத்துவதில் இயக்குநரின் நோக்கம் வெற்றியடைந்திருக்கிறது . ஸ்ரீராமஜெயம் என பொறிக்கப்பட்ட காவிநிற துண்டு அணிந்து இந்து மதத்தின் தலைவராக வலம் வருபவருக்கு ராஜா என பெயரிட்டிருப்பதும் , அவர் செய்வதாக காட்டப்படும் காட்சிகளும் இந்து மதவாதிகளை கொந்தளிக்க வைக்கும். 

அதேபோல , இஸ்லாமிய மதத்தலைவர்களின் ஆலோசனை , இஸ்லாமிய இளைஞர் ஒருவரின் ஆவேசம் , கிறிஸ்தவ மதத் தலைவரின் வசனங்கள் ஆகியவை சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடியவை . சூப்பர் ஸ்டார் ரஜினியை நினைவுபடுத்தும் விதமாக , நடிகர் கபாலி என குறிப்பிட்டு நக்கலடிக்கும் வசனங்கள் ரஜினி ரசிகர்களை வம்புக்கு இழுக்க வைக்கும் . முதலமைச்சராக வரும் ராதாரவிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடைத்தேர்தல் வெற்றி அவசியமாக இருக்கிறது . அதற்காக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தனித்தனியாக திட்டம் வகுக்கின்றன 

குறிப்பாக உளவுத்துறையிடமும் காவல் துறையிடமும் ராதாரவி விவாதிக்கிறபோது , பாஷாவின் உடல் அடக்கத்தில் உருவாகிய மதப் பிரச்சனைகளை வைத்து போலீஸ் போட்டுக் கொடுக்கும் திட்டம் அதனால் உருவாகும் கலவரம் ஆகியவை தற்கால அரசியலோடு ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது. அரசாங்கமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதை  அப்பட்டமாக சொல்லியிருப்பது அரசு இயந்திரத்தின் மீதான சவுக்கடி ! 

மதவாதிகளை விமர்சிக்கும் கருப்புச் சட்டை இளைஞர், இறப்பு வீட்டில் பந்தல் போடும் இளைஞர் , கானா பாடும் இளைஞர்கள் , போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர் என சின்னச் சின்ன கேரக்டர்களாக இருந்தாலும் அசால்ட்டாக அவர்கள் பேசும் வசனங்கள் அதிரடி ! மதவாதிகள் , அரசியவாதிகள் , காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அரசியலை கடுமையாக விமர்சிப்பதில் இயக்குநர் இளமாறனின் நோக்கம் ஜெயித்திருக்கிறது . " ஒரு உடலை அடக்கம் செய்வதற்காக 13 பேரை கொன்றிருக்கிறீர்களே , அந்த 13 உடலை அடக்கம் செய்ய எத்தனை உயிர்கள் காவு கேட்கப் போகிறதோ ? " என க்ளைமாக்ஸில் கதறும் ' பசி ' சத்யாவின் அலறல் , மத அரசியலின் கோரமுகம். சவத்தின் வழியே சமகால மதவாத அரசியலை சமரசமின்றி அம்பலப்படுத்தி உள்ளார் புளு சட்டை இளமாறன்.

7 comments: