Showing posts with label ஜியோ சிம். Show all posts
Showing posts with label ஜியோ சிம். Show all posts

Monday, November 29, 2021

ஜியோ சிம் வேண்டாம்..! தெறிச்சு ஓடும் வாடிக்கையாளர்கள்..?

2016ஆம் ஆண்டில் இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் புதிதாக நுழைந்தவுடன் மாபெரும் புரட்சியே உருவானது. மொபைல் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். என அனைத்து சேவைகளும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நெட்வொர்க்கை அதுவரையில் பயன்படுத்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு கொத்துக் கொத்தாக மாறத் தொடங்கினர். ஏர்செல் உள்ளிட்ட சில நெட்வொர்க் நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயின.

undefined
    சில காலம் கழித்து தனது சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது ஜியோ நெட்வொர்க். தற்போது ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு ஈடாகவே ஜியோ திட்டங்களும் உள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் மீண்டும் ஏர்டெல், வோடஃபோனுக்கு மாறுவதாகத் தெரிகிறது. இதனால் ஜியோ நெட்வொர்க் தனது வாடிக்கையாளர்களை இழக்கத் தொடங்கியுள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, சென்ற செப்டம்பர் மாத்தில் மட்டும் மொத்தம் 1.9 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த வெளியேற்றத்துக்குப் பிறகு ஜியோவின் மொத்த மொபைல் சந்தாதார்களின் எண்ணிக்கை 424.83 மில்லியனாகக் குறைந்துள்ளது. ஒருபுறம் ஜியோ தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ள நிலையில், மறுபுறம் ஏர்டெல் நெட்வொர்க்கில் 2.7 லட்சம் பேர் புதிதாக இணைந்துள்ளனர். இதன் மூலம் ஏர்டெல் நெட்வொர்க்கின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 354.46 மில்லியனாக உயர்ந்துள்ளது. அதேநேரம், வோடஃபோன் - ஐடியா நெட்வொர்க் செப்டம்பர் மாதத்தில் 10.7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 269.99 மில்லியன் மட்டுமே...