Showing posts with label தண்ணீர். Show all posts
Showing posts with label தண்ணீர். Show all posts

Monday, October 18, 2021

பாதி பெட்ரோல்.. பாதி தண்ணீர்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..?

திண்டிவனத்தில் தண்ணீர் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ததால் வாகனங்கள் கோளாறு ஆகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பிஎம்எஸ் தனியார் பெட்ரோல் பங்க். தினமும் வழக்கமாக பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்கள் இன்று பங்கில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுள்ளனர். பங்க் வரைக்கும் பந்தாவாக வந்த வாகனங்கள் பெட்ரோல் போட்டு திரும்பும்போது கோளாறு செய்துள்ளது. நம்ம வண்டிக்குதான் பிரச்னை என ஒவ்வொருவரும் மெக்கானிக் தேடி சென்றுள்ளனர்.

வண்டியை பரிசோதித்த மெக்கானிக்குகள் பெட்ரோலை பிடித்த பார்க்க எல்லா வண்டியிலும் பெட்ரோல் தண்ணீர் கலந்து இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் நேராக பெட்ரோல் பங்க்  முன் குவிந்தனர். அங்கு பெட்ரோல் போட காத்திருந்த வாகன ஓட்டிகளிடம் விவரத்தை எடுத்துக் கூறியுள்ளனர். ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சண்டை போட்டுள்ளனர்.

பெட்ரோல் பங்கில் இருந்த பம்ப்-யில் பெட்ரோலை கேனில் பிடித்துப் பார்த்துள்ளனர். அதில் பாதி பெட்ரோல் மற்றும் தண்ணீரை இருந்துள்ளது. இதனால் பங்க் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளார்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் பங்கின் அலட்சியத்தால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.