Showing posts with label மூதாட்டி. Show all posts
Showing posts with label மூதாட்டி. Show all posts

Thursday, October 21, 2021

70 வயதில் அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்த மூதாட்டி.!

70 வயதில் அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்த மூதாட்டி.!

குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மோடா என்ற கிராமத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.

செயற்கை கருவுற்றல் முறையில் குஜராத்தில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் குழந்தை பெற்று எடுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் 70 வயதில் பெண் ஒருவர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார்.

குஜராத் மாநிலம் கட்ச் அருகே உள்ள மோடா என்ற கிராமத்தில் திருமணமாகி 45 ஆண்டுகளுக்குப் பிறகு 70 வயதான ஒரு பெண் தொழில்நுட்பத்தின் உதவியுடன் குழந்தை பெற்றிருக்கிறார்.

மோடா கிராமத்தை சேர்ந்த தம்பதி ரபரி(70) - மல்தாரி(75) வயதான நிலையும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பி மருத்துவரை நாடி உள்ளனர்.

இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 45 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை.

உறவினர்கள் IVF மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதை அறிந்து, அதன் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.

இது குறித்து இந்த தம்பதிக்கு உதவிய மருத்துவர் நரேஷ் தெரிவிக்கையில், வயதாகி விட்டதே என கூறும் போதும் தம்பதிகள் குழந்தை வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார்.

மருத்துவர் உதவியுடன் தற்போது இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பலரும் இந்த தம்பதிக்கு தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.