Showing posts with label bapujica lady. Show all posts
Showing posts with label bapujica lady. Show all posts

Friday, January 8, 2021

விளங்காத மர்மங்கள் - 1


சுவாரஸ்யங்கள் யாருக்கு தான் பிடிக்காது. உலகமே சுவாரஸ்யம் நிறைந்த ஒன்று தான். இதில் உலகெங்கும் இருக்கும் பல சுவாரஸ்ய விஷயங்களை தெரிந்து கொள்ளும் போது மனம் புது வித அனுபவம் பெறுவதோடு மகிழ்ச்சியும் கொள்கின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் உலகளவில் மர்மமாக கருதப்படும் சில விசித்திர புகைப்படங்கள் சார்ந்த தொகுப்பு தான் இது.

                                                                பபுஷிகா லேடி

இந்த புகைப்படத்தில் காணப்படும் பெண்மனி பபுஷிகா லேடி என அழைக்கப்படுகின்றார். இவர் யார் என்ற தெளிவான தகவல்கள் இல்லாத நிலையில் இவர் ஜான் எஃப் கென்னடி கொலை செய்யப்பட்ட இடத்தில் படமாக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியிருந்தார். இவரை விசாரித்தால் கொலை சம்பவம் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கும் என்ற முயற்சியில் காவல் துறையினர் இவரை கண்டுபிடிக்க முயன்றனர்.

                                                    மர்மம்

இன்று வரை புகைப்படத்தில் இருக்கும் பெண்மனி யார் கண்டுபிடிக்கப்படவே இல்லை. இவர் யார் என்பது குறித்த தகவல்கள் தொடர்ந்து மர்மமாகவே இருக்கின்றது.