Saturday, September 18, 2021

செப்பு , பித்தளை , மண்பானை...இதில் எது குடிநீரை சேகரிக்க ஆரோக்கிமானது..?


ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ்

தண்ணீரை குடிப்பது ஆரோக்கியம் என்றால் அதை எதில் சேமித்து வைத்து குடிக்கிறோம் என்பதும் ஆரோக்கியம்தான்.

சாப்பிடும் உணவில் எப்படி கவனம் செலுத்துக்கிறோமோ அதேபோல் குடிக்கும் தண்ணீரிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தண்ணீர் நம் தாகத்தை தீர்பதற்காக மட்டுமல்ல..நம் ஆரோக்கியத்தில் ஒரு பங்கு தண்ணீருக்கும் உண்டு. எனவேதான் இன்று எதில் தண்ணீரை சேமித்து வைத்து குடித்தால் ஆரோக்கியம் என தேடி தேடி படிக்கிறோம்.

தண்ணீரை குடிப்பது ஆரோக்கியம் என்றால் அதை எதில் சேமித்து வைத்து குடிக்கிறோம் என்பதும் ஆரோக்கியம்தான். அந்த வகையில் சமீபத்தில் மருத்துவர் ரேகா ராதாமணி இன்ஸ்டாகிராமில் செய்த போஸ்ட் பலரையும் ஈர்த்தது. அதில் அவர் எந்த பாத்திரத்தில் நீரை சேமித்து வைத்து குடிப்பது ஆரோக்கியம் என குறிப்பிட்டிருந்தார்.

அதில் அவர் மண் பானை மற்றும் , செப்பு பாத்திரம் ஆகியவற்றில் குடிநீரை சேமித்து வைத்து குடிப்பது ஆரோக்கியம் என குறிப்பிட்டுள்ளார். அதற்கு என்ன காரணம்..? அப்படி என்னென்ன நன்மைகள் அதில் உள்ளன..? தெரிந்துகொள்ளுங்கள்..!

மண் பானை :

மண் பானைகளில் காற்று இடைவெளிகள் உள்ளன. அவை தண்ணீரை எப்போதும் ஃபிரெஷ்ஷாகவும், குளிராகவும் வைத்திருக்கும். இது அமிலத்தன்மை மற்றும் தோல் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதுமட்டுமல்ல, மண் பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீர் உயிர்ச்சக்தியையும் வலிமையையும் மேம்படுத்துகிறது.

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் உடலில் அமிலமாகி நச்சுக்களை உருவாக்குகின்றன. களிமண்ணில் அல்கலைன் (alkaline) இயற்கையாகவே இருக்கிறது. இது அமில உணவுகளுடன் இணைந்து செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் போதுமான pH சமநிலையை வழங்குகிறது. இது அமிலத்தன்மை மற்றும் இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.

களிமண் பானை எந்தவித இரசாயனமும் இல்லாததால் அந்த நீரை குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக மழைக்காலத்திலும் உகந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளது. இதனால் இருமல் மற்றும் சளியை தவிர்க்கலாம்.
பானை நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டுமெனில் அதை முதல் முறையாகப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

நீண்ட நாட்கள் சேமித்து வைத்திருக்கும் வாட்டர் கேன் தண்ணீரை குடிக்கலாமா..? திறந்து வைத்த நீரை குடிக்கலாமா..?

சமையலுக்கு நீங்கள் ஒரு மண் பானையைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதிக தீயில் பயன்படுத்த வேண்டாம். இல்லையெனில் அதிக தீயில் உடைந்துவிடும். பாத்திரத்தை கழுவ சோப்பு அல்லது ரசாயன திரவத்தை பயன்படுத்தக்கூடாது. பானையை சுத்தம் செய்ய எலுமிச்சை மற்றும் வெந்நீர் பயன்படுத்தவும்.
மண் பானைகளில் தண்ணீர் சேமித்து வைத்திருப்பது செரிமான ஆற்றலை அதிகரிக்கிறது.

செப்பு பாத்திரம் :

செப்பு ஆக்ஸிஜனேற்றியாகும், அதாவது இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. அவற்றின் எதிர்மறை விளைவுகளை தடுக்கிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் அவற்றின் தீங்கு விளைவிக்கும் காரணிகள் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாகும். செப்பு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து ஒருவரை பாதுகாக்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செப்பு பாத்திரம் நல்லது. ஏனெனில் செப்பு குறைபாடு, உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கும். செப்பு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாகும்.

பூஜை பாத்திரங்கள் புதிதுபோல் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ட்ரிக்ஸ் டிரை பண்ணி பாருங்க...
மனித உடலில் அதிகப்படியான கொழுப்பு படிவதைக் கரைப்பதில் செப்பு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது.ஒருவர் உடல் உழைப்பு இல்லாமல் இருந்தாலும் அவர்களுக்கு கொழுப்பை விரைவில் எரிக்கும் ஆற்றலை அளிக்கிறது. ஆனால் அதேசமயம் அதிக காப்பர் விஷத்தையும் ஏற்படுத்தும்.

ஒருவருக்கு இரத்தப்போக்கு கோளாறுகள் இருந்தால் செப்பு பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. செப்பு பாத்திரங்களில் சூடான தண்ணீரையோ அல்லது உணவையோ வைக்கக் கூடாது.
ஒரு அறையின் வெப்பநிலையில்தான் நாம் குடிக்கும் தண்ணீரின் வெப்பநிலையும் இருக்க வேண்டும். அதாவது அந்நீரானது 20 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். இந்த வெப்பநிலையில் உள்ள நீர் உங்களுக்கு அதிகபட்ச நீரேற்றத்தை வழங்கும்.
 

No comments:

Post a Comment