Sunday, September 19, 2021

திருமணத்திற்கு பிறகு தாம்பத்ய உறவில் ஆர்வம் குறைவது ஏன்..?


திருமணமான தம்பதிகள் தொடக்க காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சின்ன சின்ன விளையாட்டுகளில் தொடங்கி, ஒருவரையொருவர் கவர்ந்திழுப்பது வரை என ரொமானஸூக்கு பஞ்சமே இருக்காது. நாட்கள் செல்ல செல்ல அல்லது ஆண்டுகள் கடந்த பிறகு அதே ஆசை மற்றும் உடலுறவு நாட்டம் இருவருக்கும் இருக்காது. சொல்லப்போனால் உடலுறவு வைத்துக் கொள்வதையே நிறுத்திவிடுவார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அடிக்கடி உடலுறவு : 

அடிக்கடி உடலுறவு கொள்ளும்போது பார்ட்னரில் யாரேனும் ஒருவருக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். வாழ்க்கையில் செக்ஸ் என்பது ஒரு பகுதி மட்டுமே. காலை, மாலை கண் விழிப்பதுபோல், பல் தேய்த்து குளிப்பதுபோல் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால் அதில் சுவாரஸ்யம் இருக்காது. இருவரும் இடையே எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் வெறுமனே உடலுறவு வைத்துக் கொள்வதிலும் திருப்தி கிடைக்காது. அதற்கென குறிப்பிட்ட காலம் இடைவெளிவிட வேண்டும். இல்லையென்றால், காரணமே இல்லாமல் இருவருக்கும் இடையே உடல்சார்ந்த விலகல் ஏற்பட்டுவிடும்.

நாட்டமின்மை : 

ஒரு குறிபிட்ட காலத்துக்குப் பிறகு இருவருக்கும் உடலுறவில் நாட்டம் இருக்காது. கள்ளக்காதல் அல்லது முறையற்ற தொடர்பால் இந்த நாட்டமின்மை ஏற்படாது. இயல்பாகவே தம்பதிகளுக்குள் உடலுறவில் ஈர்ப்பு இருக்காது. இருவரும் வெளிப்படையாக பேசி வைத்துக் கொண்டு, அப்படி இருக்கமாட்டார்கள். இருவருக்கும் இடையில் இருக்கும் புரிதலின் அடிப்படையிலேயே நாட்டமின்மை இருக்கும்.

பிரைவசி இல்லாமை : 

குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர்கள் கூடவே இருக்கும் சூழலில் தம்பதிகளால் உடலுறவு வைத்துக் கொள்ள முடியாது. அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும், அதற்கான சூழல் ஒருபோதும் அமையாமல் இருக்கும். வீடும் அதற்கேற்ப பொருத்தம் இல்லாமல் இருக்கும் என்பதால், புரிதலின் அடிப்படையில் விலகலை கடைபிடிப்பார்கள். அரிதான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

கருத்தடை மாத்திரைகள் : 

அதிகமாக கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும்போது உடலுறவில் நாட்டம் ஏற்படாது. இது குறித்து மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதிலும் முன்னெச்சரிக்கை மற்றும் கவனம் இருக்க வேண்டும். இலைலயென்றால் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும்.

உடல் பிரச்சனை : 

உடல் நலக் கோளாறுகள் காரணமாக தம்பதிகள் இருவரும் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. விருப்பம் இருந்தாலும் அவர்களது உடல் ஒத்துழைக்காது. நோய்களுக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் மற்றும் பயிற்சிகளை கடைபிடிக்க வேண்டிய சூழலில் இருப்பார்கள். இந்த சூழல் தம்பதிகள் செக்ஸ் வைத்துக் கொள்ளவதற்கு தடையாக இருக்கும். வயதாகும்போது உடலுறவு சார்ந்த விருப்பங்களும் மாறும்.

உறவு : 

தம்பதிகளுக்கு இடையே இருக்கும் உறவு முறையும் உடலுறவு வைத்துக் கொள்வதில் முதன்மையானதாக இருக்கும். சண்டை சச்சரவுகள், மனக்கசப்புகள் இருந்தால், உறவு வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

No comments:

Post a Comment