Tuesday, October 19, 2021

பெற்ற மகளையே கொலை செய்த பெற்றோர்கள்..!


ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள செவ்வூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(30). இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள நண்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கௌசல்யாவுக்கும்(22) கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் திருமண வாழ்க்கை நடந்து வந்த நிலையில் கௌசல்யா உடன் பள்ளிப் பருவம் மற்றும் கல்லூரிப் பருவத்தில் நண்பராய் இருந்த காவலர் பார்த்திபனை  ராமநாதபுரத்தில் சந்தித்துள்ளார் .

அப்போது அவரது செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டு சென்ற அந்த காவலர் பார்த்திபன்  தினமும் அவருடன் பேசி வந்துள்ளார். இதையறிந்த கௌசல்யாவின் கணவர் கனகராஜ் கவுசல்யாவை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களுடைய செல்போன் உரையாடல் நிற்கவில்லை. இதனால் கனகராஜ்-க்கும் கௌசல்யாவுக்கும்  அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது நண்பரான பார்த்திபனிடம்  தான் மிகவும் கொடுமைப்படுத்தப் படுவதாகவும் நிம்மதியாக வாழ முடியவில்லை எனவும் கூறியுள்ளார் கவுசல்யா.

உடனே அந்த காவலர் என்னோடு வந்து விடு சந்தோசமாக வாழலாம் என கூறி அழைத்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய கௌசல்யா மதுரையில் தனது நண்பரான காவலர் பார்த்திபனுடன்  வாழ்ந்து வந்துள்ளார். தனது மனைவி காணாமல் போனது குறித்து கனகராஜ் சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த சத்திரக்குடி போலீசார் கௌசல்யா சென்ற கார் நம்பரை வைத்து அதன் மூலம் அவர் எங்கு இருக்கிறார் என அறிந்து அவரைச் சத்திரக்குடி காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அங்கு கனகராஜ் மற்றும் கௌசல்யாவின் குடும்பத்தினரை  வரவழைத்து இதுபோன்ற தவறான செயலில் ஈடுபடக்கூடாது என்றும் சிறிது காலம் உன் பெற்றோருடன் சென்று  அவர்களுடன் இருந்து வர அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கனகராஜ் கோபம் தீர்ந்தவுடன் அவருடன் சமாதானமாகப் பேசி மீண்டும் சேர்ந்து வாழலாம் எனவும் கூறியுள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட கௌசல்யா தனது பெற்றோருடன் நண்டுப்பட்டியில்  கடந்த 4 மாத காலமாக வசித்து வந்துள்ளார்.

தொடர்ந்த உறவு:

ஆனாலும் தொடர்ந்து தனது கள்ளக் காதலனான காவலருடன் அவர் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென கௌசல்யா எலி மருந்தை சாப்பிட்டு மயக்க நிலையில் வீட்டில் இருந்துள்ளார். வயல்வெளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர்கள் மயக்கநிலையில் இருந்த கௌசல்யாவை பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இரண்டு நாட்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கௌசல்யாவை அவரது பெற்றோர் மருத்துவமனையில் தகவல் தெரிவிக்காமலேயே வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

377

அழைத்து வந்த மறுநாள் மீண்டும் கௌசல்யா எலி மருந்தை சாப்பிட்டு இறந்ததாகவும் இதனை யாரிடமும் தெரிவிக்காமல் இவர்களே கௌசல்யாவை ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கால்வாய் பகுதியில் உடலை எரித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அன்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் ஏன் எங்களுக்கு தகவல் சொல்லாமல் இப்படி செய்தீர்கள் எனக்கேட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்து நண்டுப்பட்டி கிராமத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்குள்ள கிராமத்தினரிடம் விசாரணை செய்தனர். பின்பு கௌசல்யாவின் உடல் எரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போலீசார் அங்கிருந்த சாம்பல் மற்றும் தடயங்களை சேகரித்து விசாரணைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரிப்பதற்காக கௌசல்யாவின் பெற்றோரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் திருப்பம்:

அங்கு போலீசார் விசாரித்ததில் தொடர்ந்து எங்களது பேச்சைக் கேட்காமல் குடும்பத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் அவள் கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்ததால் ஆத்திரத்தில் நானும் எனது கணவரும் மூச்சை பிடித்து அமுக்கி கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து தாய் அமிர்தவல்லி மட்டும் தந்தை தென்னரசு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர் பெற்ற மகளையே பெற்றோர்கள் எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment