Saturday, October 16, 2021

மாடுகளுக்கு தீவனத்திற்குப் பதில் சாக்லேட்..? புதிய கண்டுபிடிப்பு

தீவனத்திற்குப் பதில் சாக்லேட மத்திய பிரதேச பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு

கால்நடைகளுக்கு இனிமேல் தீவனம் கொடுக்க வேண்டாம், காட்டில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம், சாக்லேட் கொடுத்தாலே அதிக பால் சுரக்கும்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரை மையமாக கொண்ட கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம், பல்வகை வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் கொண்ட சாக்லேட்டை உருவாக்கியுள்ளது. தீவனம், கால்நடைகள் மேய்ச்சல் ஆகியவற்றிற்கு மாற்றாக இந்த சாக்லேட்டை பயன்படுத்தலாம்.

இந்த சாக்லேட் பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன், கால்நடைகளின் இனப்பெருக்கத்தை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கால்நடைகள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை உதவியுடன் விரைவில் மாநிலம் முழுவதும் வினியோகம் செய்யப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

   

No comments:

Post a Comment