சேலம்: நிர்வாண கோலத்தில், கை, கால்கள் கட்டப்பட்டு பெண் ஒருவர் சூட்கேஸில் சடலமாக மீட்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.. கொலை செய்யப்பட்ட பெண், பாலியல் தொழில் செய்து வந்த நிலையில், எதற்காக இந்த கோர கொலை நடந்தது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவங்கிஉள்ளனர்.
சூட்கேசில் பெண் சடலம்… அதிர வைத்த பயங்கரம்… விசாரணையில் இறங்கிய போலீசார்
சேலத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பெங்களூருவை சேர்ந்த பெண்ணை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து மறைத்து வைத்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் குமாரசாமிப்பட்டியில் சண்முகா அபார்ட்மென்ட் உள்ளது.. இது நடேசன் என்ற அதிமுக பிரமுகருக்கு சொந்தமான அப்பார்ட்மென்ட்.
பதற்றம்
இந்நிலையில், ஹவுஸ் ஓனருக்கு பிரதாப் போன் செய்துள்ளார்.. அதில், தான் சென்னையில் வேலை விஷயமாக இருப்பதாகவும், மனைவி தேஜ் மண்டலுக்கு போன் செய்தால், அவர் எடுக்கவே இல்லை, என்ன ஆச்சு என்று தெரியவில்லை என்று பதற்றத்துடன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, ஹவுஸ் ஓனர் நடேசனும், தேஜ்மண்டல் வீட்டுக்கு சென்றார்.. ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து உடனடியாக நடேசன், சேலம் மாநகர போலீசுக்கு தகவல் அளித்தார்.. அதன்பேரில் போலீசாரும் விரைந்து வந்து, வீட்டு கதவின் தாழ்ப்பாளை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போது, வீட்டின் பரண் மீது ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்துள்ளது... அந்த சூட்கேஸில் இருந்துதான் அதிக நாற்றம் வந்தது. இதையடுத்து, உடனடியாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை பதிவு செய்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தபோது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது.
பாலியல் தொழில்
தீவிர விசாரணை
பரபரப்பு
அதுமட்டுமல்ல, கடந்த மாதத்தில் பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட ஸ்டேஷன்களில் தேஜ் மண்டல் மீது விபச்சாரம் நடத்தியதாக கேஸ் பதிவாகி உள்ளதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.. அப்பார்ட்மென்ட் வீட்டிற்குள் கை, கால்கள் கட்டப்பட்டு, சூட்கேஸில் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் பெரும் பரபரப்பை சேலத்தில் ஏற்படுத்தி வருகிறது.
No comments:
Post a Comment