``திருடச் செல்லும் இடத்தில் அழகான பெண்களைக் காணும்போது `ஈர்ப்பு' ஏற்பட்டுள்ளதா?" எனத் திருடன் மணியன் பிள்ளையிடம் கேள்வி எழுபியுள்ளார் நெறியாளர்.
கேரள மாநிலத்தில் பிரபலமான திருடன் மணியன் பிள்ளை. கேரளத்தின் கொல்லம் பகுதியில் 1950-ம் ஆண்டு பிறந்த மணியன் பிள்ளை 1970-களில் திருடன் ஆனார். 1978-ம் ஆண்டு பெரிய அளவில் கொள்ளையடித்துக்கொண்டு மனைவியுடன் கர்நாடகாவுக்கு தப்பிச் சென்றவர் அங்கு, திருடிய பணத்தில் ஹோட்டல், நிலத்தை லீஸுக்கு எடுத்து லைசென்ஸுடன் புகையிலை விளைவித்து விற்பனை செய்யும் முடிவில் இருந்தார். பிறகு தனது பெயரை சலீம் பாஷா என மாற்றிக்கொண்டார். பின்னர் அவரை சந்திக்கச் சென்ற மனைவியின் சகோதரனால் கேரள போலீஸாரிடம் வசமாகச் சிக்கினார்.
மணியன் பிள்ளையின் கதை மலையாள மொழியில் `மணியன் பிள்ளையுடே ஆத்ம கதா' என்ற புத்தகமாக வெளியானது. அதைத் தமிழில் 'திருடன் மணியன் பிள்ளை' என்ற புத்தகமாக மொழிபெயர்த்ததற்காக எழுத்தாளர் குளச்சல் யூசுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. ஆனால், திருடனின் வாழ்வை உயர்த்திச் சொல்கிறது என அப்புத்தகம் விமர்சனங்களையும் பெற்றது.
இந்த நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் மலையாள (Behindwoods Ice) யூடியூப் சேனலில், திருடன் மணியன் பிள்ளையின் நேர்காணல் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 வெளியானது. அதில் யூடியூப் சேனல் நெறியாளர், ``திருடச் செல்லும் இடத்தில் அழகான பெண்களைக் காணும்போது `ஈர்ப்பு' ஏற்பட்டுள்ளதா?" எனக் கேள்வி எழுப்புகிறார். பெண்களை பாலியல் பொருளாகச் சுருக்கும் அந்தக் கேள்வியைக் கேட்டதோடு மட்டுமல்லாமல், பதிலைப் பெறும் ஆர்வத்தில் சில வார்த்தைகளைக் கூறி திருடன் மணியன் பிள்ளையை உசுப்பேற்றுகிறார் நெறியாளர்.
அந்தக் கேள்விக்கு பதிலளித்த திருடன் மணியன் பிள்ளை, ``ஒருமுறை திருடச் சென்ற இடத்தில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புத்தகம் படித்துவிட்டு அதைத் தலையில் வைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தார். அவரது தகதகக்கும் நிறம் என்னை சுண்டி இழுத்தது. இதையடுத்து கத்தியைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தேன்" எனப் பதில் கூறியிருக்கிறார்.
அத்துடன் விடாத நெறியாளர் அந்த சம்பவம் குறித்து விரிவாகக் கூறும்படி திருடன் மணியம் பிள்ளையை ஆர்வப்படுத்துகிறார். அதற்கு பதிலளித்த மணியன்.. நான் அந்தப் பெண்ணை கற்பழித்து விட்டு வீட்டைவிட்டு வெளியேறும்போது அந்தப் பெண் "முகத்தையாவது காட்டும்படி" கூறியதாகவும் மணியன் பிள்ளை தெரிவிக்கிறார். வேறு எந்தப் பெண்ணையும் பாலியல் தொல்லை செய்ததில்லை எனவும் மணியன் பிள்ளை கூறியுள்ளார்.
No comments:
Post a Comment