Thursday, October 14, 2021

வலி இல்லாமல் ஊசி இல்லாமல் மருந்தை செலுத்தும் லேசர் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு..!

வலி இல்லாமல் ஊசி இல்லாமல் மருந்தை செலுத்தும் லேசர் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

ஊசி இல்லாமல் வலி தராத வகையில் லேசர் தொழில்நுட்பத்தில் மருந்துகளை மனித உடலில் செலுத்தும் வழிமுறையை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பப்புள் கன் என பெயரிடப்பட்டுள்ள இந்த லேசர் கருவி, மருந்தினை குறிப்பிட்ட பதத்தில் சூடாக்கி குமிழிகளாக மாற்றும். பின்னர் இதனை நோயாளிமீது தெளிக்கும்போது அது தோலில் உள்ள நுண் துவாரங்கள் வழியே சென்று செயலாற்றும் என ஆய்வாளர் டேவிட் பெர்னாண்டஸ் கூறுகிறார். கொசு கடிக்கும் நேரத்தை விட பல மடங்கு வேகத்தில் மருந்து உடலில் செலுத்தப்படும் என்றும், இதில் வலியே இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



 

No comments:

Post a Comment