Tuesday, October 12, 2021

அம்மா குளிப்பதை..போனில் லைவ் செய்த குழந்தை..!

அம்மா குளிப்பதை.. தவறுதலாக போனில் லைவ் செய்த குழந்தை.. பதறிபோன இளம்பெண்.. ஷாக்..!

 அம்மா குளிக்கும் வீடியோவை, தவறுதலாக அவரது குழந்தை ஃபேஸ்புக்கில் லைவ் செய்துவிட்ட சம்பவம் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.

குழந்தைகள் தற்போது பெரும்பாலும் செல்போனிலேயே பொழுதை கழித்து வருகிறார்கள்.. மைதானங்களிலும் தெருக்களிலும், மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவது குறைந்து போய்விட்ட நிலையில், எந்நேரமும் செல்போன் கையுமாகவே உள்ளனர்.

புது புது விளையாட்டுக்களை செல்போனில் அப்லோடு செய்து, அதிலேயே மூழ்கிவிடுகின்றனர்.. இதை பெரும்பாலான பெற்றோர்களும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.. அந்த வகையில் 2 சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளது..

அந்த இளம்பெண் அமெரிக்காவை சேர்ந்தவர்.. இவருக்கு ஒரு பெண் குழந்தை.. அவளது பெயர் பிரியான்னா.. ஒருநாள், தன்னுடைய செல்போனை அந்த குழந்தையிடம் தந்துவிட்டு இளம்பெண் குளிக்க சென்றுள்ளார்.. ஆனால், குழந்தைக்கு செல்போனை சரியாக பயன்படுத்த தெரியவில்லை.. இருந்தாலும் விளையாடுவதற்குரிய ஆப்பை அதில் டவுன்லோடு செய்து தந்துவிட்டு, பாத்ரூமுக்குள் சென்றுவிட்டார்.

அந்த செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்த பெண், திடீரென அதன் டச் ஸ்கிரீனை தொட்டுவிட்டாள்.. அதனால் வீடியோவும் மறைந்துபோய்விட்டது.. அதனால், மறுபடியும் வீடியோவை வரவழைக்க செல்போனை நோண்டி உள்ளார்.. ஆனால், வீடியோ வரவில்லை.. இதனால் பாத்ரூமில் குளித்து கொண்டிருந்த தன்னுடைய அம்மாவிடம் சொல்லவும், அவரும் குழந்தையை போன் எடுத்து கொண்டு உள்ளே வர சொன்னார்.. போனை வாங்கி வீடியோவை சரி செய்து தந்தார்..

பதறிய பெண்

அப்போது திடீரென இன்ஸ்டாகிராம் நோட்டிபிகேஷன் வந்தது.. அதை பார்த்ததும் அந்த பெண் பதறிவிட்டார். இன்ஸ்டாகிராம் ஆப் லைவ்-வில் இருந்துள்ளது.. உடனடியாக அதை தடுத்து நிறுத்தி ஆஃப் செய்துவிட்டார். ஆனாலும் அந்த வீடியோ அதற்குள் வைரலாகி விட்டது. தனக்கு நடந்த இந்த செய்தி குறித்து அந்த இளம்பெண் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.. இதற்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.. குழந்தைகளிடம் செல்போன் தரவும், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்களை ஒவ்வொரு தாய்மார்களும் பதிவிட்டு வருகின்றனர்..

ஃபேஸ்புக் லைவ்

அதில் ஒரு பெண் சொல்கிறார், "இப்படித்தான், நான் பாத்டப்பில் குளித்து கொண்டிருந்தேன்.. அப்போது என் மகளும் ஃபேஸ்புக் லைவை ஆன் செய்துவிட்டாள்.. நான் பதறி போய் அதை நிறுத்தினேன்" என்று தன் அனுபவத்தை கமெண்ட்டில் தெரிவித்துள்ளார். மேலும் பலரோ, குழந்தைகளிடம் செல்போன்களை தருவதை தவிர்க்க வேண்டும் என்றும், அப்படியே செல்போன் தந்தாலும் குழந்தைகளுக்கான மோடை மட்டும் செல்போன் அமைப்பில் வைத்துக் கொடுத்தால், அவர்களால் வேறு ஆப்களை பயன்படுத்த முடியாது என்றும் டிப்ஸ்களை தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment