Tuesday, October 12, 2021

யார் மனசும் நோகக்கூடாது - எல்லா சின்னத்திலும் வாக்களித்த நபர்..?



 

எல்லா சின்னத்திலும் வாக்களிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

வடிவேலு பட காமெடி போல... கொடுத்த வாக்கை காப்பாற்ற “தென்னைமரத்துல ஒரு குத்து... ஏணியில ஒரு குத்து” என வாக்குச்சீட்டில் உள்ள மாம்பழச்சின்னத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து சின்னங்களுக்கும் வாக்களித்துள்ளார் ஒருவர்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. 
இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.  அப்போது, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச் சீட்டில் இருந்த 4 சின்னங்களுக்கும் ஒரு நபர் வாக்களித்துள்ளார். 

வடிவேலு பட காமெடி போல... கொடுத்த வாக்கை காப்பாற்ற “தென்னைமரத்துல ஒரு குத்து... ஏணியில ஒரு குத்து” என வாக்குச்சீட்டில் உள்ள மாம்பழச்சின்னத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து சின்னங்களுக்கும் வாக்களித்துள்ளார் அந்நபர். 
இதுதொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

No comments:

Post a Comment