மனிதனை
மறுக்கும் யுகம்
இயற்கையை எதிர்த்துப் போராட முடியாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்கள்
செத்து மடிந்தன. இயற்கையை எதிர்த்து நின்று போராடி ஓரளவு வெற்றி கண்டவன் மனிதன்
மட்டும்தான். டன் கணக்கு வெயிட்டோடு இருந்த ஆளானப்பட்ட டைனோசர் கூட இயற்கையை
எதிர்கொள்ள முடியாமல் அழிந்து போயின. மனிதன் இயற்கையை வெற்றி கொண்டதற்கான
சூத்திரம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் உழைப்பு. உழைப்பு என்ற ஒரே ஒரு ஆயுதத்தை
வைத்துக்கொண்டு மனித இயற்கையை வென்றான். மனிதன் இயற்கையை வென்றதற்கு அவனது ஆறறிவு,
இன்னொரு முக்கிய காரணம். பூமியில் முதல் உயிரினம் ஆர்ச்சியா என்கிற நுண்ணுயிரி. இது பூமியில்
வாழ்ந்ததது 30கோடிஆண்டுகள்.
அதற்குபிறகு, ஆர்ச்சியா பரிமாண வளர்ச்சியடைந்து
சைனோபாக்ட்ரியா அது பூமியில் வாழ்ந்தது130
கோடி ஆண்டுகள். இதற்குபிறகு எரியோபிக் பாக்ட்ரியா. இது கொஞ்சம் கொஞ்சமாக
வளர்ச்சிடைந்து. மீன் என்கிற நிலைக்கு வந்து மீனின் துடுப்புகள் கை கால்களாகி இகியோசெடாக்கா
என்ற நான்குகால் உயிரினமாக மாறியது. இதன்பிறகு நான்கு கால்களால் தாவித்திரியும்
டார்சா. இது குரங்கின் முன்னோடி. அதன் பிறகு, தத்தித்தாவி நடந்து மனித சாயல் கொண்ட
ஹோமிடே என்ற குரங்கு. அடுத்து நிமிர்ந்து நடக்கக்கூடிய ஹோமோ ஏரக்ட், பிறகு ஹோமோ
சேப்பியன்ஸ். நாம் குரங்கிலிருந்து மனிதனாக உருமாற சுமார் ஒன்றரை கோடி வருடங்கள்
பிடித்திருக்கிறது.
நாமும், குரங்கும், குறிப்பாக சிம்பன்சி
குரங்கும் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்புதான்
பிரிந்தோம். நமக்கும் சிம்பன்சிக்கும் இருந்த பொது மூதாதையரின் பெயர் ஆர்டிபித்திகஸ்.
நாமெல்லாம் ஆர்டிபித்திகஸ் என்ற மூதாதையரிடம் இருந்தபோது அதற்கு இருந்த
குரோமோசோம்களின் எண்ணிக்கை 24. இந்த 24 குரோமோசோம்கள் 23 ஆக குறைந்த போதுதான் நாம் மனித வடிவம் கொண்டோம்.
நமது மனித மூளையின் வயது 40,000 வருடம். இந்த 40,000 ஆண்டு பரிணாம வளர்ச்சியில்
மூளையில் மையலின் என்ற மெலிதான சவ்வு மட்டும் வளர்ந்திருக்கிறது. மனித மூளையின்
மொத்த எடை ஒன்றரை கிலோ கிராம்.10,000 கோடி நியுரான்கள்
என்கிற நரம்புச் செல்களைக் கொண்டுள்ளது நமது மூளை.
கி.பி.15 ஆம்நூற்றாண்டில்
ஹிப்பாகிரடிஸ் என்கிற கிரேக்க மருத்துவர் மூளையைப்பற்றி ஆராய்ச்சி செய்து சுகம், துக்கம்,
காண்பது, கேட்பது இவை அனைத்திற்கும் காரணம் மூளைதான் என்றார். மனிதன் தனது மூளைத்திறனால் இந்த உலகத்தை தனக்கு ஏற்றவாறு தன் அறிவினாலும், உழைப்பினாலும், மாற்றி
கொண்டான். உலகத்தில் தலைசிறந்த விலங்கு மனிதன்தான். சன்சூ என்கிற சீனத் தத்துவஞானி கூட ‘’அறிவுதான்
சக்தி’’ என்று சொன்னார்.
இவ்வளவு திறனும் நீண்ட நெடிய வரலாறும் கொண்ட
மனிதன் இந்த விஞ்ஞான யுகத்தில் அவனும், அவனது சாராம்சமும் கேள்விக்குள்ளாகி நிற்கிறது.
மனிதனுக்கான தேவையை விஞ்ஞானம் கேள்விக்குள்ளாக்கிவிட்டது. நவீன விஞ்ஞானம் மனிதனை மறுப்பது
மட்டுமல்லாமல் மனிதமற்ற( in human ) நிலையை உருவக்கியுள்ளது.
மனிதன் தன்னை விஞ்ஞானத் தொழில்நுட்பங்களிடம் ஒப்படைத்துவிட்டான்.
இதனால், விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாகிவிட்டான். ஆம், கார் ஓட்டுபவன் அந்தக் கார் இயந்திரத்தின்
ஒரு பகுதியாகிவிட்டதுபோல, மனிதன் நவீன தொழில்நுட்பங்களிடம் தன்னை இழந்துவிட்டு சாரமற்றவனாகிவிட்டான்.
இனி, மனிதனின், அவசியத்தையும் தேவையும், இருப்பையும் நவீன விஞ்ஞானக்
கண்டுபிடிப்புகள் பார்த்துக்கொள்ளும், இயற்கை படைத்த முழு சாரம்சமுடைய மனிதனை நவீன விஞ்ஞானம் சாரம் அற்றவனாக செயலிழக்க
செய்துவிட்டது.
ஆம், 40,000 வருடம் வரலாறு
கொண்ட மனிதனின் மூளையின் வேலை என்பது பார்ப்பதை, கேட்பதை, ருசிப்பதை, அலசி
ஆராய்ந்து தரம் பிரித்து சேகரித்து வைத்துக் கொள்வதைத்தான் நாம் ஞாபகசக்தி
என்கிறோம். ஞாபகசக்தி என்பது என்ன..? நினைவுகளின் தொகுப்பு. மனிதன் காடுகளில்
வாழ்ந்த காலத்திலிருந்து நிலவில் கால்பதிந்துள்ள நவீன விஞ்ஞான காலம் வரை அவன்
வாழ்ந்த காலத்தின் தொகுப்பைத்தான் ஞாபகசக்தி என்கிறோம். ஒரு மனிதன்
பிறந்ததலிருந்து என்னென்ன பார்த்தானோ, கேட்டானோ, ருசித்தானோ, நுகர்ந்தானோ, அதெல்லாம்
அப்படியே மூளையில் பதிவாகி அவன் வைத்திருந்தான் என்றால் எப்படி இருக்கும் என்று
யோசித்துப் பாருங்கள்.
உங்களுக்கு தற்போது 30 வயது என்று
வைத்துக்கொள்ளுங்கள் உங்களது சின்ன வயதிலிருந்து இது நாள் வரை அச்சுப் பிறழாமல்
உங்கள் மூளையில் பதிவாகி இருக்கிறது. யாராவது உங்களிடம் வந்து 1986 -ஆம் வருடம்
பிப்ரவரி 5 ஆம் தேதி காலையிலே என்ன சாப்பிட்டே..? என்று
கேட்க.. நீங்களோ ஆறு இட்லி.. கொஞ்சம் புதினா சட்டினி.. அந்தச் சட்டினிலே உப்பு கொஞ்சம் கம்மியா.. இருந்துச்சு.. என்று
நீங்கள் சொன்னால் எப்படி இருக்கும். இப்படி எந்த வருடத்தில், எந்த தேதியில், எந்த
நேரத்தில், என்ன செய்தீர்கள் என்று பட்டுப் பட்டென பதில் சொன்னால் ஆச்சரியமாக
இருக்கும் அல்லவா..?
மனித மூளைக்கு அந்த சக்தியெல்லாம் கிடையாது. சாத்தியமும்
கிடையாது. வாழ்க்கைக்கு அதி அவசியமானதையே நாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். இது தான்
மனித மூளையின் சாராம்சம். இப்படித்தான் மனித மூளை இருக்க முடியும், இயங்க
முடியும். ஆனால், நவீன விஞ்ஞானம், நான் மேலே சொன்னது போல் முயற்சி எடுத்து
வருகிறது. எப்படி? நமது மூளையில் ஒரு ஓரத்தில் ஒரு இன்ச் அளவுள்ள சிலிக்கன் சிப்களை
(chip)
பதித்து நமது மூளைக்கு வந்து போகும் அத்தனை தகவல்களையும் பதிவு செய்துவிட்டால்
பிறகு, நமக்கு தேவைப்பட்டபோது வெளியில் எடுத்து அந்த சிலிக்கன் சிப்பை கம்பியூட்டருக்குள் கொண்டு வந்து அதில்
சேகரிக்கப்பட்ட அத்தனை தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்கள் காதலிக்கு கொடுக்க நினைத்த முத்தம்.
இன்னும் திருப்பிக்கட்டாத கடன், நீங்கள் பார்த்த மிஷ்கின் படம், கேட்ட இளையராஜா
இசை, இரவு வந்துபோன பேய்க் கனவு இப்படி எல்லா தகவல்களும் பதிவாகி இருக்கும். இது
கிட்டதட்ட சி,டி போலத்தான். தேவைப்படும் போதெல்லாம் மீண்டும், மீண்டும் போட்டுப்
பார்த்துக் கொள்ளலாம். மேலும் மூளைக்குள் இருக்கும் சிலிக்கன் சிப்பில் ஒரு
டிரான்ஸ்மீட்டரைப் இணைத்து மூளையை மூடியுள்ள கபால ஓட்டில் எங்கேயாவது ஒரு ஓரத்தில்
ஒரு மில்லி மீட்டர் நீளமுள்ள ஆண்டனாவைப் பொருத்திவிட்டால் போதும்,
நீங்கள் ஒயின்ஸ் ஷாப்பில் உட்கார்ந்து சோமபானம்
சாப்பிட்டால் உங்கள் வீட்டில் உள்ள கம்பியூட்டர் மூலம் உங்கள் பொண்டட்டிக்குத் தெரிந்து
விடும். அப்புறம் நீங்க வீட்டுக்கு வந்ததும் ருத்ர தாண்டவம்தான். அன்றைக்கு நைட்
பட்டினிதான்..! ஒரு வேலை தப்பித் தவறி அந்த மூளையில் உள்ள மனிதனின் சிலிக்கன்
சிப்பை சம்மந்தப்பட்ட நபரின் எதிரி கைப்பற்றிவிட்டால் என்ன வென்று சொல்வது,
என்னவாகும், ஐ.எஸ்.ஐ தலைவனின் சில்லிக்கன் சிப்பை அமெரிக்கா கைப்பற்றிவிட்டால்
ஐ.எஸ்.ஐ. தலைவனின் திட்டமெல்லாம் அம்பேல்தான்.
ஒரு மனிதனின் மூளையின் சிந்தனையும், செயளையும்,
எங்கோ ஒரு அறையில் கம்பியூட்டர் சேகரித்துக் கொண்டிருந்தால் பிறகு, நமது மூளையின்
சாராம்சம்தான் என்ன..? 40,000 வருடம் அனுபவமுள்ள மூளையின் சாராம்சம்
போய்விடுவதில்லையா..? நமது மூளையின் அத்தனை தகவல்களும் எங்கோ ஓரிடத்தில்
சேகரிக்கப்பட்டுவிட்டால் மூளை வெறும் கூடுதான். மூளையில்லா மனிதன் வெறும்
பிண்டம்தான். அப்ப.. கூடுவிட்டு கூடுபாய்வது என்பது இதுதானோ..! இதை நவீன விஞ்ஞானம்
சாத்தியமாக்கிவிட்டால் மனிதன் என்பவனே கேள்விக் குறிதான் என்று ஏளனமாகச்
சிரிக்கிறது நவீன விஞ்ஞானம்.
நவீன விஞ்ஞானம் மனித
மூளையை கேள்விக்குள்ளாக்கிவிட்டது. மட்டுமல்ல, இன்னும் எதில் எதிலெல்லாம் கை
வைத்திருக்கிறது தெரியுமா..? அதையும் பார்க்கலாம், 1996
–ல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இயான் வில்மட் என்ற
உயிரியல் விஞ்ஞானி ஒரு வெள்ளை நிற செம்மறி கருப்பு நிற செம்மறி ஆட்டினையும் இணைத்து வெள்ளை நிறப்பெண்
செம்மறி ஆட்டின் மாதிரியை உருவாக்கினார். இப்படி உருவாக்கும் முறைக்கு
‘’குளோனிங்’’ என்று பெயர். இவர் உருவாக்கிய அந்த வெள்ளை நிறப்பெண் செம்மறி
ஆட்டிற்கு பெயர் ‘’டாலி.’’ டாலியை உருவாக்கிய அதே மாடலில் மனிதனையும் உருவாக்க
நினைத்து.. 1998-ல் அமெரிக்கா மாசசூ ட்ஸ் நகரில் உள்ள செல் தொழில் நுட்ப
உயர்மட்ட ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் மனிதனை உருவாக்கினர்.
பின்பு உலகம் முழுவதும்
எழுந்த பலத்த எதிர்ப்பு கோஷங்களினால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. சரி.. ஒரு முழு
மனிதனைதான் உருவாக்க முடியவில்லை. ஸ்பேர் ஸ்பார்ட்ஸ்களை உருவாக்குவோமே என்ற ஐடியா
முன்னுக்கு வந்தது. என்ன ஸ்பேர் ஸ்பார்ட்ஸ் என்கிறீர்களா? மனிதனுக்குத் தேவையான
கிட்னி, கல்லீரல் போன்ற ஸ்பேர் ஸ்பார்ட்ஸ்களைத்தான். அமெரிக்காவின் வின்கான்சின்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் தாம்சன் ஸ்டெம் செல் என்ற ஆராய்ச்சியைத்
துவக்கினார். இந்த ஆராய்ச்சி எப்படி என்றால் பெண் முட்டையில் உட்கருவை (நுக்ளியஸ்)
நீக்கிவிட்டு இன்னொரு ஆணின் விந்தணுவை செல்லின் உட்கருவுடன் இணைத்து கரு உருவாக்கப்படுகிறது.
கரு தரித்த 7,8, வாரங்களில் எம்பிரியோ (முழுக்கரு) நமக்கு தேவையான மரபணு
செல்களுடன் சேர்த்து சில குறிப்பிட்ட செல்களைப் பிரித்தெடுத்து அவற்றின்
வளர்ச்சிப்பாதையை மாற்றி அமைத்து நமக்குத் தேவையான செல்களையோ அல்லது சிறுநீரகம்,
இதயம் போன்ற உறுப்புகளை உண்டு பண்ணக்கூடிய செல்களையோ உருவாக்குவதுதான் இந்த ஸ்டெம் செல் ஆராச்சியின்
நோக்கம். சுருக்கமாகச் சொன்னால், இச்சோதனையின் வெற்றியாக டாக்டர் ஜேம்ஸ் தாம்சன்
எம்பிரியோனிக் ஸ்டெம் செல்கள் மூலம் இதயத் தசையை உருவாக்கிக்காட்டினார்.
இதேபோல், டாக்டர் ஜோகன் என்பவர் மனித மூளையின் செயல்பாட்டுக்கு
அவசியமான நியூரான் செல்களை உருவாக்கி காட்டினார். ஆனால், அமெரிக்க தேசிய சுகாதார மையத்தின்
இயக்குனர் இந்த எம்ப்ரியோனிக் ஸ்டெம் செல் ஆராய்சிக்கு நிதி உதவி வழங்க இருப்பதாக
அறிவிக்க.. இதுவும் ஒரு வகையில் குளோனிங் தான் என்று சொல்லி ஆராய்ச்சியை நிறுத்திவிட்டது அமெரிக்க அரசு. ஆனால் விஞ்ஞானிகளோ
நாங்கள் தானமாகவோ அல்லது வேண்டாம் என்று சொல்லி கைவிடப்பட்ட கருவிலிருந்துதான்
இந்த ஸ்டெம் செல் வளர்ச்சி முறையை மேற்கொள்கிறோம் என்று சமாதானம்
சொல்லிப்பார்த்தார்கள். அமெரிக்கா அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
மைக்கேல் வெஸ்ட் என்ற
ஆராய்ச்சியாளர் வேறு மாதிரி யுக்தியை கையாண்டு பசுவின் கரு முட்டையில் மனிதனின்
உயிர் அணுவில் உள்ள நுயூக்ளியசை புகுத்தி கரு நிலைக்கு வந்ததும் அதிலிருந்து
செல்களை பிரித்தெடுத்து உடல் உறுப்புகளுக்கு அவசியமான எம்பிரியோ ஸ்டெம் செல்களை
உருவாக்கினார். அவர் உருவாக்கியதை ஒரு பத்திரிகையில் வெளியிட.. அன்று அமெரிக்க
அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்த ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு தெவித்தார்.
மொத்தத்தில் இந்த ஆராய்சிகள் பற்றி சொல்ல வேண்டுமென்றால், மனித உருவமே இல்லாமல் வெறும்
உடல் உறுப்புகளை உருவாக்கி, தேவைப்படும் போது எடுத்துப் பொருத்திக் கொள்வது
என்பதுதான் இதன் முக்கிய நோக்கம்.
உறுப்புகளை
ஸ்டெம் செல் முறையில் உருவாக்கி புத்தம் புதிதான, பரிசுத்தமான, கிட்னி, இதயம்,
நுரையீரல், கல்லீரல் போன்றவற்றை பெறலாம். பெற்றதை தேவையான நோயாளிக்குப்
பொருத்தலாம். இந்த முறைக்கு மறு அமைப்பு சித்தாந்தம் (resettheary) என்று பெயர். எனவே, ஒருவனுக்கு கிட்னி கோளாறு என்றால்
அந்த நபருக்கு வேறு எந்த ஒரு நபரிடமிருந்து கிட்னியை வாங்கிப் பொருத்தினால் அது
அவனுக்கு ஆயுசு முழுவதும் இருக்குமா..? என்று தெரியாது. ஏனென்றால், வாங்கிப்
பொருத்துகின்ற கிட்னி ஏற்கனவே பல ஆண்டுகள் செயல்பட்டதால் குறைபட்டிருக்கும்.
இப்படி மற்றவர்களிடம்
வாங்கிப் பொருத்துகின்ற எல்லா உறுப்புகளின் நிலையும் இதுதான். இதனால்
எம்பிரியோனிக் ஸ்டெம் செல் முறையில் சுடச் சுடச் சுத்தமான உடல் உறுப்புகளை
உருவாக்கலாம். இப்படி உருவாக்கப்படும் அத்தனை உறுப்புகளும் மனிதனுக்கு
பொருத்தப்பட்டால் அந்த நபர் மேலும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும். இப்படி
கண், காது, மூக்கு, நுரையீரல், கல்லீரல் என்று உறுப்புகளை பொருத்திக் கொண்டே
வந்தால் அந்த மனிதனின் உறுப்புகள் புதிதாகின்றன. புதிதாகின்றபோது அவனும்
புதிதாகிறான். மனித உடல் உறுப்புகளை மாற்றிப் பொருத்திப் பார்த்த விஞ்ஞானம் மனித
உயிரின் ரகசியத்தையும் கண்டறிந்திருக்கிறது.
நமது உடம்பில் உள்ள
ஜீன்களில்தான் உடம்பில் கோடான கோடி செல்களில் மையத்தில் நுயூக்ளியஸ் என்ற உட்காரு
உள்ளது. இந்த உட்கருக்களின் மையத்தில் ஜீன்கள் உள்ளது. இந்த ஜீன்களில் டி.என்.ஏ
என்பது இருக்கிறது. இது சுழல் வடிவம் கொண்ட ஏணி போன்ற அமைப்புடையது. இதில்தான்
நமது ரகசியங்கள் இருக்கிறது. நமது அம்மா/அப்பாவினைப் போல நம்முடைய உடல்
உறுப்புகளும் தோற்றமும் இருப்பதற்கான ரகசியங்கள் இதில்தான் பொதிந்து இருக்கின்றன.
இதை கொஞ்சம் கொஞ்சமாக அலசி ஆராய்ந்து படித்து முடித்திருக்கிறார்கள்.
எந்த ஜீன் கிட்டினியை
உருவாக்கிறது. எந்த ஜீன் கேன்சர் நோயை உருவாக்குகிறது. அப்பாவைப் போல் நீண்ட
மூக்கை மகனுக்கு உருவாக்கும் ஜீன் எது? இப்படி நிறைய விசயங்களை தேடிப்
படித்ருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு 50 ஆயிரத்திலிருந்து லட்சம் வரை ஜீன்கள் இருக்கிறது. இந்த ஜீன்களின்
ரகசியங்களை ஆராய தி ஹியூமன் ஜீனோம் ப்ராஜெக்ட் (thehuman genome project) என்ற பெயரில் ஐம்பது மில்லியன் டாலர் செலவில் உலகின்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சித் திட்டத்தை உருவாக்கி 1990-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஜீன்களின் ரகசியத்தை கண்டு
அறிந்திருக்கிறார்கள்.
கேன்சர் வருவதற்கான ஜீன்களை
கண்டறிந்து அதை வெட்டி நீக்கிவிட்டால் கேன்சர் வியாதி தடுக்கப்பட்டு அவரது வயது
நீட்டிக்கப்படுகிறது. ஆக, நவீன விஞ்ஞானம் உயிரின் ரகசியத்துக்குள்ளும் கை வைத்து
மனித உயிரின் ரகசியத்தை வெளிக்கொண்டுவந்து
வெட்ட வெளிச்சமாய் ஆக்கிவிட்டது. ஒரு கம்பெனியைப் போல் மனித உடல் உறுப்புகளை
உருவாக்குவது, உருவாக்கி, மாற்றுவதில் ஆரம்பித்து ஜீன்களை படிப்பது, வெட்டி நீக்கி
மீண்டும் ஓட்டுவது என்று, இப்படி மனித உடலில் எல்லா சாரம்சங்களையும் ஒரு
புத்தகத்தைப் போல் திறந்து விரித்து வைத்திருக்கிறது நவீன விஞ்ஞானம்.
இயற்கை உருவாக்கி
கொடுத்த நோய் படாத, பிழை இல்லாத, குறைபடாத ஆதர்ச மனிதன் இப்போது எங்கே?
எல்லாவற்றையும் விஞ்ஞானத்திடம் பறிகொடுத்துவிட்டு மனிதன் சுயத்தை இழந்து
நிற்கிறான்.
No comments:
Post a Comment