ராணுவம், போலிஸ், சட்டம், நீதிமன்றங்கள் இவை எல்லாம் அரசின் வன்முறைக் கருவிகள் என்றார் காரல் மார்க்ஸ். மார்க்ஸின் சித்தாந்தத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் அதிக கவன ஈர்ப்புக்கு வந்தது பின் நவீனத்துவம் என்ற கோட்பாடாகும். பின் நவீனத்துவாதிகள் மார்க்சின் மேற்கண்ட வன்முறைக் கருவிகளைப் பரந்துபட்ட அரசியல் என்றார்கள். அதாவது micro politics என்றார்கள்.
சமூகத்தில்
நாம் பார்க்கும் எல்லாமே ஒரு பரந்துபட்ட அரசியலின் வன்முறை வடிவங்கள்தான். நாம்
இன்னும் நுட்பமாகப் பார்த்தால் பரந்துபட்ட அரசியலுக்குள் பொதிந்திருக்கும்
நுட்பமான நுண் அரசியலைக் கண்டறியலாம். ஒரு ஆசிரியன்-மாணவர் மீது செலுத்தும்
அதிகாரம், ஒரு சிறை அதிகாரி கைதிகள் மீது செலுத்தும் அதிகாரம், இப்படிப் பல அதிகாரத்தின்
வன்முறைகள் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றன. இந்த அரசியலுக்குப் பெயர்தான்
நுண் அரசியல்.
அதாவது மைக்ரோ பாலிடிக்ஸ் (micro politics) என்று உலகுக்கு அறிவித்தனர்.
தொழில்
புரட்சியிலிருந்தே முதலாளித்துவம் துவங்குகிறது. எல்லாவற்றையும் பண்டமாகப்
பார்ப்பது முதலாளித்துவத்தின் குணம். முதலாளித்துவம் நோயாளியையும் மருந்தையும்
பண்டமாக பார்க்கிறது. முதலாளித்துவம் வளர வளர மருத்துவத்தில் ஒரு வேலைப்பிரிவினையை
உருவாக்கியது. அதுவரையிலும் மருந்து எழுதுபவர், மருந்து
தயாரிப்பவர், மருந்தை விநியோகிப்பவர் எல்லாம் ஒருவராகவே இருந்து வந்ததை மாற்றி
மருத்துவத்தில் ஒரு வேலைப் பிரிவினையைக் கொண்டு வந்தது. நோயைக் கண்டறிய
மருத்துவர்களையும், மருந்து தயாரிக்க தொழில்சாலைகளையும், மருந்து விற்க கம்பெனிகளையும்
முதலாளித்துவம் லாப நோக்கோடு உருவாக்கியது. மருத்துவனை ஒரு மனிதன் என்கிற
நிலையிலிருந்து ஒரு அதிகாரியாக (medical officer) மாற்றியது.
ஸ்டெதாஸ்கோப் |
முதாளித்துவம்
கொண்டுவந்த நவீன மருத்துவம். மருத்துவன் அதிகாரம் செலுத்துவனாகவும் நோயாளி அதிகாரத்தை
ஏற்பவனுமாக ஆக்கி வைத்திருக்கிறது. நவீன மருத்துவம் மனித உடலை ஒரு உயிரியல்
அமைப்பாகப் பார்க்காமல், ஒரு எந்திரத் தொகுப்பாகப் பார்க்கிறது. ஒரு குறிப்பிட்ட
உடல் உறுப்பு பலவீனமானால், அதை ஒரு எந்திரத்தின் பழுதடைந்த பாகம் போல் நினைத்து
எந்திரம் பழுது பார்க்கப்படுவதுபோல், உடல் உறுப்பை மாற்றுதல், பழுது நீக்குதல்,
வழியைத் தணித்தல், இப்படி ஒரு மனிதனின் உடம்பை எந்திரத்தைப் போல் பாவிக்கிறது.
மனிதன் ஒருஆறறிவு ஜீவி, உயிரோட்டமுள்ள ஒரு
உயிரியல் அமைப்பு என்பதை மறுக்கிறது.
மருந்தைச் சந்தை
பொருளாக்கி அதற்கு விளம்பரங்கள், அந்த மருந்துகளை விற்க முதாளித்துவ அதிகார
வர்க்கத்துக்குரிய லஞ்ச-லாவண்யங்கள் என்று மருந்துகளைப் பிணிதீர்க்கும் பொருள்
என்பதற்குப் பதிலாக அது கொள்ளை லாபம் பார்க்கும் ஒரு துறையாக முதலாளித்துவத்தின்
லாபவெறி கொண்டுவந்து நிறுத்திருக்கிறது. மேலும் ஆங்கில மருந்துகளைப் பரிசோதிக்கும்
பரிசோதனைக் கூடங்களாகக் மூன்றாம் உலக(third world) அப்பாவி மக்களைப் பயன்படுத்துகிறது. (பார்க்க
‘’ஈ’’திரைப்படம்) மருத்துவத்துறை அதிகார வர்க்கத்தின் ஒரு கருவியாக, அப்பாவி
மக்கள் மீது ஏவுகிறது முதலாளித்துவம்.
ஒரு பெண்
கர்ப்பம் அடைந்து குழந்தைபெற முடியாமல் போகும்போது அவளது உடம்பைக் கத்தி கொண்டு
அவளது வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுப்பது மிகப் பெரிய வன்முறையாகும்.
நீங்களோ, நானோ, ஒரு பெண்ணின் உடம்பைக் கத்தியால் கிழித்தால் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 307-க் காட்டும் நம்மை ஆளும் அரசுகள். ஒரு பெண்ணின் உடலைக்
கத்திக்கொண்டு கிழிப்பதை மகப்பேறு என்கிறது. ஒரு பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய 12
அடிப்படை சத்துகளும், சுகாதாரவாழ்வு, சத்துள்ள உணவு இப்படி எதுவும் கிடைக்காத
இந்தச் சமூக அமைப்பில், மகப்பேறில் பெண் இறந்து போனால் அது கடவுளின் செயல்
என்கிறது. இந்த லாப வெறிக் கொடுமைகளுக்கெல்லாம் மாற்றாக உலகம் முழுவது எந்த லாப
நோக்கமும் இல்லாமல் மாற்று மருத்துவ முறைகள் அந்தந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப
பயன்படுத்தப் பட்டு வருகிறது
டாக்டர். சாமுவேல் ஹானிமன் |
அதே கொயினா
மருந்தைத் தனது பரிசோதனைக்கு எடுத்துக் கொண்டார். கொயினா மருந்தை அவரே அதிக அளவில்
சாப்பிட்டார். விளைவு, ஆரோக்கியமாக இருந்த அவருக்கு மலேரியா சுரம் ஏற்பட்டது. இது
அவருக்கு ஆச் சார்யமாக இருந்தது. இந்தச் சுய பரிசோதனை ஹானிமனுக்கு ஒரு விஷயத்தை
தெளிவு படுத்தியது. ஒரு குறிப்பிட்ட வியாதிக்கென்று தயாரிக்கப்பட்ட மருந்தை வியாதி
இல்லாத, ஆரோக்கியமான ஒரு நபர், அதிகமாக உட்கொண்டால் அந்த மருந்து, அதே வியாதியைப்
போன்ற விளைவுகளை அவருக்கு உண்டாக்குகிறது என்ற முடிவுக்கு அவர் வந்தார். ஒரு
நோயைப் போன்றே விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மருந்தை நீர்க்கச் செய்து சிறிதளவு கொடுத்தால்
நோய் குணமாகிவிடும். இது தான், ஹானிமன் நோயைத் தீர்ப்பதற்காக உருவாக்கிய மருத்துவ
விதி.
நோய் மாதிரியே
நோய்க் குறிகளை உண்டாக்கும் ஒரே ஒரு மருந்தை மிக.. மிக.. நீர்த்த நிலையில்
கொடுத்தால் நோய் நீங்கும். மேலும், மருந்தை எந்த அளவிற்கு நீர்க்கச் செய்கிறோமோ
அந்த அளவிற்கு அதன் வலிமை அதாவது, வீரியம் அதிகமாகிறது. ஹோமியோபதி வைத்திய
முறைக்கும், ஆங்கில வைத்திய முறையான அலோபதி வைத்திய முறைக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு
நோய்க் கிருமி ஒருவனைத் தாக்கும்போது அந்த வியாதிக்கு ஒரு பொதுப் பெயரைச் சூட்டி
வைத்தியம் பார்ப்பது அலோபதி முறை. ஆனால், ஹோமியோபதி நோயாளியின் தனித்தன்மை
கணக்கில் எடுத்துகொள்ளப்படுகிறது. நோயாளியின் உடல்வாகு, பாரம்பர்யம்,
சுற்றுச்சூழல், மனநிலை இப்படி எல்லாவற்றையும் கணக்கில்கொள்கிறது.
ஒரே
நோய்க்கிருமி ஆயிரம் பேரைத் தாக்கினாலும் ஒவ்வொருவருடைய தனித்தன்மையும் கணக்கில்
எடுத்துக் கொள்கிறது. இந்தக் கிருமி தாக்கினால் இன்ன வியாதி என்று பொது பெயரிட்டு
அழைப்பதில்லை. அலோபதி ஒரு வியாதிக்கு இரண்டு, மூன்று, மருந்துக்கு மேல் சிபாரிசு
செய்வதில்லை. அலோபதி வைத்தியனுக்கு இருக்கிற சுதந்திரம் மருந்தின் அளவைக் கூட்டி
அல்லது குறைத்துக் கொடுக்கலாம் அவ்வளவுதான். ஹோமியோபதி நோய்க்கு பொது பெயரிட்டு
அழைப்பதை மறுத்து, நோயாளியின் சகல விசயங்களையும் கவனத்தில் கொண்டு பல
மருந்துகளையும் எடுத்துக்கொண்டு, நோயாளியின் தனித்தன்மையின் அடிப்படையில் ஒரு
மருத்துவருக்குக் கிடைக்கிற விடுதலை ஒன்றுக்கு - இன்னொன்று மாற்று என்பதைவிட பல
மாற்றுகளை முன்வைக்கிறது. அதேபோல், வியாதியைத் தூக்கி எரியும் முயற்சியின்
அடையாளங்கள்தான் நோய்க்குறிகள்.
மனித உடலமைப்பு |
ஹோமியோபதி,
ஆங்கில மருத்துவத்திலிருந்து வேறுபடும் புள்ளி :
1, ஒரு நோய்க்கிருமி ஆயிரம் பேரைத்
தாக்கியபோதும் அதற்கு ஒரு பெயரை வைத்து வைத்தியம் செய்வதில்லை.
2, மனித உடலை எந்திரமாக பார்ப்பதில்லை. உடலை ஒரு உயிரியல் அமைப்பாக
பார்க்கிறது.
3, நோய்க்கு நிரந்திர தீர்வுகளை உருவாக்குகிறது.
வைத்தியம் என்பது நோயின் அறிகுறிகளுக்கு அல்ல, நோயை உண்டாக்கும் காரணிகளுக்கு
மட்டுமே.
4, வலியத் தணிப்பது, உடல் உறுப்புகளை மாற்றுவது,
கிரிமிகளை அழிப்பதற்குப் பதில் நோயாளியின் சகல அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்
கொள்கிறது.
5, பக்க விளைவு என்பதே கிடையாது.
இனி, ஹோமியோபதியின் தந்தை டாக்டர். சாமுவேல் ஹானிமன்
பற்றி :
ஹானிமன்
ஜெர்மனியில் உள்ள ட்ரஸ்ட் நகருக்கு அருகாமையில் உள்ள மெய்சன் என்னும் சிற்றூரில்
மண் மற்றும் பீங்கான் பாத்திரங்களுக்கு வண்ணம் பூசும் ஏழைத் தொழிலாளியின் மகனாக 1755-
ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 1- ஆம் நாள் பிறந்தார். தனது 24- வது வயதில் ஆங்கில மருத்துவத்தில்
எம்.டி.பட்டம் பெற்றார். தனது 27- வது வயதில் திருமணம் செய்து கொள்கிறார். ஹானிமன் தனது மகளை நோயில் பறி
கொடுத்துவிட்டதால் தன் மகளைக்
காப்பாற்றாத ஆங்கில வைத்திய முறையான
அலோபதியில் இனி, வைத்தியம் பார்க்கக் கூடாது என்ற
முடிவுக்கு வருகிறார்.
20 - வருடங்கள் 99- விதமான மருந்துகளைத் தானே உட்கொண்டு, நீண்ட
பரிசோதனைக்குப் பிறகு 1811- ஆம் ஆண்டு தான், கண்டுபிடித்த மருத்துவ முறைக்கு ‘’ஹோமியோபதி’’
என்று அறிவிக்கிறார். ஹோமியோ என்றால் ‘’போன்ற’’ அல்லது ‘’அதே விளைவு’’என்றும்,
பத்தி என்றால் ‘’வழி’’அல்லது ‘’முறை’’ என்று பொருள். தன்னிடம் வைத்தியம் பாக்க வந்த
மெலானி என்ற பெண்ணிற்கு ஏற்பட்ட தீராத வியாதியை, குறைந்த காலத்தில் ஹானிமன்
தீர்த்து வைக்க, மெலானிக்கு ஹானிமன் மீது காதல் பிறந்தது.
பிரான்ஸ்
நாட்டின் நிதியமைச்சர் வளர்ப்பு மகளான மெலானியை 1838- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அப்போது
ஹானிமனுக்கு வயது 80. மெலானிக்கு வயது 30. ஜெர்மன், ஆங்கிலம், இத்தாலி, பிரெஞ்சு, அரபி, ஸ்பானிஷ் ஆகிய
மொழிகள் தெரித்திருந்த ஹானிமன் தனது வாழ்நாளில் 70௦ நூல்களை எழுதினார். 24
நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். மெலானியைத் திருமணம் செய்து கொண்டு 8
ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஹானிமன். 1843 ஜூலை 2 ஆம் தேதி அதிகாலை 5-
மணிக்கு இறந்து போனார். ஹானிமன் கல்லறையில் ‘’நான் வாழ்நாளை வீணாக்க
விரும்பவில்லை.’’ என்று எழுதப்பட்டுள்ளது. காந்தி ஒரு முறை சொன்னார் ‘’எனக்கு
சத்தியத்தின் மீதுள்ள நம்பிக்கை,ஹோமியோபதி
மீதும் உள்ளது’’என்று. ஹோமியோபதி உடலின் மீது வன்முறை செலுத்தாத மருத்துவம்.
ஹானிமன் மனைவி மெலோனி |
தமிழ் உத்தம்சிங்
No comments:
Post a Comment