Wednesday, December 26, 2018

ஈமெயிலை உலகுக்கு அளித்தவன்


உலகின் தபால்துறை, மெல்ல மெல்ல முடங்கி வருகிறது. அஞ்சல் அட்டை, இன்லான்ட் லட்டர், என்றால் என்னவென்று இனி குழந்தைகளுக்கு பாடம் நடத்த வேண்டி வரலாம். பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்கும் மாணவர்கள் கூட இப்போதெல்லாம் விடுப்பு விண்ணப்பத்தை மின் அஞ்சலில் அனுப்பத்தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு இன்று ஈ-மெயிலின் தேவை உணரப்பட்டுள்ளது. ஈ-மெயில் என அழைக்கப்படும் ஹாட் மெயிலுக்கு நமது தபால் துறை உள்ள வித்தியாசம் என்னவென்றால், கணினி வழியே கடிதங்கள் அனுப்புவதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. மின் அஞ்சல்  அது முழுக்க முழக்க ஒரு இலவச சேவை. இந்த மாபெரும் விஷயத்தை கண்டுபிடித்து உலகை மின் –அஞ்சல் மயமாக்கியவர்.

ஸ்பீர் பாட்டியா எனும் இந்தியர். ஸபீர் பிறந்தது, பள்ளியில் படித்தது எல்லாமே பெங்களூரில், 1968-ல் பிறந்தார். அவரது தாய் ஒரு வங்கி மேலாளர். அப்பா மத்திய பாதுகாப்பு மற்றும் தளவாட ஆய்வகத்தின் நிர்வாக மேலாளராக இருந்தார். பள்ளிப் படிப்பை முடித்த சபீர் குடும்பப் பாதுகாப்பு கருதி மேல்படிப்பிற்காக அமெரிக்கா அனுப்பப்பட்டார். 1988, செப்டம்பர் 23-ல் , சபீர் பாட்டிய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலத்தில் போய்  இறங்கினார். பெங்களூரிலிருந்து அங்கெ போய் இறங்க 22 மணி நேரம் ஆகியது. போனதும்  டெலிபோன்.. பிறகு உடனே ஒரு கடிதம் போட்டுவிடு ‘’ என்று அவரது அம்மா சொல்லியிருந்தார். அவரைப்  படிக்க வைக்கும் செலவு தொகையை ஏற்றிருந்த (ஸ்காலர்ஷிப்) கலிபோர்னிய தொழில் நுட்பக் கல்வியகம் அவருக்கு லாஸ்-ஏஞ்சல்ஸ்ஸில் இறங்கினால் என்ன என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஒரேவரியில் வழி சொல்லியிருந்தது.  

கையில் இருந்தது 400 டாலர். அமெரிக்காவின் யாரையும் தெரியாது. அமெரிக்கா வந்த நான்கு வருடங்களுக்குப் பிறகு ஸ்டாண்டுபோர்டு பல்கலைக் கழகத்தில் இவர்களை சந்தியுங்கள் நிகழ்ச்சியில் சன்மைக்ரோ சிஸ்டம் நிறுவனர் ஸ்காட் மக்நீலே, ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் வாஸ்னிக் போன்ற கணினி ஜாம்பவான்கள் வந்து தங்களது முன்னேற்றத்தை விவரித்து உங்களாலும் முடியும் என்று பேசின கூட்டத்தில் கலந்துகொள்கிறார். சபீர் பாட்டியா தனது படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பவில்லை. தனது ஆத்ம நண்பன் ஜாக் ஸ்மித்தோடு சேர்ந்து ஒரு கம்பெனியில் கணினி வித்தகராக வேளையில் சேர்ந்தார். ஆப்பிள் கணினி நிறுவனத்தில் ஹார்வர் பொறியாளராக வேலை. நம்முடைய வாழ்கையே வீணாகிறது. ஸ்மித் நாம.. ஏதாவது செய்தாக வேண்டும்..தனது நண்பனிடம் புலம்புகிறார்.


இந்த சமயத்தில், 1990களின் தொடக்கத்தில் சைபர் ஸ்பேஸ் எனும் ஸ்டீவ் கேசின் உரையாடல் முறை மட்டுமே உண்டு. சபீர் யோசித்தார் கணினி வழி கடிதம் சத்தியமா..? சாத்தியமானது. ஈமெயில் என்பது தற்போதைய சொல். அதற்கு சபீர் வைத்தது HTML. சபீர் பாட்டியாவுக்கு இதை சாதிக்க மூன்று லட்சம் டாலார்கள் தேவைப்பட்டது. கம்பியூட்டர் நிறுவனங்களை நம்பி பணம் போட முயன்ற பத்தொன்பது பண முதலீட்டாளர்களிடம் தனது திட்டத்தை பலவிதத்தில் விவரித்தும் யாரும் முன் வரவில்லை. 

கடைசியில் ட்ராப்பர் நிறுவனர் ஸ்டீவ் ஜூர் வெட்சன் பணம் போட முன் வந்தார். ஆனால், லாபத்தில், முப்பது சதவிகிதம் பங்கு கேட்டார். சபீர் கடைசியில், 15% தருவதாக சொல்லி பேரம் முடிந்தது. சபீர் பாட்டியாவும் ஸ்மித்தும் ஆப்பிள் நிறுவனத்தின் வேலையைவிட்டனர். கலிபோர்னியாவில் பிராமோடில் என்ற இடத்தில் அலுவலகம் திறந்தார். அந்த கம்பியூட்டர் நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க.. சில நண்பர்களை வேலைக்கு வைத்திருந்தார்.  கம்பெனியின் வியாபாரம் பெரிதாகும் போது பங்கு மார்கெட்டில் பங்கு (SHARE ) தருவதாக சொல்லியிருந்தார். ஆனால், கம்பெனியை நடத்த 1996 - ஜூலையில் பணமில்லை.

அப்போது இந்த திட்டத்திக்கு டாக் காலிஸ்லே என்பவர் உதவுவதற்கு முன் வந்தார். அதை வாங்க விருப்பம் இல்லாத ஸ்பாட்டியா வங்கியில் ஒரு லட்சம் டாலர் கடன் வாங்கினார். 1996 ஆம் ஆண்டு ஜூலை 4- ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தனது சுதந்திர தினத்தை கொண்டாடிய நாளில் சபீர் பாட்டியா ஹாட்மெயிலை உருவாக்கினார். ஒரு மணி நேரத்தில் நூறு பேர் கடிதங்களை அனுப்பி முதன் முதலில்  வெற்றி கண்டனர். கணினி வைத்திருந்தவர்கள் மட்டும் www வை பயன்படுத்திய காலத்தில் ஹாட்மெயில் கணினி இருக்கத் தேவையில்லை. பெறுபவருக்கும் கணினி இருக்கத் தேவையில்லை.  முகவரி ஒன்று இருந்தாலே போதும். கணினி மையங்களில் சென்று அனுப்பலாம் பெறலாம். மூன்று வாரங்களில் ஒரு லட்சம் நிரந்தர முகவரியாளர்களை பெற்றது ஹாட்மெயில் டாட்காம்.

ஸ்பீர் பாட்டியா 

25  பேர்களை கொண்டு இயங்கி வந்த ஹாட்மெயில் நிறுவனத்திற்காக மீண்டும் உதவி கேட்டு  டாக் காலிஸ்லேவிடம் சென்றார் சபீர். ஆனால், டாக் காசிலே இரு நூறு மில்லியன் டாலர் விலைக்கு உங்களது கம்பெனியை தந்தால், நான் உங்களுக்கு உதவத் தயார். ஆனால், ஆறுமாதங்களுக்குப் பிறகு, ஹாட்மெயில் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை ஆறு மில்லியன் ஆகியது. அப்போது பில்கேட்ஸ் உங்களை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்தது. சபீர், மிகுந்த சதோசமடைந்தார். ஆனால், அப்போது ஜெர்ரி யாய் என்ற ஜப்பானியர் யாஹூ டாட் காமை ஹாட்மெயில் போல உருவாக்கியிருந்தார். ஆனால், பில்கேட்சுக்கு ஹாட்மெயில் நிறுவத்தை வாங்கத்தான் அதிக விருப்பம் இருந்தது.

அதனால் ஹாட்மெயிலை நானூறு மில்லியன் டாலருக்கு 1997 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று வாங்கினார். சபீரின் சாதனையைப் பாராட்டி அவரது கம்பெனியை இரு நூறு டாலருக்கு வாங்க நினைத்த டாக் காலிஸ்லே,  சபீருக்கு வெண்கலச் சிலை வைக்க நினைத்து அவரை சந்தித்தார். ஆனால் சபீர் பாட்டியா சொன்னார், ‘’டாக்.. பிளீஸ்.. எங்கள் நாட்டில் நாங்கள் காந்தி மாதிரி பெரிய மனிதர்களுக்குத்தான் சிலை வைப்போம்.. நான் சாதாரண ஆள்.’’ என்றார் தன்னடக்கத்தோடு.. சபீர் பாட்டியா அப்படிச் சொன்ன போது ஹாட்மெயிலை அன்று ஆறு மில்லியன் பேர் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.                                 

No comments:

Post a Comment