Thursday, December 27, 2018

ஒரு மெக்கானிக்கின் சிந்தனையே செல்போன்

மார்டின் கூப்பர் 

உலகெங்கும் மொபைல்(cellphone) புரட்சி நடந்து வருகிறது. பள்ளிக்கூட குழந்தைகள் கூட செல்லோடு
தான் பள்ளிக்கூடம் வரும் அளவிற்கு அதன் ஆளுமை சமூகத்தில் நிலவுகிறது. முகம் பார்த்து செல்போனில் பேசும் அளவிற்கு போனின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனிமையே இனி இல்லை. உங்கள் கழிவறையில் கூட நீங்கள் தனியாக இல்லை என்று தத்துவங்கள் உதிர்க்கப்படுகின்றன. உலகம் ரொம்பவே சுருங்கிவிட்டது. இப்படிப்பட்ட மிகப்பெரிய மொபைல் புரட்சிக்கு காரணகர்த்தா யார் ? என்றால், அவர் பெயர் மார்டின் கூப்பர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மோட்டோரோலா பங்க் ரோல்ட் இரிடியம் எனும் நிறுவனம் நேரடியாக 60  தகவல் தொழில் நுட்ப செயற்கைக் கோள்களை விண்ணிள் செலுத்தி, தகவல்களைப் பெற்று பெரிய அளவிற்கு வியாபாரம் செய்யலாம் என்று அந்த நிறுவனம் களத்தில் இறங்கியது . ஆனால், அந்த நிறுவனம் எதிபார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காமல் போகவே, அந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. ஆனால், அதே மோட்டோரோலா நிறுவனம்தான், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னாள் மொபைல் போனை முதலில் சந்தையில் இறக்கியது. அதற்கு காரணம் டாக்டர், மார்டின் கூப்பர். அப்போது  மோட்டோரோடோலா நிறுவனத்தின் செயல் அதிகாரி.


கம்பி இல்லாத தந்தி முறையையும் பேச்சை வடிவமாக்கும் (visible speech)முறையையும் இணைத்து அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைபேசியை கண்டிபிடித்தார். வருடம் 1876. தாமஸ் வாட்சன் எனும் மெக்கானிக்கிடம் உதவியாள் சிறுவனாக இருந்தவர்தான் இந்த கிராகாம்பெல்.ஹெர்ட்சும்,மார்க்கோனியும் அயனிகள் மண்டலத்தை கண்டுபிடித்திருந்த அந்தக் காலத்தில் ஒருவரோடு ஒருவர் தொலை தொடர்பு கொள்ள முடியும் என்றெல்லாம் யாருக்கும் நம்பிக்கை இருக்கவில்லை. வாட்சனும், கிரகாம்பெல்லும்காது கேளாதவர்கள். பிறறோடு உரையாட ஊமைகளின் மொழியை சமிங்கைகளில் அமைத்துக் கொடுத்தார்கள்.


வாய் வழிவரும் சைகைகளை டெலிகிராப் முறையில் மின் இயல்மூலம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடத்தும் கடத்தியை பிறகு, தனது ஆய்வுகளின் மூலம் கிரகாம் பெல் கண்டுபிடித்தார். இதற்கு அரசு அளித்த காப்புரிமை ஆவணத்தின் (patent)எண்174,465. பத்தொம்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒலி அதிர்வுகளை திடப்பொருள்களில் கடத்திட முடியுமென்று பலரும் நம்பினார்கள். மைகேல் பாரடே, முழுமையான ஒலி அதிர்வுகளை மின் அதிர்வுகளாக மாற்றினார். எலெக்ரோடுகளைப் பயன்படுத்தி சில மீட்டர்கள் தொலைவு வரை  ஒளியை கடத்திக் காட்டியவர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  சார்லஸ் பவுர்சல்.

ஜெர்மனியின் பள்ளி ஆசிரியரான பிலிப் ரெய்ஸ்சை என்பவரை மறந்து விடமுடியாது. 1861 –ல் கிட்டத்தட்ட டெலிபோனை கண்டுபிடித்தேவிட்டார். டெலிபோனை கண்டுபிடித்தது உண்மையில் அவர்தான் என்றும், அதைப் பெல் திருடிவிட்டார் என்றும் கூட சொல்கிறார்கள். கிரஹாம் பெல்லும், எலிசா கிரேவும் அடுத்தடுத்து ஒரே மாதிரியான தொலை ஒலி  கடத்தி இயந்திரங்களை உருவாக்கினார்கள். ஒரே நேரத்தில் பல வகையான செய்திகளை ஒரே கம்பியில் செலுத்த முடியுமா என்கிற சவாலாக இருந்தது.  ஒரு இடத்தில் ஒலி  அதிர்வுகளை மின் அதிர்வுகளாக மாற்றி கம்பியில்லாத் தந்தி முறையில் அனுப்பி, மறு இடத்தில் மின் அதிர்வுகளை மீண்டும் ஒலி  அதிர்வுகளாக மாற்றும் இந்த கண்டுபிடிப்பு, கிட்டதட்ட கிரேவும், பெல்லும் தனித்தனியே ஒரே சமயத்தில் கண்டுபிடித்ததுதான் என்றாலும்,பெல்லுடையதே வேலை செய்தது.

பின்வந்த ஆண்டுகளில் பெல்லும், வாட்சனும் பொதுமக்கள் உபோயோகிக்கும் அளவிற்கு தொலைபேசியை கொண்டு வந்தனர். முதலில் கட்டிடங்கள், அப்புறம் சில வீதிகள், ஊர்கள் என்று தொடங்கி ஒலி அலைகள் கண்டம்விட்டு கண்டம் செல்ல 1947- வரை ஆகிவிட்டது. ஆனால், தனது வெளியிடப்படாத ஆய்வுக் கட்டுரை ஒன்றில் பெல் ஆய்வகத்தின் டி.எச்.ரிங். தனது உதவியாளரும் மாணவருமாகிய டபிள்யு.ஆர் யஸ் என்பவரின் உதவியோடு 1947 லேயே  செல் பற்றிய யூகங்களை வெளியிட்டிருக்கிறார். ‘’சிறிய செல்கள் உடலுக்குள் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது போல, பல செல்களை  ஒரே மையாக்கட்டுப்பாட்டிலிருந்து தகவல் தொடர்பை சாத்தியமாக்கலாம்’’ என்கிற ரிங்கின் சொற்றொடரை அப்போது யாருமே கண்டுகொள்ளவில்லை.
இப்போது செல்போன்கள் இதே அடிப்படையில் இயங்குவதோடு செல்(cell)என்கிற சொல்லும் கச்சிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தத் துறையில் ஆராய்ச்சிகள் காலம்தாழ்ந்தே தொடங்கின. ரிங்கினுடைய ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் ஆன பிறகே ஆ.டி.டி.மற்றும் பெல் ஆய்வகம் ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஆய்வகத்திற்கு ஆராய்ச்சி முறை தொலைபேசி செல்லுலார் போன்களை கொண்டுவந்தன. ஆனால், வாக்கி டாக்கிக்கும் இந்த செல்களுக்கும் வித்தியாசம் ரொம்ப இல்லை. போர்க்காலங்கள் மற்றும் போலீஸ்காரர்கள் தவிர யாருக்கும் இவை ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. இந்த இடத்தில் டாக்டர் மார்டின்கூப்பர் நுழைகிறார்.

மார்டின் கூப்பர் பள்ளியில் பாடம் படித்துக் கொண்டே டி.வி. மெக்கானிசம் தெரிந்து கொண்டார். வீட்டில் ஒரு மின்கருவியையும் விட்டுவைக்கவில்லை. பலமுறை மோசமாக ஷாக் அடித்து தூக்கியெறியப்படும் அளவிற்கு தன்னையே பணயமாக வைக்கும் தைரியம் அவருக்கு இருந்தது. சிக்காகோவில் கல்லூரிப் படிப்பிற்கு மின்னியலை எடுத்துக் கொண்டார். பலமுறை முயன்றும் உருப்படியான வேலை எதுவும் கிடக்கவில்லை. பெல் நிறுவனமும் இவரது விருப்பத்தை புறக்கணிக்கவே மனிதர் வெறுத்துப் போனார். அப்புறம் ஒருவழியாக மோட்டாரோலா இரிடியத்தில் மெக்கானிக் உதவியாளராக சேர்ந்து ஆய்வக உயர்பிரதிநிதி அந்தஸ்திற்கு அடுத்து மூன்றாண்டில் உயர்ந்ததோடு பெல் ஆய்வகத்திற்கு அடுத்ததாக உலகில் அதிக கண்டுபிடிப்புகளை காப்புரிமையாக பதிவு செய்த பெருமையையும் விரைவில் மோட்டரோலா தேடிக்கொடுத்தார்.

முதலில் கூப்பர் கூட சும்மா  வாக்கி டாக்கி மாதிரிதான் என்றே நினைத்தார். ஒரு தொலைபேசியில் இருவர் மாறிமாறிப் பேசிக் கொள்ளலாம். அவ்வளவுதான் இரண்டை மூன்றாக்கினார்கள். சிக்காகோவில் 150 இணைப்புகள் வாக்கி டாக்கியாக்கி ஒரு குறிப்பிட்ட ஆண்டனா மாதிரி அமைப்பின் அருகில் இருந்து மட்டுமே பேசிடமுடியும். ஒரு நாள், இரவு ஆய்வாளர்கள் அனைவருமே வீடு திரும்பிவிட்ட பிறகு கூப்பர் தனிமையில் வரைபடங்களில் மூழ்கினார். இது நடந்தது 1973-ல். சர்கியூட் போர்டு என்று அழைக்கப்படும் மின் இணைப்பிகள் கம்பில்லா தொலைபேசிகளில்,  மின் ஏற்பிகளை  மின் அலைகளாக இல்லாமல்  மின்னணுக்களாக (எலக்ட்ரான்) மாற்றமடைய வைத்தால்,  ஒருவர் கையில் வைத்துக் கொண்டு திரியும் அளவிற்கு தொலைபேசிகளை உருவாக்கிட முடியும் என்று கூப்பர் நம்பினார்.   


1973- ஏப்ரல் 3 ஆம் தேதி பெரிய பவுடர் டப்பா அளவிற்கு ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அதில் பேசிக்கொண்டே மார்டின் கூப்பர் ஆபிசுக்கு வந்தார். அதுதான் முதல் செல்போன் என்று அப்போது யாருக்கும் தெரியாது. அதில் போன் எண்கள் வரிசையாக தொலைபேசி போலவே அமைக்கப்பட்டிருந்தன. மேல ஒருவித ஆண்டனா  சிறிய டிரான்சிஸ் டார் வானொலியில் மாதிரி நீட்டிக்கொண்டிருந்தது. செய்தியாளர்களை சந்திக்கும் முன் டாக்டர் மார்டின் கூப்பர் தன்னை கைவிட்ட ஜோயல் ஏங்கலை தனது புதிய கண்டுபிடிப்பான கைப்போனில் மூலம் அழைத்து அதைப் பரிசோதித்தார்.

சாலையின்  முனையில் கைப்போனில் என்னை அழுத்தி விட்டு அவர் பேசத் தொடங்கியதைப் பார்க்க ஒரு கூட்டம் கூடிவிட்டது. இந்தப் போன் தான் மோடோரோலா டைனா - டாக் என்ற முதல் மொபைல் போன். இதன் எடை ஒரு கிலோ  அளவு பெரியதாக இருந்தது. முப்பத்தைந்து நிமிடம் அதன் டாக்டைம்! பத்து மணி நேரத்திற்கு ஒரு முறை அதை நீங்கள் சார்ஜ் செய்யவேண்டும். படிப்பதற்கு பார்ப்பதற்கு எந்த காட்சியும் வராது. 2000- பேர் அமெரிக்காவில் இதை பயன்படுத்தத் தொடங்கியபோது ஜப்பானியர்கள் விழித்துக்கொண்டனர். 1979-ல் டோக்கியோவில் யார் வேண்டுமானாலும் வாங்கி உபயோகிக்கக்கூடிய வகை செல்போன்களை சந்தையில் இறங்க  வியாபாரரீதியில் அது பெரிய வெற்றி அடைந்ததது.

1981-ல் கூப்பரின் யோசனைப்படி அமெரிக்காவில் வாஷிங்டனிலும், பால்டிமோரிலும் இருந்து ரேடியோ அலைகள் மூலம் செல்லில் பேசமுடிந்தது. ஊர் விட்டு ஊர் பேசும் முறையை மோட்டரோலா தொடங்கியது. நோக்கியா,சைமன், ஏர்காட்டேல், பிலிப்ஸ் என்று ஐரோப்பிய ஜாம்பவான்களும் களத்தில் குதித்தனர். ‘’ரோமிங்’முறை 1982 -ல் தான் வந்தது. உலகம் முழுவதும் இன்று கோடிக்கணக்கான செல்கள் இயங்க காரணகர்த்த மார்ட்டின் கூப்பர்தான்.
                                             

No comments:

Post a Comment