Friday, July 30, 2021

ஆல்கஹால் இல்லாத பீரின் (beer) நன்மைகள் என்ன..?


பீர் பாரம்பரியமாக, ஒரு மதுபானமாக, ஆல்கஹால் கொண்டிருந்தாலும், பீர் உற்பத்தியாளர்கள், மது அருந்தாதவர்களுக்காக நான்-ஆல்கஹாலிக் பீர் என்று மற்றொரு விருப்பத்தை வழங்குகிறார்கள். இந்த வகை பீர் அதன் சுவை, தோற்றம் மற்றும் நறுமணம் ஆகியவற்றின் அடிப்படையில் பீரைப் போலவே, ஆனால் ஆல்கஹால் இல்லாமல், கிடைக்கிறது. இந்த நான்-ஆல்கஹாலிக் பீர் பற்றி கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.

நான்-ஆல்கஹாலிக் பீர் என்றால் என்ன:

நான்-ஆல்கஹாலிக் பீர்: அதன் பெயரிலேயே வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த வகை பீர் ஆல்கஹால் கன்டென்ட் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், பானத்தின் இந்த பெயர் கொஞ்சம் ஏமாற்றக்கூடியதாக இருக்கலாம். ஏனென்றால் மது அல்லாத பான வகைகளில் கூட ஒரு சிறிய அளவு ஆல்கஹால் கலந்துள்ளது. ஆனால் மிக மிகக் குறைந்த அளவு தான்.

 பீர்

ஆல்கஹால் இல்லாத பீர் நான்கு வகைகளில் கிடைக்கிறது. அவை ஆல்கஹால் இல்லாத பீர், அதிகபட்சம் 0.05% ABV உள்ளது; ஆல்கஹால் நீக்கப்பட்ட பீர், இதில் அதிகபட்சம் 0.5% ஆல்கஹால் உள்ளது; மற்றும் குறைந்த ஆல்கஹால் பீர், இதில் அதிகபட்சம் 1.2% ஆல்கஹால் உள்ளது. ஆகவே, வழக்கமான பீர் வகைகளோடு ஒப்பிடும்போது ஆல்கஹால் அல்லாத பீர், குறைந்த அளவு ஆல்கஹால் கொண்டிருந்தாலும், அவை முழுமையான ஆல்கஹால் இல்லாத பீர் கிடையாது.

இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது

ஆல்கஹால் இல்லாத பீர், சில வழிகளில் தயாரிக்கப்படலாம். ஃபினிஷ்டு தயாரிப்பிலிருந்து (தயாரிக்கப்பட்ட பீரிலிருந்து) ஆல்கஹாலை நீக்குவது, முதல் வழி. இரண்டாவது வழி, பீரைத் தயாரிக்கும் செயல்பாட்டின் போது அது, ஆல்கஹால் உருவாகாமல் தடுப்பது. மூன்றாவது வழி ஆல்கஹால் நீக்குவதற்கு, பீரைக் கொதிக்க வைப்பது. நான்காவது வழி, பீரில் இருந்து ஆல்கஹால் பிரிக்கும் ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டுவது.

நான்-ஆல்கஹாலிக் பீர் வழங்கும் நன்மைகள் என்ன

மது பானம் குடிப்பதால் ஏற்படும் எந்த தீமையும், மது அல்லாத பீர் குடிப்பதால் ஏற்படாது என்பதே மிகப்பெரிய நன்மை.

முதலாவதாக, இதில் மிகக் குறைந்த அளவிலான ஆல்கஹால் மட்டுமே இருக்கிறது என்பதால், ஆல்கஹால் சார்புநிலையைக் குறைக்கிறது. ஆல்கஹால் அல்லாத பீர் குடிப்பதன் மூலம், தங்கள் ஆல்கஹால் அளவைக் குறைக்க விரும்புவோருக்கு அல்லது குடிப்பழக்கத்தை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

பீர்

இரண்டாவதாக, வழக்கமான மது பானத்துடன் ஒப்பிடும்போது ஆல்கஹால் அல்லாத பீர் மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. எடை குறைக்கும் அல்லது எடை நிர்வகிக்கும் இலக்குகளை பராமரிக்க உதவி செய்கிறது. மூன்றாவதாக, போதைப்பொருள் பயன்பாட்டின் ஆபத்தை அதிகரிக்காமல், ஆனால், அதே போன்ற அனுபவத்தைப் பெற மது இல்லாத பீர் அனுமதிக்கிறது. இது உங்கள் பாதுகாப்பையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பையும் மேம்படுத்தும்.

நான்-ஆல்கஹாலிக் பீர் குடிப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

வழக்கமான பீர் போலவே, ஆல்கஹால் அல்லாத பீர் மிகவும் குறைவான ஆல்கஹால் கொண்டுள்ளது. இதனால் போதைப்பொருள் பயன்பாட்டு ஆபத்து கணிசமாகக் குறைக்கப்பட்டாலும், அதிகமாக உட்கொண்டால் பாதிப்பு நேரிடும். 

மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்பு அடைந்தவர்கள், ஆல்கஹால் அல்லாத பீரைக் குடிக்கும் போது, இரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆல்கஹால் அல்லாத பீரின், சுவை மற்றும் வாசனை வழக்கமான பீரைப் போலவே இருப்பதால், இந்த பழக்கத்தில் இருந்து விலக முயற்சிக்கும் நபர்களில்அல்லது ஆல்கஹால் அளவைக் குறைக்க முயற்சிப்பவர்களில் கூடுதலாக அருந்த வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.

No comments:

Post a Comment