Thursday, July 29, 2021

உடல் எடை குறைந்தால் பரிசு வழங்கும் நாடு எது..?


பிரிட்டனில் ஆரோக்கியமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அரசின் ஆப் மூலம் வாங்குபவர்களுக்கு தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் மேலும் பிரிட்டன் மக்கள் உடல் எடையை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உடல் எடை குறைப்பு :

அதிக உடல் எடை ஆரோகியமற்ற உடலாக கருதப்படுகிறது. அதிக எடை உள்ளவர்கள் சாதாரணமாக உள்ள வேலைகளை செய்வது கூட மிக கடினமாக இருக்கிறது. சரியான உணவு பழக்கம் இல்லாதததே ஆரோக்கியமற்ற உடலுக்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். 

அன்றாட உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு நம் ஆரோக்கியத்தை பேணி காக்கும். தனது வயதையும் உயரத்தையும் விட அதிக எடை உள்ளவர்களுக்கு இருதய நோய்கள், நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உடல் எடை குறைப்பதற்கு மார்க்கெட்டில் விற்கும் பவுடர்களையும், மருந்துகளையும் வாங்கி சிலர் உட்கொள்கின்றனர், இது அடுத்தகட்ட நோய்க்கு வித்திடுகிறது.

இந்த நிலையில் பிரிட்டன் அரசு தன் நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. பிரிட்டன் நாட்டு மக்கள் சத்துள்ள பழங்கள், காய்கறிகளை வாங்கும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் ஒரு ஆப் ஒன்றை தயாரித்துள்ளது. இந்த ஆப்பில் அனைத்து மார்க்கெட்களும் இடம் பெற்றுள்ளது. இந்த ஆப் மூலம் ஆரோக்கியமற்றதை தவிர்த்து ஆரோக்கியமுள்ள பழங்கள், காய்கறிகள் வாங்குவர்களுக்கு அரசு சார்பில் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் மூலம் ஆரோக்கியமுள்ள பொருட்களை வாங்குபவர்களுக்கு லாயல்டி பாயிண்ட்ஸ் வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தி அவர்கள் டிஸ்கவுண்ட்கள், இலவச டிக்கெட்கள், ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம் . இதன் மூலம் பிரிட்டன் நாட்டு மக்கள் தங்கள் உடல் எடையை குறைத்து சத்துள்ள காய்கறி பழங்களை உண்ணும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் இந்த திட்டம் வரும் 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அமுலுக்கு வரும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment