இந்த 5 அறிகுறிகள் உங்கள் உறவில் இருந்தால் பிரேக் அப் நல்லது!
நீங்கள் ஒரு உறவில் இருக்கும்போது, அதில் எல்லைக்குட்பட்ட நச்சுத்தன்மையாகத் தோன்றும் சில பண்புகளை உங்கள் பார்ட்னரிடம் அடையாளம் காண்பது கடினம். நீங்கள் அவர்களின் நடத்தைக்கு மிகவும் பழக்கமாகிவிட்டீர்கள் மற்றும் நீங்கள் அவர்களின் ஆளுமையால் உங்கள் தனித்துவத்தை இழந்துவிட்டீர்கள் என்பதுதான் இதன் பொருள்.
எப்படி இருந்தாலும், ஒரு மூன்றாம் தரப்பினர், நீங்கள் ஒரு நச்சு உறவில் இருக்கிறீர்கள் என்றும் மேலும், அந்த நபர் உங்களுக்கு பொருத்தமானவர் இல்லை என்றும் சொல்ல முடியும். அந்த வரிசையில் இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தால் அந்த உறவிலிருந்து விலகுவது நல்லது.
கட்டுப்பாடு :
உங்கள் பார்ட்னர் உங்கள் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால், அது நிச்சயமாக நச்சுத்தன்மை கொண்ட உறவுதான். உங்கள் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்பவரே சிறந்த துணைவர். நல்ல உறவு என்றைக்குமே உங்களை சிறந்த மனிதராக மாற்றுமே தவிர, உங்களை என்றைக்கும் எந்த வகையிலும் அது கட்டுப்படுத்த நினைக்காது.
அந்நியப்படுதல் :
உங்கள் பார்ட்னர் உங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து அந்நியப்படுத்துவதாக நீங்கள் உணர்ந்தால், அது நிச்சயமாக நச்சுத்தன்மை வாய்ந்தது. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறாரா என்பதைப் பாருங்கள். எல்லா அழகான விஷயங்களிலிருந்து உங்களை விலக்கி வைத்திருந்தால், அது உங்கள் மனதையும் உங்கள் வளர்ச்சியையும் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
அவமரியாதை:
எந்த சூழ்நிலையிலும் நீங்களும் உங்கள் பார்ட்னரும் ஒருவருக்கொருவர் அவமரியாதை செய்யக்கூடாது. உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். ஆனால், தாழ்வு நேரங்களில் நீங்கள் எப்படி நடத்தப்படுகிறீர்கள் என்பதுதான் ஆரோக்கியமான உறவை வரையறுக்கிறது. இதில் இருக்கும் கடுமையான உண்மை என்னவென்றால், அது மரியாதையற்ற நிலைக்கு வந்தவுடன், ஆரோக்கியமான இடத்திற்கு செல்வது மிகவும் கடினம் என்பதுதான்.
நேர்மையின்மை:
பொய் சொல்வது நம்பிக்கையை உடைக்கும். நம்பிக்கை இல்லாமல், ஆரோக்கியமான உறவு இல்லை. எனவே, நீங்கள் இருவரும் எதுவாக இருந்தாலும் நேர்மையாக இருக்கக்கூடிய உறவிலிருந்தால், எந்தவித மன உளைச்சலும் இருக்காது. உங்கள் பார்ட்னர் தொடர்ந்து உங்களிடம் பொய் சொல்கிறார் என்றால், அவர் உங்களுக்கான சரியான நபர் அல்ல.
போட்டி:
உங்கள் பார்ட்னர் என்றைக்குமே உங்களுடன் போட்டியிடக்கூடாது. அவர்கள் உங்கள் சாதனைகளைக் கொண்டாட வேண்டும். அவர்களின் வாழ்க்கை அவர்கள் விரும்பும் வழியில் நடக்கவில்லை என்றாலும், அவர்கள் எப்போதும் உங்களுக்காக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்களுடைய பார்ட்னர் உங்களுடன் தொடர்ந்து போரிடுவதாக நீங்கள் உணர்ந்தால், அவர் உண்மையில் உங்கள் நலன் விரும்பியாக இருக்க முடியாது.
No comments:
Post a Comment