அந்தரங்க வாழ்க்கை..பெற்ற குழந்தையை கைவிட்டு.. தோழியுடன் குடும்பம் நடத்தும் பெண்..! ஆம்..
ஆனால், குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ வீட்டில் இருந்து மாயமானார்... இதனால் அவரை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடினர்..
உத்தரவு
இறுதியில் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர்... போலீசாரும் அந்த புகாரின்பேரில் பல மாதங்கள் தேடினர்... அப்போதும் கிடைக்கவில்லை.. இறுதியில், தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட்டில் சரவணன் வழக்கு தொடர்ந்தார்... அதன்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட்டும் உத்தரவிட்டது.
விசாரணை
இதனால் ஜெயஸ்ரீயை போலீசார் மேலும் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஒருவழியாக சென்னையில் கண்டுபிடித்தனர்.. அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்: அதில், "மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நானும் துர்காதேவியும் ஒன்றாக படித்தோம். அப்போதே நெருங்கி பழகி வந்தோம்.. காதலர்கள் போல இருந்தோம்.. பள்ளிப்படிப்பு முடிந்தும் இந்த உறவு தொடர்ந்தது..
துர்காதேவி
இந்த விஷயம் என் வீட்டில் தெரிந்துவிடவும், உடனடியாக கல்யாணம் செய்து வைத்துவிட்டனர். ஆனாலும் துர்காதேவியை மறக்க முடியவில்லை.. கர்ப்பிணியாக இருந்ததால், அந்த நேரத்தில் அவரிடம் செல்ல முடியவில்லை.. அதனால்தான் குழந்தை பிறந்ததும், குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு துர்காவை பார்க்க சென்னைக்கு வந்துவிட்டேன்..
நீதிபதி
துர்காவுக்காகவே என் தலைமுடியையும் ஆண்போலவே வெட்டி கொண்டேன்.. டிரஸ்ஸும் ஆண் போலவே அணிந்து கொண்டேன்.. இப்போது ஒன்றாக குடித்தனம் நடத்தி வருகிறோம்" என்றார். இதையடுத்து, தோழிகள் 2 பேரையும் போலீசார் மதுரை ஹைகோர்ட்டில் ஆஜர்படுத்தினர்... அப்போது ஜெயஸ்ரீ நீதிபதியிடம், கணவருடன் செல்ல விருப்பவில்லை, குழந்தையும் வேண்டாம்.. தன்னுடைய தோழியுடனேயே வசிக்க விருப்பம் என்றார்..
குழந்தை
அவருக்கு உரிய வயதாகிவிட்டது என்பதால் அவரின் விருப்பப்படி செல்லலாம் என்று கோர்ட் தெரிவித்தது... இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஜெயஸ்ரீயை பார்த்து, அவரது குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர்.. தங்களோடு வந்துவிடுமாறு கெஞ்சினர்.. பெற்ற குழந்தையை ஜெயஸ்ரீயிடம் காட்டினர்.. அதையும் அவர் கண்டுகொள்ளவில்லை.. தோழியுடன் கிளம்பி சென்று கொண்டே இருந்தார்.
No comments:
Post a Comment