Friday, October 1, 2021

சிவாஜி பிறந்த நாளுக்காக கூகுள் செய்தது என்ன..?



சிவாஜி கணேசன் பிறந்த நாளை ஒட்டி டூடுள் வெளியிட்ட கூகுள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாளை ஒட்டி அவரை கௌரவிக்கும் வகையில் டூடுள் வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் தேடுபொறி பக்கத்தில் முக்கிய நிகழ்வுகள், நபர்களை நினைவுகூறும் வகையில் வெளியிடப்படும் படங்களே டூடுள் என்று அழைக்கப்படுகின்றன.


அந்த குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட படங்கள் கூகுள் தேடுபொறி பக்கத்தில் கூகுள் பெயரோடு சேர்த்து டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

இன்று வெள்ளிக்கிழமை தமிழின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படும் சிவாஜி கணேசன் பிறந்த நாளை ஒட்டி அவரது படத்தை டூடுளாக வெளியிட்டுள்ளது கூகுள்.

No comments:

Post a Comment