இந்திப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிலிருக்கும் இளம்பெண்களுக்கு பாலிவுட்டின் தலைநகரான மும்பைதான் ஒரே இலக்கு. அப்படி நடிக்கும் ஆசையில் மும்பைக்கு வரும் பெண்களை மிரட்டி, ஆபாசப் படங்களில் நடிக்கவைத்து, அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கும்பல்கள், கொரோனா காலகட்டத்தில் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தது மும்பை காவல்துறை. அதை முற்றிலும் ஒழிக்கும் ஆபரேஷனில் இறங்கியபோதுதான், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவுக்கும் இந்த நெட்வொர்க்குக்குமான தொடர்பைக் கண்டறிந்தது போலீஸ். பாலிவுட்டில் பற்றியெரிந்து கொண்டிருக்கும் இந்த வழக்கு எங்கே ஆரம்பித்தது?
நிர்வாணமாக..நடிக்க வற்புறுத்தப்பட்டோம்!”
கடந்த பிப்ரவரியில் மத் தீவின் சொகுசு பங்களா ஒன்றில், அதிரடி சோதனை நடத்தி ஆபாசப் படக் கும்பலைச் சேர்ந்த ஐவரைக் கைதுசெய்தது காவல்துறை. விசாரணையில் இளம்பெண்கள் சிலர் வலுக்கட்டாயமாகத் தாங்கள் நடிக்கவைக்கப்பட்டதைக் கண்ணீருடன் போலீஸாரிடம் கூறினர்.
இதையடுத்து, நடிகை கெஹானாவைக் கைதுசெய்த காவல்துறை அவரை விசாரித்தபோது, லண்டனைச் சேர்ந்த உமேஷ் காமத் என்பவரின் பெயர் அடிபட்டது. உமேஷ் காமத், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவின் ரகசிய பார்ட்னர் என்பதும் போலீஸுக்குத் தெரியவந்தது.
ஆபாச ஆப்... கோடிகளில் பிசினஸ்!
மாடல்கள், நடிகைகளை மிரட்டி எடுக்கப்படும் இப்படியான ஆபாச வீடியோக்களெல்லாம், ஓர் செயலி மூலம் வெளியிடப்பட்டு வந்திருக்கிறது. `இந்த ஆன்லைன் செயலியை உருவாக்கியவர்கள் ராஜ் குந்த்ரா - உமேஷ் காமத் கூட்டணிதான். ஆபாச வீடியோக்களைத் தயாரித்து அவற்றின் மூலம் பணம் சம்பாதிக்கவே இந்த ஆப்-ஐ அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். பின்னர், அதை லண்டனிலுள்ள ‘கென்ரின்’ எனும் நிறுவனத்திடம் விற்றுவிட்டார்கள்’ என்று காவல்துறை கண்டுபிடித்தது.
அந்நிறுவனத்தை நடத்திவரும் பிரதீப் பக்ஷி, ராஜ் குந்த்ராவின் நெருங்கிய உறவினர். அவரிடம் விலைக்கு விற்பதுபோல் கொடுத்துவிட்டு, அந்தச் செயலியை குந்த்ராவே நடத்திவருகிறார்’ என்று மும்பை காவல்துறை குற்றம்சாட்டியது.
கெஹானா வசிஷ்ட்
‘‘இந்த ஆபாச வீடியோ ஆப் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ராஜ் குந்த்ரா சம்பாதித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான ஐந்து மாதங்களில் மட்டும் ரூ.1.17 கோடி ரூபாய் ராஜ் குந்த்ரா சம்பாதித்திருக்கிறார்’’ என்று மும்பை காவல்துறை துணை ஆணையர் மிலிந்த் பரம்பே ஊடகங்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து, ராஜ் குந்த்ரா கைதுசெய்யப்பட, பாலிவுட் உலகம் பரபரப்பானது. ராஜ் குந்த்ரா மீது மாடல் ஷெர்லின் சோப்ரா, நடிகை ஷகரிகா சோனா, பூனம் பாண்டே உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பெண்களும் பல்வேறு காரணங்களுக்குப் புகாரளித்தனர்.
ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், மோசடி, பெண்களைத் தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் 1,400 பக்க குற்றப்பத்திரிகை காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. சிறையிலிருக்கும்போது ராஜ் குந்த்ரா, பல்வேறு ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இரண்டு மாதங்கள் கழித்து, செப்டம்பர் 20-ம் தேதி, ராஜ் குந்த்ரா ஜாமீனில் வந்திருக்கிறார். ‘‘பெண்களைத் தூண்டியதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை’’ என்று சொல்லி நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. மும்பை காவல்துறையினரோ, ‘‘ராஜ் குந்த்ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொபைல், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவற்றைச் சோதனையிட்டதில், 119 ஆபாச வீடியோக்களைக் கைப்பற்றியிருக் கிறோம். அதை அவர் 9 கோடி ரூபாய்க்கு மேல் விற்கத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது’’ என்று மீண்டும் அதிரடி கிளப்பியிருக்கிறார்கள்.
அதிகாரத் தரப்பின் அழுத்தங்களைத் தாண்டி, இது போன்ற பெண்களுக்கெதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்றுத் தருமா காவல்துறை?
No comments:
Post a Comment