Tuesday, September 28, 2021

இனி.. முகத்தில் ஷேவிங் செய்யத் தடை.. எங்கே..?


இனி இதற்குத் தடை- தலிபானின் அடுத்த அதிர்ச்சி அறிவிப்பு

தலிபான் அமைப்பின் பழமைவாத கொள்கைகளால் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு, அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. 

அந்த வகையில் அந்த நாட்டில் ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை வெட்டுவதற்கோ, மழிப்பதற்கோ முடிதிருத்தம் செய்யும் தொழிலாளிகளுக்குத் தடை விதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. 
அதேபோல வித வித வடிவிலான சிகை அலங்காரம் செய்து கொள்வதையும் தலிபான்கள், ஹெல்மண்ட் மாகாணத்தில் தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், சலூன்களில் பாட்டு மற்றும் இசை சார்ந்து எதையும் ஒலிக்கச் செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 
தலிபான் அமைப்பின் பழமைவாத கொள்கைகளால் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முடி திருத்தம் செய்வதிலும் அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 

No comments:

Post a Comment