Sunday, September 26, 2021

மேல் மருவத்தூர் என்பது குடும்பச் சொத்தா..?

செங்கல்பட்டு மாவட்டம் , மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளார் மனைவி லட்சுமியும் , மாற்று வேட்பாளராக அவரின் மகன் செந்திலும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள் . தனது சொத்து மதிப்பு ரூ .25.57 கோடி என்று லட்சுமியும் , ரூ .27.56 கோடி என்று செந்திலும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கடந்த 1996-2006 வரை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டிருந்தார் லட்சுமி . இந்த ஊராட்சி கடந்த பத்து வருடங்களாகப் பட்டியல் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்தது . தற்போது மீண்டும் பொதுப் பிரிவினருக்கு மாற்றப்பட்டதை அடுத்து , லட்சுமி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் , அவரே ஊராட்சிமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் . இதையடுத்து , " மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் தரப்பினருக்கு பள்ளி , கல்லூரி , திருமண மண்டபம் , மருத்துவமனை , வணிக வளாகம் ஆகியவை உள்ளன . நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏராளமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன . 

இதனால் , அந்தப் பகுதியின் அதிகாரம் தங்கள் கைக்கு வந்தால் கூடுதல் பலம் என்பதற்காக வேறு யாரையும் மனுத்தாக்கல் செய்ய விடாமல் பார்த்துக் கொண்டார்கள் " என்று சொல்லும் அவரை எதிர்க்கத் துணியாத உள்ளூர் அரசியல்வாதிகள் , " மேல்மருவத்தூர் என்ன அவர்களின் குடும்பச் சொத்தா ? ” என்று கொந்தளிக்கவும் செய்கிறார்கள் .

No comments:

Post a Comment