மழை வேண்டி 6 சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலம்: ம.பி. கொடூரம் குறித்து அறிக்கை கோரியது குழந்தைகள் நல ஆணையம்
மத்தியப் பிரதேசத்தில் மழை வேண்டி 6 சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள தமோ மாவாட்டத்தில் இருக்கிறது பனியா கிராமம். இந்த கிராமத்தில் மழை பொய்த்துப் போனதால் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த கிராமத்தில் 6 சிறுமிகள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பூஜை நடத்தப்பட்டுள்ளது. சிறுமிகளின் கைகளில் மரத்தடியைக் கொடுத்து, அதில் தவளைகளைக் கட்டிவைத்திருந்தனர். சிறுமிகளைச் சுற்றி பெண்கள் பஜனைகள் பாடியடி ஊர்வலம் மேற்கொண்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து இரண்டு வீடியோக்கள் வெளியான நிலையில் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து தமோ மாவட்ட ஆட்சியர், "இது வரை எந்தப் புகாரும் கிராமத்திலிருந்து வரவில்லை. இருப்பினும் வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளோம். மக்களுக்கு மூடநம்பிக்கையிலிருந்து விடுபட விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். விசாரணை அறிக்கை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சமர்ப்பிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment