ஐபிஎல் ஒளிபரப்புக்குத் தடை , பெண்கள் விளையாடுவதற்குத் தடை, டி.வி. , ரேடியோவில் பெண்கள் குரல் ஒலிக்கத் தடை, இசைக் கருவிகளுக்குத் தடை எனத் தடைகள் நீள்கின்றன . கொடூரங்களுக்கும் பஞ்சமில்லை .... கடந்த வாரம் எட்டு வயது சிறுவனை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் . ' எங்களை எதிர்த்து போரிடும் பஞ்ச்லூர் படைத்தலைவரின் மகனாக இருக்கலாம் ' என்பதே அந்தச் சிறுவனைக் கொலை செய்ததற்கு தாலிபன்கள் அளிக்கும் வியாக்கியானம் !
“ நாங்கள் மாறிவிட்டோம் ; முன்புபோல் இல்லை என்று தாலிபன்கள் சொன்னதெல்லாம் பொய் . மீண்டும் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது ஆப்கானிஸ்தான் ” என்று கவலை பொங்கச் சொல்கிறார்கள் ஆப்கனை உற்றுநோக்கும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் .
No comments:
Post a Comment