Sunday, November 29, 2020

மனிதனை மறுக்கும் யுகம் : கட்டுரைத் தொடர் - 1

 நான் பல்வேறு கால கட்டத்தில் எழுதிய கட்டுரைகளை இந்தத் தொடரின் மூலம் பதிவேற்றம் செய்துள்ளேன்.வாசித்துவிட்டு தங்களது கருத்துக்களைப் பதிவிடுங்கள். 



இயற்கையை எதிர்த்துப்  போராட முடியாமல் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் செத்து மடிந்தன. இயற்கையை எதிர்த்து நின்று போராடி ஓரளவு வெற்றி கண்டவன் மனிதன் மட்டும்தான். டன் கணக்கு வெயிட்டோடு இருந்த ஆளானப்பட்ட டைனோசர் கூட இயற்கையைஎதிர்கொள்ள முடியாமல் அழிந்து போயின.

மனிதன் இயற்கையை வெற்றி கொண்டதற்கான சூத்திரம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் உழைப்பு. உழைப்பு என்ற ஒரே ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு மனித இயற்கையை வென்றான். மனிதன் இயற்கையை வென்றதற்கு அவனது ஆறறிவு, இன்னொரு முக்கிய காரணம்.

பூமியில் முதல் உயிரினம் ஆர்ச்சியா என்கிற நுண்ணுயிரி. இது பூமியில் வாழ்ந்ததது  30 கோடி ஆண்டுகள். அதற்கு பிறகு, ஆர்ச்சியா பரிமாண வளர்ச்சியடைந்து சைனோபாக்ட்ரியா அது பூமியில்  வாழ்ந்தது130 கோடி ஆண்டுகள். இதற்குபிறகு எரியோபிக் பாக்ட்ரியா. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சிடைந்து. மீன் என்கிற நிலைக்கு வந்தது.  

 மீனின் துடுப்புகள் கை கால்களாகி இகியோசெடாக்கா என்ற நான்குகால் உயிரினமாக மாறியது.  இதன்பிறகு நான்கு கால்களால் தாவித்திரியும் டார்சா. இது குரங்கின் முன்னோடி. அதன் பிறகு, தத்தித்தாவி நடந்து மனித சாயல் கொண்ட ஹோமிடே என்ற குரங்கு. அடுத்து நிமிர்ந்து நடக்கக்கூடிய ஹோமோ ஏரக்ட், பிறகு ஹோமோ சேப்பியன்ஸ்.

நாம் குரங்கிலிருந்து மனிதனாக உருமாற சுமார் ஒன்றரை கோடி வருடங்கள் பிடித்திருக்கிறது. நாமும், குரங்கும், குறிப்பாக சிம்பன்சி குரங்கும் மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்புதான் பிரிந்தோம். நமக்கும் சிம்பன்சிக்கும் இருந்த பொது மூதாதையரின் பெயர் ஆர்டிபித்திகஸ்.

 நாமெல்லாம் ஆர்டிபித்திகஸ் என்ற  மூதாதையரிடம் இருந்தபோது அதற்கு இருந்த குரோமோசோம்களின் எண்ணிக்கை 24. இந்த 24 குரோமோசோம்கள் 23  ஆக குறைந்த போதுதான் நாம் மனித வடிவம் கொண்டோம். நமது மனித மூளையின் வயது 40,000 வருடம். இந்த 40,000  ஆண்டு பரிணாம வளர்ச்சியில் மூளையில் மையலின் என்ற மெலிதான சவ்வு மட்டும் வளர்ந்திருக்கிறது.

 மனித மூளையின் மொத்த எடை ஒன்றரை கிலோ கிராம். 10,000 கோடி நியுரான்கள் என்கிற நரம்புச் செல்களைக் கொண்டுள்ளது நமது மூளை. கி.பி.15 ஆம்நூற்றாண்டில் ஹிப்பாகிரடிஸ் என்கிற கிரேக்க மருத்துவர் மூளையைப் பற்றி ஆராய்ச்சி செய்து சுகம், துக்கம், காண்பது, கேட்பது இவை அனைத்திற்கும் காரணம் மூளைதான் என்றார்.

மனிதன் தனது  மூளைத்திறனால் இந்த உலகத்தை தனக்கு  ஏற்றவாறு தன் அறிவினாலும், உழைப்பினாலும், மாற்றி கொண்டான். உலகத்தில் தலைசிறந்த விலங்கு மனிதன்தான்.  சன்சூ என்கிற சீனத் தத்துவஞானி கூட ‘’அறிவுதான்சக்தி’’ என்று சொன்னார். இவ்வளவு திறனும் நீண்ட நெடிய வரலாறும் கொண்ட மனிதன் இந்த விஞ்ஞான யுகத்தில் அவனும், அவனது சாராம்சமும் கேள்விக்குள்ளாகி நிற்கிறது. மனிதனுக்கான தேவையை விஞ்ஞானம் கேள்விக்குள்ளாக்கிவிட்டது. நவீன விஞ்ஞானம் மனிதனை மறுப்பது மட்டுமல்லாமல் மனிதமற்ற (inhuman)                    நிலையை உருவக்கியுள்ளது.  

மனிதன் தன்னை விஞ்ஞானத் தொழில் நுட்பங்களிடம் ஒப்படைத்துவிட்டான். இதனால், விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாகிவிட்டான். ஆம், கார் ஓட்டுபவன் அந்தக் கார் இயந்திரத்தின் ஒரு பகுதியாகிவிட்டது போல, மனிதன் நவீன தொழில் நுட்பங்களிடம் தன்னை இழந்துவிட்டு சாரமற்றவனாகிவிட்டான்.

இனி, மனிதனின், அவசியத்தையும் தேவையும், இருப்பையும் நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பார்த்துக்கொள்ளும், இயற்கை படைத்த முழு சாரம்சமுடைய மனிதனை  நவீன விஞ்ஞானம் சாரம் அற்றவனாக செயலிழக்க செய்துவிட்டது.

ஆம், 40,000 வருடம் வரலாறு கொண்ட மனிதனின் மூளையின் வேலை என்பது பார்ப்பதை, கேட்பதை, ருசிப்பதை, அலசி ஆராய்ந்து தரம் பிரித்து சேகரித்து வைத்துக் கொள்வதைத்தான் நாம் ஞாபகசக்தி என்கிறோம். ஞாபகசக்தி என்பது என்ன..? நினைவுகளின் தொகுப்பு.

மனிதன் காடுகளில் வாழ்ந்த காலத்திலிருந்து நிலவில் கால்பதிந்துள்ள நவீன விஞ்ஞான காலம் வரை அவன் வாழ்ந்த காலத்தின் தொகுப்பைத்தான் ஞாபகசக்தி என்கிறோம்.

ஒரு மனிதன் பிறந்ததலிருந்து என்னென்ன பார்த்தானோ, கேட்டானோ, ருசித்தானோ, நுகர்ந்தானோ, அதெல்லாம் அப்படியே மூளையில் பதிவாகி அவன் வைத்திருந்தான் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

உங்களுக்கு தற்போது 30 வயது என்று வைத்துக்கொள்ளுங்கள் உங்களது சின்ன வயதிலிருந்து இது நாள் வரை அச்சுப் பிறழாமல் உங்கள் மூளையில் பதிவாகி இருக்கிறது. யாராவது உங்களிடம் வந்து  1986 -ஆம் வருடம் பிப்ரவரி 5 ஆம் தேதி காலையிலே என்ன சாப்பிட்டே..? என்று கேட்க..

நீங்களோ ஆறு இட்லி.. கொஞ்சம் புதினா சட்டினி.. அந்தச் சட்டினிலே  உப்பு கொஞ்சம் கம்மியா.. இருந்துச்சு.. என்று நீங்கள் சொன்னால் எப்படி இருக்கும். இப்படி எந்த வருடத்தில், எந்த தேதியில், எந்த நேரத்தில், என்ன செய்தீர்கள் என்று பட்டுப் பட்டென பதில் சொன்னால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா..? 

மனித மூளைக்கு அந்த சக்தியெல்லாம் கிடையாது. சாத்தியமும் கிடையாது. வாழ்க்கைக்கு அதி அவசியமானதையே நாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். இது தான் மனித மூளையின் சாராம்சம். இப்படித்தான் மனித மூளை இருக்க முடியும், இயங்க முடியும். ஆனால், நவீன விஞ்ஞானம், நான் மேலே சொன்னது போல் முயற்சி எடுத்து வருகிறது.

எப்படி? நமது மூளையில் ஒரு ஓரத்தில் ஒரு இன்ச் அளவுள்ள சிலிக்கன் சிப்களை (chip) பதித்து நமது மூளைக்கு வந்து போகும் அத்தனை தகவல்களையும் பதிவு செய்துவிட்டால் பிறகு, நமக்கு தேவைப்பட்டபோது வெளியில் எடுத்து அந்த சிலிக்கன் சிப்பை  கம்பியூட்டருக்குள் கொண்டு வந்து அதில் சேகரிக்கப்பட்ட அத்தனை தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் காதலிக்கு கொடுக்க நினைத்த முத்தம். இன்னும் திருப்பிக்கட்டாத கடன், நீங்கள் பார்த்த மிஷ்கின் படம், கேட்ட இளையராஜா இசை, இரவு வந்துபோன பேய்க் கனவு இப்படி எல்லா தகவல்களும் பதிவாகி இருக்கும். இது கிட்டதட்ட சி,டி போலத்தான்.

தேவைப்படும் போதெல்லாம் மீண்டும், மீண்டும் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் மூளைக்குள் இருக்கும் சிலிக்கன் சிப்பில் ஒரு டிரான்ஸ்மீட்டரைப் இணைத்து மூளையை மூடியுள்ள கபால ஓட்டில் எங்கேயாவது ஒரு ஓரத்தில் ஒரு மில்லி மீட்டர் நீளமுள்ள ஆண்டனாவைப் பொருத்திவிட்டால் போதும்,

நீங்கள் ஒயின்ஸ் ஷாப்பில் உட்கார்ந்து சோமபானம் சாப்பிட்டால் உங்கள் வீட்டில் உள்ள கம்பியூட்டர் மூலம் உங்கள் பொண்டட்டிக்குத் தெரிந்து விடும். அப்புறம் நீங்க வீட்டுக்கு வந்ததும் ருத்ர தாண்டவம்தான். அன்றைக்கு நைட் பட்டினிதான்..!

ஒரு வேலை தப்பித் தவறி அந்த மூளையில் உள்ள மனிதனின் சிலிக்கன் சிப்பை சம்மந்தப்பட்ட நபரின் எதிரி கைப்பற்றிவிட்டால் என்ன வென்று சொல்வது, என்னவாகும், ஐ.எஸ்.ஐ தலைவனின் கொலைகார சதி திட்டங்களை அடங்கிய சில்லிக்கன் சிப்பை அமெரிக்கா கைப்பற்றிவிட்டால் ஐ.எஸ்.ஐ. தலைவனின் திட்டமெல்லாம் அம்பேல்தான்.

ஒரு மனிதனின் மூளையின் சிந்தனையும், செயளையும், எங்கோ ஒரு அறையில் கம்பியூட்டர்சேகரித்துக் கொண்டிருந்தால் பிறகு, நமது மூளையின் சாராம்சம் தான் என்ன..? 40,000 வருடம் அனுபவமுள்ள மூளையின் சாராம்சம் போய்விடுவதில்லையா..? நமது மூளையின் அத்தனை தகவல்களும் எங்கோ ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டுவிட்டால் மூளை வெறும் கூடுதான். மூளையில்லா மனிதன் வெறும் பிண்டம்தான். அப்ப.. கூடுவிட்டு கூடுபாய்வது என்பது இதுதானோ..!

இதை நவீன விஞ்ஞானம் சாத்தியமாக்கிவிட்டால் மனிதன் என்பவனே கேள்விக் குறிதான் என்று ஏளனமாகச் சிரிக்கிறது நவீன விஞ்ஞானம். நவீன விஞ்ஞானம் மனித மூளையை கேள்விக்குள்ளாக்கிவிட்டது. மட்டுமல்ல, இன்னும் எதில் எதிலெல்லாம் கை வைத்திருக்கிறது தெரியுமா..?

அதையும் பார்க்கலாம், 1996 –ல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இயான் வில்மட் என்ற உயிரியல் விஞ்ஞானி ஒரு வெள்ளை நிற செம்மறி ஆட்டினையும் இணைத்து வெள்ளை நிறப்பெண் செம்மறி ஆட்டின் மாதிரியை உருவாக்கினார். இப்படி உருவாக்கும் முறைக்கு ‘’குளோனிங்’’ என்று பெயர்.

இவர் உருவாக்கிய அந்த வெள்ளை நிறப்பெண் செம்மறி ஆட்டிற்கு பெயர் ‘’டாலி.’’ டாலியை உருவாக்கிய அதே மாடலில் மனிதனையும் உருவாக்க நினைத்து.. 1998-ல் அமெரிக்கா மாசசூ ட்ஸ் நகரில் உள்ள செல் தொழில் நுட்ப உயர்மட்ட ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் மனிதனை உருவாக்கினர்.

பின்பு உலகம் முழுவதும் எழுந்த பலத்த எதிர்ப்பு கோஷங்களினால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. சரி.. ஒரு முழு மனிதனைதான் உருவாக்க முடியவில்லை. ஸ்பேர் ஸ்பார்ட்ஸ்களை உருவாக்குவோமே என்ற ஐடியா முன்னுக்கு வந்தது. என்ன ஸ்பேர் ஸ்பார்ட்ஸ் என்கிறீர்களா? மனிதனுக்குத் தேவையான கிட்னி, கல்லீரல் போன்ற ஸ்பேர் ஸ்பார்ட்ஸ்களைத்தான்.

அமெரிக்காவின் வின்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் தாம்சன் ஸ்டெம் செல் என்ற ஆராய்ச்சியைத் துவக்கினார். இந்த ஆராய்ச்சி எப்படி என்றால் பெண் முட்டையில் உட்கருவை (நுக்ளியஸ்) நீக்கிவிட்டு இன்னொரு ஆணின் விந்தணுவை செல்லின் உட்கருவுடன் இணைத்து கரு உருவாக்கப்படுகிறது.

கரு தரித்த 7,8, வாரங்களில் எம்பிரியோ (முழுக்கரு) நமக்கு தேவையான மரபணு செல்களுடன் சேர்த்து சில குறிப்பிட்ட செல்களைப் பிரித்தெடுத்து அவற்றின் வளர்ச்சிப்பாதையை மாற்றி அமைகிறார்கள்.

பிறகு   நமக்குத் தேவையான செல்களையோ அல்லது சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை உண்டு பண்ணக்கூடிய செல்களையோ  உருவாக்குவதுதான் இந்த ஸ்டெம் செல் ஆராச்சியின் நோக்கம். சுருக்கமாகச் சொன்னால், இச்சோதனையின் வெற்றியாக டாக்டர் ஜேம்ஸ் தாம்சன் எம்பிரியோனிக் ஸ்டெம் செல்கள் மூலம் இதயத் தசையை உருவாக்கிக்காட்டினார்.

இதேபோல், டாக்டர் ஜோகன் என்பவர் மனித மூளையின் செயல்பாட்டுக்கு அவசியமான நியூரான் செல்களை உருவாக்கி காட்டினார். ஆனால், அமெரிக்க தேசிய சுகாதார மையத்தின் இயக்குனர் இந்த எம்ப்ரியோனிக் ஸ்டெம் செல் ஆராய்சிக்கு நிதி உதவி வழங்க இருப்பதாக அறிவிக்க.. ! இதுவும் ஒரு வகையில் குளோனிங் தான் என்று சொல்லி ஆராய்ச்சியை நிறுத்திவிட்டது அமெரிக்க அரசு.

ஆனால் விஞ்ஞானிகளோ நாங்கள் தானமாகவோ அல்லது வேண்டாம் என்று சொல்லி கைவிடப்பட்ட கருவிலிருந்துதான் இந்த ஸ்டெம் செல் வளர்ச்சி முறையை மேற்கொள்கிறோம் என்று சமாதானம் சொல்லிப்பார்த்தார்கள். அமெரிக்க அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.

மைக்கேல் வெஸ்ட் என்ற ஆராய்ச்சியாளர் வேறு மாதிரி யுக்தியை கையாண்டு பசுவின் கரு முட்டையில் மனிதனின் உயிர் அணுவில் உள்ள நுயூக்ளியசை புகுத்தி கரு நிலைக்கு வந்ததும் அதிலிருந்து செல்களை பிரித்தெடுத்து உடல் உறுப்புகளுக்கு அவசியமான எம்பிரியோ ஸ்டெம் செல்களை உருவாக்கினார்.

அவர் உருவாக்கியதை ஒரு பத்திரிகையில் வெளியிட.. அன்று அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்த ஆராய்ச்சிக்கு எதிர்ப்பு தெவித்தார். மொத்தத்தில் இந்த ஆராய்சிகள் பற்றி சொல்ல வேண்டுமென்றால், மனித உருவமே இல்லாமல் வெறும் உடல் உறுப்புகளை உருவாக்கி, தேவைப்படும் போது எடுத்துப் பொருத்திக் கொள்வது என்பதுதான் இதன் முக்கிய நோக்கம்.

மனித உடல் உறுப்புகளை ஸ்டெம் செல் முறையில் உருவாக்கி புத்தம் புதிதான, பரிசுத்தமான, கிட்னி, இதயம், நுரையீரல், கல்லீரல் போன்றவற்றை பெறலாம். பெற்றதை தேவையான நோயாளிக்குப் பொருத்தலாம். இந்த முறைக்கு மறு அமைப்பு சித்தாந்தம் (reset theary) என்று பெயர்.

எனவே, ஒருவனுக்கு கிட்னி கோளாறு என்றால் அந்த நபருக்கு வேறு எந்த ஒரு நபரிடமிருந்து கிட்னியை வாங்கிப் பொருத்தினால் அது அவனுக்கு ஆயுசு முழுவதும் இருக்குமா..? என்று தெரியாது. ஏனென்றால், வாங்கிப் பொருத்துகின்ற கிட்னி ஏற்கனவே பல ஆண்டுகள் செயல்பட்டதால் குறைபட்டிருக்கும்.

இப்படி மற்றவர்களிடம் வாங்கிப் பொருத்துகின்ற எல்லா உறுப்புகளின் நிலையும் இதுதான். இதனால் எம்பிரியோனிக் ஸ்டெம் செல் முறையில் சுடச் சுடச் சுத்தமான உடல் உறுப்புகளை உருவாக்கலாம். இப்படி உருவாக்கப்படும் அத்தனை உறுப்புகளும் மனிதனுக்கு பொருத்தப்பட்டால் அந்த நபர் மேலும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ முடியும்.

இப்படி கண், காது, மூக்கு, நுரையீரல், கல்லீரல் என்று உறுப்புகளை பொருத்திக் கொண்டே வந்தால் அந்த மனிதனின் உறுப்புகள் புதிதாகின்றன. புதிதாகின்றபோது அவனும் புதிதாகிறான். மனித உடல் உறுப்புகளை மாற்றிப் பொருத்திப் பார்த்த விஞ்ஞானம் மனித உயிரின் ரகசியத்தையும் கண்டறிந்திருக்கிறது.

நமது உடம்பில் உள்ள ஜீன்களில்தான் உடம்பில் கோடான கோடி செல்களில் மையத்தில் நுயூக்ளியஸ் என்ற உட்காரு உள்ளது. இந்த உட்கருக்களின் மையத்தில் ஜீன்கள் உள்ளது. இந்த ஜீன்களில் டி.என்.ஏ என்பது இருக்கிறது. இது சுழல் வடிவம் கொண்ட ஏணி போன்ற அமைப்புடையது. இதில்தான் நமது ரகசியங்கள் இருக்கிறது.

நமது அம்மா/அப்பாவினைப் போல நம்முடைய உடல் உறுப்புகளும் தோற்றமும் இருப்பதற்கான ரகசியங்கள் இதில்தான் பொதிந்து இருக்கின்றன. இதை கொஞ்சம் கொஞ்சமாக அலசி ஆராய்ந்து படித்து முடித்திருக்கிறார்கள்.

எந்த ஜீன் கிட்டினியை உருவாக்கிறது. எந்த ஜீன் கேன்சர் நோயை உருவாக்குகிறது. அப்பாவைப் போல் நீண்ட மூக்கை மகனுக்கு உருவாக்கும் ஜீன் எது? இப்படி நிறைய விசயங்களை தேடிப் படித்ருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு 50 ஆயிரத்திலிருந்து லட்சம் வரை ஜீன்கள் இருக்கிறது.

இந்த ஜீன்களின் ரகசியங்களை ஆராய தி ஹியூமன் ஜீனோம் ப்ராஜெக்ட் (the human genome project) என்ற பெயரில் ஐம்பது மில்லியன் டாலர் செலவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சித் திட்டத்தை உருவாக்கி 1990-ஆம் ஆண்டு இறுதிக்குள் ஜீன்களின் ரகசியத்தை கண்டு அறிந்திருக்கிறார்கள்.

கேன்சர் வருவதற்கான ஜீன்களை கண்டறிந்து அதை வெட்டி நீக்கிவிட்டால் கேன்சர் வியாதி தடுக்கப்பட்டு அவரது வயது நீட்டிக்கப்படுகிறது. ஆக, நவீன விஞ்ஞானம் உயிரின் ரகசியத்துக்குள்ளும் கை வைத்து மனித உயிரின்  ரகசியத்தை வெளிக்கொண்டுவந்து வெட்ட வெளிச்சமாய் ஆக்கிவிட்டது.

ஒரு கம்பெனியைப் போல் மனித உடல் உறுப்புகளை உருவாக்குவது, உருவாக்கி, மாற்றுவதில் ஆரம்பித்து ஜீன்களை படிப்பது, வெட்டி நீக்கி மீண்டும் ஓட்டுவது என்று, இப்படி மனித உடலில் எல்லா சாரம்சங்களையும் ஒரு புத்தகத்தைப் போல் திறந்து விரித்து வைத்திருக்கிறது நவீன விஞ்ஞானம்.

இயற்கை உருவாக்கி கொடுத்த நோய் படாத, பிழை இல்லாத, குறைபடாத ஆதர்ச மனிதன் இப்போது எங்கே? எல்லாவற்றையும் விஞ்ஞானத்திடம் பறிகொடுத்துவிட்டு மனிதன் சுயத்தை இழந்து நிற்கிறான்.                                                      

                                               

Thursday, January 10, 2019

India's longest dream - இந்தியாவின் நீண்டநாள் கனவு


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில், சந்திராயன்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மேலும் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகளை கண்டறிந்து சந்திராயன்-1 விண்கலம் பூமிக்கு தகவல் அனுப்பியது. கடந்த 2008ம் ஆண்டு செலுத்தப்பட்ட சந்திராயன்-1 விண்கலம் நிலவில் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. சந்திராயன்-1 விண்கலம் நிலவை சுற்றி மட்டுமே வந்தது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டும் தங்களின் விண்கலத்தை நிலவில் இறங்கியுள்ளன. இருந்தாலும் இந்தியாவின் சந்திராயன் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. சந்திராயன்-2 திட்டத்தில் நிலவில் செயற்கைகோளை இறங்கி ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. முதல்கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி சந்திராயன்-2 விண்கலம் விண்ணுக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களுக்காக சந்திராயன் விண்கலம்-2 ஏவுதல் அக்டோபர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

சந்திராயன்-2 விண்கலம் அக்டோபருக்கு பதிலாக டிசம்பர் மாத்தில் ஏவப்படும் என்று இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. போக்குவரத்து மற்றும் வழிகாட்டுதலுக்கு ஐஆர்என்எஸ்எஸ்-1ஹெச் செயற்கைகோள் ஏவப்பட்ட போது, வெப்பத் தகடுகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டில் இருந்து செயற்கைகோளை பிரித்து புவி வட்ட பாதையில் நிலை நிறுத்த முடியாத நிலை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது.

இஸ்ரோ சார்பில் ஏவப்பட்ட ஜிசாட்-6 செயற்கைக்கோள் விண்ணிற்கு ஏவப்பட்டது. தரைக்கப்பட்டு மையத்தில் இருந்து அதன் தொலைத்தொடர் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கைக்கோளை நிலை நிறுத்துவதிலும், தகவல்களை பெறுவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேற்கூறிய இரண்டு தொழில் நுட்ப கோளாறுகள் சந்திராயன்-2 திட்டத்திற்கு ஏற்பட கூடாது என இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதியாக உள்ளனர்.

இதன்காரணமாக சந்திராயன்-2 விண்கலம் ஏவும் முயற்சி 2 முறையாக டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேலும் வரும் டிசம்பர் மாதம் ஒரு விண்கலத்தை விண்ணுக்கு ஏவுகிறது. இதனால் நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நாடுகளில் பட்டியலில் இஸ்ரேலுக்கு 4ம் இடம் கிடைக்குமா இல்லை இந்தியாவுக்கு 4ம் இடம் கிடைக்குமா என்று போட்ட போட்டி நடத்துகின்றன. 

On the behalf of the Indian Space Research Organization, the Chandrayaan-1 spacecraft was successfully launched into space. Subsequently, the Chandrayaan-1 spacecraft reported the possibility of having more water in the moon. The Chandrayaan-1 spacecraft, which was launched in 2008, is not designed to land on the ground. The Chandrayaan-1 spacecraft came only around the moon.

Only 3 countries in the US, Russia and China have landed their spacecraft on the moon. Yet India's Chandraayan recorded the biggest success. In the Chandrayaan-II project, ISRO planned to explore the satellite in the moon. On April 23, it was announced that the Chandrayaan-2 spacecraft would be launched. For a few reasons Chandrayaan spacecraft-2 launch was adjourned for the first week of October.

ISRO has postponed the launch of Chandrayaan-2 spacecraft in October instead of October. ISRO scientists have been unable to sustain the satellite from the rocket due to the disruption in the heat plate when the IRNSS-1H satellite was launched for transport and guidance.

The launch of the GSAT-6 satellite was launched on ISRO. Its teleconference is broken off from the center of the ground. This has resulted in the retention of satellites and data retrieval. ISRO scientists are not sure that the above two technological disorders should not be shifted to Chandrayaan II.

As a result, the Chandrayaan-2 spacecraft has been delayed for 2 times by December. Israel also launches a spacecraft in December to inspect the moon. So, the number of countries that landed on the moon was 4th, and the country is going to be ranked 4th.


Sunday, January 6, 2019

Medicine Watching Robot. - மருத்துவம் பார்க்கும் ரோபோ.



ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த பர்ரே என்ற இன்ஜினியர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து டெலிடேக் டைல் ஹேன்ட் (teletactile hand)  என்ற தொலை தூரத்திலிருந்து இயக்கம் ரோபோவை தயாரித்துள்ளனர். இந்த ரோபோவில், மருத்துவர் இருக்கும் இடத்தில் வீடியோ மானிட்டர் திரை இருக்கும். இதனுடன் மின்சாரத்தால் இயக்கப்படும் சிறுகம்பி (joy-stick) இணைக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவர் பிரத்தியோகமான கையுறையை அணிந்துகொண்டு, மின்சாரத்தால் இயக்கப்படும் அந்தக் கம்பியின் மேல் தனது உள்ளங்கையை வைப்பார். அப்போது  மற்றொரு முனையில் ரோபோவிற்கு முன்னாள் அமர்ந்திருக்கும் நோயாளியின் உடலை, அந்த ரோபோவின் மெல்ல பரிசோதிக்கத் தொடங்கும். நோயாளியின் உடல் வெப்பம், திசுக்களின் வடிவம், திசுக்களின் உறுதித் தன்மை, நோயாளியின் இதயத்துடிப்பு, இப்படி எல்லா விஷயங்களையும் தொலைதூரத்தில் உள்ள மானிடர் திரைக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் மருத்துவருக்கு தெரிவிக்கும்.

ரோபோ சொல்லும் செய்தியை மருத்துவர் புரிந்துகொண்டு நோயாளிக்கு சிகிச்சைக்கான ஆலோசனைகளை சொல்லுவார். இனி எல்லா நாடுகளிலும் இந்த மாதிரியான சிகிச்சைமுறை சர்வசாதரணமாக இருக்கும் என்கிறார் இந்த சிகிச்சை முறையை உருவாக்கிய பர்ரே. பர்ரே சொல்வதுபோல இந்த நவீன யுகத்தில் எல்லாம் சாத்தியமே..! 


 Burrey, an engineer from Georgia, has collaborated with her friends to produce a robot from a remote distance from the Teletactile Hand. In this robot, there will be a video monitor screen where the doctor is located. There is also an electric-driven jacket.


The doctor wears a stylized glove and puts his palm on the electric-driven wire. At another point, the robot will begin to examine the patient's body, the robot's face. The patient's body temperature, the shape of the tissues, the stability of the tissues, the patient's heartbeat, will tell all the things to the former sitting doctor for a distant monitor screen.

The physician understands the robot telling and gives advice to the patient for treatment. Braille, who created this treatment, says that in all countries, this kind of healing is universal. Everything is possible in this modern era, as Bury says!              

Thursday, December 27, 2018

ஒரு மெக்கானிக்கின் சிந்தனையே செல்போன்

மார்டின் கூப்பர் 

உலகெங்கும் மொபைல்(cellphone) புரட்சி நடந்து வருகிறது. பள்ளிக்கூட குழந்தைகள் கூட செல்லோடு
தான் பள்ளிக்கூடம் வரும் அளவிற்கு அதன் ஆளுமை சமூகத்தில் நிலவுகிறது. முகம் பார்த்து செல்போனில் பேசும் அளவிற்கு போனின் தரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தனிமையே இனி இல்லை. உங்கள் கழிவறையில் கூட நீங்கள் தனியாக இல்லை என்று தத்துவங்கள் உதிர்க்கப்படுகின்றன. உலகம் ரொம்பவே சுருங்கிவிட்டது. இப்படிப்பட்ட மிகப்பெரிய மொபைல் புரட்சிக்கு காரணகர்த்தா யார் ? என்றால், அவர் பெயர் மார்டின் கூப்பர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் மோட்டோரோலா பங்க் ரோல்ட் இரிடியம் எனும் நிறுவனம் நேரடியாக 60  தகவல் தொழில் நுட்ப செயற்கைக் கோள்களை விண்ணிள் செலுத்தி, தகவல்களைப் பெற்று பெரிய அளவிற்கு வியாபாரம் செய்யலாம் என்று அந்த நிறுவனம் களத்தில் இறங்கியது . ஆனால், அந்த நிறுவனம் எதிபார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காமல் போகவே, அந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. ஆனால், அதே மோட்டோரோலா நிறுவனம்தான், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னாள் மொபைல் போனை முதலில் சந்தையில் இறக்கியது. அதற்கு காரணம் டாக்டர், மார்டின் கூப்பர். அப்போது  மோட்டோரோடோலா நிறுவனத்தின் செயல் அதிகாரி.


கம்பி இல்லாத தந்தி முறையையும் பேச்சை வடிவமாக்கும் (visible speech)முறையையும் இணைத்து அலெக்சாண்டர் கிரகாம்பெல் தொலைபேசியை கண்டிபிடித்தார். வருடம் 1876. தாமஸ் வாட்சன் எனும் மெக்கானிக்கிடம் உதவியாள் சிறுவனாக இருந்தவர்தான் இந்த கிராகாம்பெல்.ஹெர்ட்சும்,மார்க்கோனியும் அயனிகள் மண்டலத்தை கண்டுபிடித்திருந்த அந்தக் காலத்தில் ஒருவரோடு ஒருவர் தொலை தொடர்பு கொள்ள முடியும் என்றெல்லாம் யாருக்கும் நம்பிக்கை இருக்கவில்லை. வாட்சனும், கிரகாம்பெல்லும்காது கேளாதவர்கள். பிறறோடு உரையாட ஊமைகளின் மொழியை சமிங்கைகளில் அமைத்துக் கொடுத்தார்கள்.


வாய் வழிவரும் சைகைகளை டெலிகிராப் முறையில் மின் இயல்மூலம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கடத்தும் கடத்தியை பிறகு, தனது ஆய்வுகளின் மூலம் கிரகாம் பெல் கண்டுபிடித்தார். இதற்கு அரசு அளித்த காப்புரிமை ஆவணத்தின் (patent)எண்174,465. பத்தொம்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒலி அதிர்வுகளை திடப்பொருள்களில் கடத்திட முடியுமென்று பலரும் நம்பினார்கள். மைகேல் பாரடே, முழுமையான ஒலி அதிர்வுகளை மின் அதிர்வுகளாக மாற்றினார். எலெக்ரோடுகளைப் பயன்படுத்தி சில மீட்டர்கள் தொலைவு வரை  ஒளியை கடத்திக் காட்டியவர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  சார்லஸ் பவுர்சல்.

ஜெர்மனியின் பள்ளி ஆசிரியரான பிலிப் ரெய்ஸ்சை என்பவரை மறந்து விடமுடியாது. 1861 –ல் கிட்டத்தட்ட டெலிபோனை கண்டுபிடித்தேவிட்டார். டெலிபோனை கண்டுபிடித்தது உண்மையில் அவர்தான் என்றும், அதைப் பெல் திருடிவிட்டார் என்றும் கூட சொல்கிறார்கள். கிரஹாம் பெல்லும், எலிசா கிரேவும் அடுத்தடுத்து ஒரே மாதிரியான தொலை ஒலி  கடத்தி இயந்திரங்களை உருவாக்கினார்கள். ஒரே நேரத்தில் பல வகையான செய்திகளை ஒரே கம்பியில் செலுத்த முடியுமா என்கிற சவாலாக இருந்தது.  ஒரு இடத்தில் ஒலி  அதிர்வுகளை மின் அதிர்வுகளாக மாற்றி கம்பியில்லாத் தந்தி முறையில் அனுப்பி, மறு இடத்தில் மின் அதிர்வுகளை மீண்டும் ஒலி  அதிர்வுகளாக மாற்றும் இந்த கண்டுபிடிப்பு, கிட்டதட்ட கிரேவும், பெல்லும் தனித்தனியே ஒரே சமயத்தில் கண்டுபிடித்ததுதான் என்றாலும்,பெல்லுடையதே வேலை செய்தது.

பின்வந்த ஆண்டுகளில் பெல்லும், வாட்சனும் பொதுமக்கள் உபோயோகிக்கும் அளவிற்கு தொலைபேசியை கொண்டு வந்தனர். முதலில் கட்டிடங்கள், அப்புறம் சில வீதிகள், ஊர்கள் என்று தொடங்கி ஒலி அலைகள் கண்டம்விட்டு கண்டம் செல்ல 1947- வரை ஆகிவிட்டது. ஆனால், தனது வெளியிடப்படாத ஆய்வுக் கட்டுரை ஒன்றில் பெல் ஆய்வகத்தின் டி.எச்.ரிங். தனது உதவியாளரும் மாணவருமாகிய டபிள்யு.ஆர் யஸ் என்பவரின் உதவியோடு 1947 லேயே  செல் பற்றிய யூகங்களை வெளியிட்டிருக்கிறார். ‘’சிறிய செல்கள் உடலுக்குள் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவது போல, பல செல்களை  ஒரே மையாக்கட்டுப்பாட்டிலிருந்து தகவல் தொடர்பை சாத்தியமாக்கலாம்’’ என்கிற ரிங்கின் சொற்றொடரை அப்போது யாருமே கண்டுகொள்ளவில்லை.
இப்போது செல்போன்கள் இதே அடிப்படையில் இயங்குவதோடு செல்(cell)என்கிற சொல்லும் கச்சிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தத் துறையில் ஆராய்ச்சிகள் காலம்தாழ்ந்தே தொடங்கின. ரிங்கினுடைய ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் ஆன பிறகே ஆ.டி.டி.மற்றும் பெல் ஆய்வகம் ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஆய்வகத்திற்கு ஆராய்ச்சி முறை தொலைபேசி செல்லுலார் போன்களை கொண்டுவந்தன. ஆனால், வாக்கி டாக்கிக்கும் இந்த செல்களுக்கும் வித்தியாசம் ரொம்ப இல்லை. போர்க்காலங்கள் மற்றும் போலீஸ்காரர்கள் தவிர யாருக்கும் இவை ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை. இந்த இடத்தில் டாக்டர் மார்டின்கூப்பர் நுழைகிறார்.

மார்டின் கூப்பர் பள்ளியில் பாடம் படித்துக் கொண்டே டி.வி. மெக்கானிசம் தெரிந்து கொண்டார். வீட்டில் ஒரு மின்கருவியையும் விட்டுவைக்கவில்லை. பலமுறை மோசமாக ஷாக் அடித்து தூக்கியெறியப்படும் அளவிற்கு தன்னையே பணயமாக வைக்கும் தைரியம் அவருக்கு இருந்தது. சிக்காகோவில் கல்லூரிப் படிப்பிற்கு மின்னியலை எடுத்துக் கொண்டார். பலமுறை முயன்றும் உருப்படியான வேலை எதுவும் கிடக்கவில்லை. பெல் நிறுவனமும் இவரது விருப்பத்தை புறக்கணிக்கவே மனிதர் வெறுத்துப் போனார். அப்புறம் ஒருவழியாக மோட்டாரோலா இரிடியத்தில் மெக்கானிக் உதவியாளராக சேர்ந்து ஆய்வக உயர்பிரதிநிதி அந்தஸ்திற்கு அடுத்து மூன்றாண்டில் உயர்ந்ததோடு பெல் ஆய்வகத்திற்கு அடுத்ததாக உலகில் அதிக கண்டுபிடிப்புகளை காப்புரிமையாக பதிவு செய்த பெருமையையும் விரைவில் மோட்டரோலா தேடிக்கொடுத்தார்.

முதலில் கூப்பர் கூட சும்மா  வாக்கி டாக்கி மாதிரிதான் என்றே நினைத்தார். ஒரு தொலைபேசியில் இருவர் மாறிமாறிப் பேசிக் கொள்ளலாம். அவ்வளவுதான் இரண்டை மூன்றாக்கினார்கள். சிக்காகோவில் 150 இணைப்புகள் வாக்கி டாக்கியாக்கி ஒரு குறிப்பிட்ட ஆண்டனா மாதிரி அமைப்பின் அருகில் இருந்து மட்டுமே பேசிடமுடியும். ஒரு நாள், இரவு ஆய்வாளர்கள் அனைவருமே வீடு திரும்பிவிட்ட பிறகு கூப்பர் தனிமையில் வரைபடங்களில் மூழ்கினார். இது நடந்தது 1973-ல். சர்கியூட் போர்டு என்று அழைக்கப்படும் மின் இணைப்பிகள் கம்பில்லா தொலைபேசிகளில்,  மின் ஏற்பிகளை  மின் அலைகளாக இல்லாமல்  மின்னணுக்களாக (எலக்ட்ரான்) மாற்றமடைய வைத்தால்,  ஒருவர் கையில் வைத்துக் கொண்டு திரியும் அளவிற்கு தொலைபேசிகளை உருவாக்கிட முடியும் என்று கூப்பர் நம்பினார்.   


1973- ஏப்ரல் 3 ஆம் தேதி பெரிய பவுடர் டப்பா அளவிற்கு ஒன்றை கையில் வைத்துக் கொண்டு அதில் பேசிக்கொண்டே மார்டின் கூப்பர் ஆபிசுக்கு வந்தார். அதுதான் முதல் செல்போன் என்று அப்போது யாருக்கும் தெரியாது. அதில் போன் எண்கள் வரிசையாக தொலைபேசி போலவே அமைக்கப்பட்டிருந்தன. மேல ஒருவித ஆண்டனா  சிறிய டிரான்சிஸ் டார் வானொலியில் மாதிரி நீட்டிக்கொண்டிருந்தது. செய்தியாளர்களை சந்திக்கும் முன் டாக்டர் மார்டின் கூப்பர் தன்னை கைவிட்ட ஜோயல் ஏங்கலை தனது புதிய கண்டுபிடிப்பான கைப்போனில் மூலம் அழைத்து அதைப் பரிசோதித்தார்.

சாலையின்  முனையில் கைப்போனில் என்னை அழுத்தி விட்டு அவர் பேசத் தொடங்கியதைப் பார்க்க ஒரு கூட்டம் கூடிவிட்டது. இந்தப் போன் தான் மோடோரோலா டைனா - டாக் என்ற முதல் மொபைல் போன். இதன் எடை ஒரு கிலோ  அளவு பெரியதாக இருந்தது. முப்பத்தைந்து நிமிடம் அதன் டாக்டைம்! பத்து மணி நேரத்திற்கு ஒரு முறை அதை நீங்கள் சார்ஜ் செய்யவேண்டும். படிப்பதற்கு பார்ப்பதற்கு எந்த காட்சியும் வராது. 2000- பேர் அமெரிக்காவில் இதை பயன்படுத்தத் தொடங்கியபோது ஜப்பானியர்கள் விழித்துக்கொண்டனர். 1979-ல் டோக்கியோவில் யார் வேண்டுமானாலும் வாங்கி உபயோகிக்கக்கூடிய வகை செல்போன்களை சந்தையில் இறங்க  வியாபாரரீதியில் அது பெரிய வெற்றி அடைந்ததது.

1981-ல் கூப்பரின் யோசனைப்படி அமெரிக்காவில் வாஷிங்டனிலும், பால்டிமோரிலும் இருந்து ரேடியோ அலைகள் மூலம் செல்லில் பேசமுடிந்தது. ஊர் விட்டு ஊர் பேசும் முறையை மோட்டரோலா தொடங்கியது. நோக்கியா,சைமன், ஏர்காட்டேல், பிலிப்ஸ் என்று ஐரோப்பிய ஜாம்பவான்களும் களத்தில் குதித்தனர். ‘’ரோமிங்’முறை 1982 -ல் தான் வந்தது. உலகம் முழுவதும் இன்று கோடிக்கணக்கான செல்கள் இயங்க காரணகர்த்த மார்ட்டின் கூப்பர்தான்.
                                             

Wednesday, December 26, 2018

ஈமெயிலை உலகுக்கு அளித்தவன்


உலகின் தபால்துறை, மெல்ல மெல்ல முடங்கி வருகிறது. அஞ்சல் அட்டை, இன்லான்ட் லட்டர், என்றால் என்னவென்று இனி குழந்தைகளுக்கு பாடம் நடத்த வேண்டி வரலாம். பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்கும் மாணவர்கள் கூட இப்போதெல்லாம் விடுப்பு விண்ணப்பத்தை மின் அஞ்சலில் அனுப்பத்தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு இன்று ஈ-மெயிலின் தேவை உணரப்பட்டுள்ளது. ஈ-மெயில் என அழைக்கப்படும் ஹாட் மெயிலுக்கு நமது தபால் துறை உள்ள வித்தியாசம் என்னவென்றால், கணினி வழியே கடிதங்கள் அனுப்புவதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. மின் அஞ்சல்  அது முழுக்க முழக்க ஒரு இலவச சேவை. இந்த மாபெரும் விஷயத்தை கண்டுபிடித்து உலகை மின் –அஞ்சல் மயமாக்கியவர்.

ஸ்பீர் பாட்டியா எனும் இந்தியர். ஸபீர் பிறந்தது, பள்ளியில் படித்தது எல்லாமே பெங்களூரில், 1968-ல் பிறந்தார். அவரது தாய் ஒரு வங்கி மேலாளர். அப்பா மத்திய பாதுகாப்பு மற்றும் தளவாட ஆய்வகத்தின் நிர்வாக மேலாளராக இருந்தார். பள்ளிப் படிப்பை முடித்த சபீர் குடும்பப் பாதுகாப்பு கருதி மேல்படிப்பிற்காக அமெரிக்கா அனுப்பப்பட்டார். 1988, செப்டம்பர் 23-ல் , சபீர் பாட்டிய அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலத்தில் போய்  இறங்கினார். பெங்களூரிலிருந்து அங்கெ போய் இறங்க 22 மணி நேரம் ஆகியது. போனதும்  டெலிபோன்.. பிறகு உடனே ஒரு கடிதம் போட்டுவிடு ‘’ என்று அவரது அம்மா சொல்லியிருந்தார். அவரைப்  படிக்க வைக்கும் செலவு தொகையை ஏற்றிருந்த (ஸ்காலர்ஷிப்) கலிபோர்னிய தொழில் நுட்பக் கல்வியகம் அவருக்கு லாஸ்-ஏஞ்சல்ஸ்ஸில் இறங்கினால் என்ன என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஒரேவரியில் வழி சொல்லியிருந்தது.  

கையில் இருந்தது 400 டாலர். அமெரிக்காவின் யாரையும் தெரியாது. அமெரிக்கா வந்த நான்கு வருடங்களுக்குப் பிறகு ஸ்டாண்டுபோர்டு பல்கலைக் கழகத்தில் இவர்களை சந்தியுங்கள் நிகழ்ச்சியில் சன்மைக்ரோ சிஸ்டம் நிறுவனர் ஸ்காட் மக்நீலே, ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் வாஸ்னிக் போன்ற கணினி ஜாம்பவான்கள் வந்து தங்களது முன்னேற்றத்தை விவரித்து உங்களாலும் முடியும் என்று பேசின கூட்டத்தில் கலந்துகொள்கிறார். சபீர் பாட்டியா தனது படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பவில்லை. தனது ஆத்ம நண்பன் ஜாக் ஸ்மித்தோடு சேர்ந்து ஒரு கம்பெனியில் கணினி வித்தகராக வேளையில் சேர்ந்தார். ஆப்பிள் கணினி நிறுவனத்தில் ஹார்வர் பொறியாளராக வேலை. நம்முடைய வாழ்கையே வீணாகிறது. ஸ்மித் நாம.. ஏதாவது செய்தாக வேண்டும்..தனது நண்பனிடம் புலம்புகிறார்.


இந்த சமயத்தில், 1990களின் தொடக்கத்தில் சைபர் ஸ்பேஸ் எனும் ஸ்டீவ் கேசின் உரையாடல் முறை மட்டுமே உண்டு. சபீர் யோசித்தார் கணினி வழி கடிதம் சத்தியமா..? சாத்தியமானது. ஈமெயில் என்பது தற்போதைய சொல். அதற்கு சபீர் வைத்தது HTML. சபீர் பாட்டியாவுக்கு இதை சாதிக்க மூன்று லட்சம் டாலார்கள் தேவைப்பட்டது. கம்பியூட்டர் நிறுவனங்களை நம்பி பணம் போட முயன்ற பத்தொன்பது பண முதலீட்டாளர்களிடம் தனது திட்டத்தை பலவிதத்தில் விவரித்தும் யாரும் முன் வரவில்லை. 

கடைசியில் ட்ராப்பர் நிறுவனர் ஸ்டீவ் ஜூர் வெட்சன் பணம் போட முன் வந்தார். ஆனால், லாபத்தில், முப்பது சதவிகிதம் பங்கு கேட்டார். சபீர் கடைசியில், 15% தருவதாக சொல்லி பேரம் முடிந்தது. சபீர் பாட்டியாவும் ஸ்மித்தும் ஆப்பிள் நிறுவனத்தின் வேலையைவிட்டனர். கலிபோர்னியாவில் பிராமோடில் என்ற இடத்தில் அலுவலகம் திறந்தார். அந்த கம்பியூட்டர் நிறுவனத்தில் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க.. சில நண்பர்களை வேலைக்கு வைத்திருந்தார்.  கம்பெனியின் வியாபாரம் பெரிதாகும் போது பங்கு மார்கெட்டில் பங்கு (SHARE ) தருவதாக சொல்லியிருந்தார். ஆனால், கம்பெனியை நடத்த 1996 - ஜூலையில் பணமில்லை.

அப்போது இந்த திட்டத்திக்கு டாக் காலிஸ்லே என்பவர் உதவுவதற்கு முன் வந்தார். அதை வாங்க விருப்பம் இல்லாத ஸ்பாட்டியா வங்கியில் ஒரு லட்சம் டாலர் கடன் வாங்கினார். 1996 ஆம் ஆண்டு ஜூலை 4- ஆம் நாள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தனது சுதந்திர தினத்தை கொண்டாடிய நாளில் சபீர் பாட்டியா ஹாட்மெயிலை உருவாக்கினார். ஒரு மணி நேரத்தில் நூறு பேர் கடிதங்களை அனுப்பி முதன் முதலில்  வெற்றி கண்டனர். கணினி வைத்திருந்தவர்கள் மட்டும் www வை பயன்படுத்திய காலத்தில் ஹாட்மெயில் கணினி இருக்கத் தேவையில்லை. பெறுபவருக்கும் கணினி இருக்கத் தேவையில்லை.  முகவரி ஒன்று இருந்தாலே போதும். கணினி மையங்களில் சென்று அனுப்பலாம் பெறலாம். மூன்று வாரங்களில் ஒரு லட்சம் நிரந்தர முகவரியாளர்களை பெற்றது ஹாட்மெயில் டாட்காம்.

ஸ்பீர் பாட்டியா 

25  பேர்களை கொண்டு இயங்கி வந்த ஹாட்மெயில் நிறுவனத்திற்காக மீண்டும் உதவி கேட்டு  டாக் காலிஸ்லேவிடம் சென்றார் சபீர். ஆனால், டாக் காசிலே இரு நூறு மில்லியன் டாலர் விலைக்கு உங்களது கம்பெனியை தந்தால், நான் உங்களுக்கு உதவத் தயார். ஆனால், ஆறுமாதங்களுக்குப் பிறகு, ஹாட்மெயில் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை ஆறு மில்லியன் ஆகியது. அப்போது பில்கேட்ஸ் உங்களை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்தது. சபீர், மிகுந்த சதோசமடைந்தார். ஆனால், அப்போது ஜெர்ரி யாய் என்ற ஜப்பானியர் யாஹூ டாட் காமை ஹாட்மெயில் போல உருவாக்கியிருந்தார். ஆனால், பில்கேட்சுக்கு ஹாட்மெயில் நிறுவத்தை வாங்கத்தான் அதிக விருப்பம் இருந்தது.

அதனால் ஹாட்மெயிலை நானூறு மில்லியன் டாலருக்கு 1997 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று வாங்கினார். சபீரின் சாதனையைப் பாராட்டி அவரது கம்பெனியை இரு நூறு டாலருக்கு வாங்க நினைத்த டாக் காலிஸ்லே,  சபீருக்கு வெண்கலச் சிலை வைக்க நினைத்து அவரை சந்தித்தார். ஆனால் சபீர் பாட்டியா சொன்னார், ‘’டாக்.. பிளீஸ்.. எங்கள் நாட்டில் நாங்கள் காந்தி மாதிரி பெரிய மனிதர்களுக்குத்தான் சிலை வைப்போம்.. நான் சாதாரண ஆள்.’’ என்றார் தன்னடக்கத்தோடு.. சபீர் பாட்டியா அப்படிச் சொன்ன போது ஹாட்மெயிலை அன்று ஆறு மில்லியன் பேர் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.